சபையில் வந்த பிரச்சனை:
வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான பிலிப்பு அல்ல, பந்தி விசாரணைக்குத் தெரிந்தெடுத்த பிலிப்பு. பிலிப்பு கிரேக்க மொழி பேசும் யூதன். இவன் கிரேக்க நாட்டிலோ எகிப்திலோ பிறந்திருக்கலாம். அக்காலத்திலுள்ள சபைகளில் கிரேக் கர்கள் தங்கள் விதவைகளுக்கு அனுதின தேவைகள் சரியாகச் சந்திக்கப் படவில்லையென்று உணரத் தொடங்கினார்கள். அதனால் கிரேக்கர்கள் எபிரே யருக்கு விரோதமாக முறுமுறுத்தனர். இதில் கிரேக்கரானவர்கள் என்பது கிரேக்கமொழி பேசும் யூதர்களைக் குறிக்கிறது. அவர்களுக்குக் கிரேக்க கலாச் சாரம் உண்டு. ஆனால் எருசலேமிலிருந்த யூதர்கள் அதிகமாக மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றி வந்தனர். அந்தக் காலகட்டத்தில் சபைக்கு வருகிற ஜனங்களின் எண்ணிக்கை அதிகமானதால் பிசாசானவன் பிரிவினை யையும், குழப்பங்களையும் கொண்டுவரத் தொடங்கினான். கிரேக்க விதவை கள் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதினார்கள். அரமேய மொழி பேசிய யூதர்களின் ஆளுகைப் பண்பும், ஒடுக்குதலும் அல்லது கிரேக்க மொழி பேசிய யூதரின் தாழ்வு மனப்பான்மையும் இதற்குக் காரணமாகும். எருசலேமில் கிரே க்க மொழி பேசிய யூதர்கள் சிறுபான்மையினர். எனவே அரமேய மொழி பேசுகிறவர்கள் தங்களை மேன்மையுடையவர்கள் என்று மெச்சுவதும், கிரேக்க மொழி பேசுகிறவர்களைத் தரக்குறைவானவர்கள் எனக் கருதுவதும் அன்றைய ரோமப் பேரரசில் நடந்தது. இந்தப் பிரச்சனை சபைக்குள்ளும் தோற்றுவிக்க முயற்சித்தது.
பந்திவிசாரணைக்குத் தெரிந்தெடுத்த சீஷர்கள்.
கிரேக்கர்களின் பிரச்சனை அப்போஸ்தலர்களின் கவனத்துக்கு கொண்டு வரப் பட்டது. அப்போஸ்தலர்கள் சீஷர்களின் கூட்டத்தை வரவழைத்துப் பேசினார்கள். அப்போஸ்தலர்கள் தங்களுடைய பிரதான நோக்கம் சுவிசேஷத்தை அறிவிப் பதும், வசனத்தைப் போதிப்பதுமாகும். ஜெபிப்பதிலும் சுவிசேஷத்தை அறிவிப் பதிலுமே தவிரத் தாங்கள் பந்தி விசாரணை செய்வது சரியல்ல என்று சீஷர்க ளுக்கு உணர்த்தினர். மேலும் தாங்கள் இதே போன்ற காரியங்களில் கவனம் செலுத்துவோமானால் தங்களுடைய பிரதான நோக்கத்திலிருந்து வழி விலக வேண்டியதாகும் என்றனர். எனவே உங்களுக்குள் ஏழு முக்கியமான தலைவர் களைத் தெரிந்தெடுங்கள். அவர்கள் பரிசுத்த ஆவி நிரம்பினவர்களாகவும், தேவ ஞானம் நிறைந்தவர்களாகவும், எல்லாரிடமும் நற்சாட்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் சொல்லி முடிவெடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பந்திவிசாரிப்பு வேலைக்கு நியமிக்கலாமென்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்ததால் அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பை யும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்த மைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலா வையும் தெரிந்து கொண்டு, அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தி னார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். இவர்களுள் ஸ்தேவானும், பிலிப்புவும் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தனர். ஸ்தேவானும், பிலிப்பும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து வந்தபடியால் தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷர்களின் தொகை எருசலே மில் மிகவும் பெருகிற்று. ஆசாரியரில் அநேகர் விசுவாசத்திற்கு கீழ்ப்படிந் தார்கள். ஸ்தேவானின் மரணத்துக்குப் பின் எருசலேமின் சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்கள் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியா போன்ற பகுதிகளுக்குச் சிதறுண்டு போனார்கள். ஏற்கனவே இயேசு,
அப்போஸ்தலர் 1 : 8 ல் “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”
சமாரியா:
கி. மு 722 ல் அசீரியர்கள் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி பத்து கோத்திரங்களையும் சிதறடித்த போது இஸ்ரவேலின் தலைநகராயிருந்த சமாரியாவுக்குள்ளே புறஜாதியர்களைக் கொண்டுவந்து வைத்தனர். சமாரியா வில் அப்பொழுது கொஞ்சம் மிச்சமிருந்த யூதர்கள் அங்கிருந்த புறஜாதியரு டன் சம்பந்தங் கலந்தனர். அதனால் ஆண்டவருக்கு அருவருப்பான காரியங்க ளைச் செய்தனர். இதனால் தெற்கு ராஜ்ஜியத்திலுள்ள யூதா பெஞ்சமின் கோத் திரத்தார் சமாரியாவிலுள்ள யூதர்களை யூதர்களென்றும் சொல்லாமல், புற ஜாதியர் என்றும் கூறாமல் சமாரியர்கள் என்றழைத்தனர். எனவே யூதர்களைப் பொறுத்தவரை சமாரியர்கள் அருவருக்கத்தக்கவர்கள். எருசலேமிலிருந்து கலி லேயாவுக்கும், கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கும் போகவேண்டுமானால் சமாரியா வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் சமாரியா வழியே செல்லாமல் சுற்றிச் செல்வார்கள். யோவான் நான்காம் அதிகாரத்தில் இயேசு சமாரியாவுக்குச் சென்று ஒரு சமாரிய ஸ்திரீயைச் சந்தித்து சமாரி யர்கள் இயேசுவை ஏற்க வைத்தார். பிலிப்பு சமாரியாவில் அதிக காலம் வாழ்ந்தார்.
பிலிப்புவின் சமாரியா ஊழியமும், சீமோனும்:
அப்போஸ்தலர் 8 : 5 – 8 “ அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்கு பிரசங்கித்தான். பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள். அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.”
இந்தவேளையில் பிலிப்பு செய்த நற்செய்தி ஊழியம் வேதத்தில் கூறப்பட் டுள்ளது. யூதரல்லாதவரையும் சேர்த்துக் கொண்டவர்களில் பிலிப்புவும் ஒருவ ராக இருக்கிறார். இதுவரை சமாரியாவிற்குச் சென்று யாரும் ஊழியம் செய்த தில்லை.பிலிப்புவே அவர்களுக்கிடையே சென்று முதல் அடி எடுத்து வைத்தி ருக்கிறார். பிலிப்பு சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று இயேசு வின் சுவிசேஷத்தை அறிவித்தார்.அசுத்த ஆவிகளை விரட்டினார். பல நோயாளி களையம், திமிர்வாதக்காரர்களையும், சப்பாணிகளையும் குணமாக்கினார். அதனால் அந்தப் பட்டணத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று (அப்போஸ் தலர் 8 : 5, 6, 7). அந்தப் பட்டணத்தில் சீமோன் என்ற மாய வித்தைக்காரன் இருந்தான். அவன் மாயவித்தைகளைச் செய்து தன்னைப் பெரியவனாகக் காட்டி, சமாரியா ஜனங்களைத் தந்திரங்களால் பிரமிக்கப் பண்ணிக் கொண்டிருந்தான். அவனை ஜனங்கள் பெரிதாக மதித்து வந்தார்கள் (9 – 11). அந்த இடத்தில் இயேசுவைக் குறித்தும், இயேசுவின் நாமத்தைக் குறித்தும் பிலிப்பு பிரசங்கம் பண்ணியதை ஜனங்கள் கேட்டார்கள். அநேக சமாரியர்கள் கர்த்தருடைய வசனத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவை விசுவாசித்தார்கள்.
அவர்களுக்கு பிலிப்பு தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்தார் (8 : 12). இவ்வித மாக சமாரிய ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு, தேவ ராஜ்ஜியத்தின் உறுப்பினர் ஆனார்கள். எனினும் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மனந்திரும்பிய பின்னரும் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்ற பின்னரும் அவர்கள் மேல் இறங்க வில்லை. கிறிஸ்து இரண்டு முக்கிய ஆசாரங்களைக் கொடுத்தார். 1.ஞானஸ்நா னம் 2.கர்த்தருடைய பந்தி ஆசரிப்பு. முதல் ஆசாரத்தை தனி நபராகவும், இரண் டா வது ஆசாரத்தை உள்ளூர் சபையாகவும் ஆசாரித்து வர வேண்டும். இயேசு கிறிஸ்து தரும் இரட்சிப்பை ஆவியில் அனுபவித்தவர்கள் வெளிப்படையாக அறிக்கையிடும் அனுபவமாக தண்ணீர் ஞானஸ்நானம் விளங்குகிறது.ஆவியில் இரட்சிக்கப்பட்டவர் ஆத்மாவிலும் அனுதினம் அதைப் பெற்று சரீரத்தில் அதைப் பெறுவோம் என்ற நிச்சயத்துடன் அறிக்கையிட வேண்டும். கிறிஸ்துவுடன் கூட நிகழ்ந்த மரண அடக்க உயிர்ப்பை அடையாளமாகக் காட்டும் ஆசாரமாகவும் அது உள்ளது. மேலும் எளிமையாக எந்த ஆர்ப்பாட்டங்களுமின்றி இந்த ஆசார ங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று இயேசு விரும்பினார். அவைகளைப் பார்த்த சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான். ஜனங்கள் அவனைப் பார்த்துப் பிரமித்தது போக, அவன் பிலிப்புவைப் பார்த்துப் பிரமித்தான் (8 : 13).
அவனுடைய நாட்டம் முழுவதும் பிலிப்பு செய்த அற்புதங்கள், அடையாளங் கள் மேலேயே இருந்தது. சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதலைப் பற்றிக் கேள்விப் பட்ட அப்போஸ்தலர்கள் பேதுருவையும், யோவானையும் அங்கு அனுப்பி னார்கள். பிலிப்புவுக்குப் பரிசுத்த ஆவியை அருளும் வரமில்லை. அங்குள்ள வர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறறார்களே அல்லாமல் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்பதை அறிந்து அவர்களுக் காக ஜெபம் பண்ணி அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் (8 : 15 – 17). இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்த சீஷர்களுக்கு மட்டும்தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் கிடைத்ததென்று அப்போஸ்தலர் புத்தகம் முழுவதும் காணப்படுகிறது. இதைச் சீமோன் கண்டபோது பேதுரு கைகளை வைத்ததால் ஏதோ நடந்த தென்பதைக் கண்டு அதனால் ஈர்க்கப்பட்டார். பரிசுத்த ஆவி என்பது பணத்தி னால் வாங்கக்கூடிய சக்தி என்றெண்ணி அவன் ஆவியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த எண்ணினான். மேலும் பரிசுத்த ஆவியானவர் தனது வாழ்க்கை யைக் ஆட்சி செய்யும் ஒரு நபராகக் கருத்துவதற்குப் பதிலாக தான் விரும்பி யபடி பயன்படுத்தக்கூடிய ஒரு சக்தியாக கருதினான். சீமோன் உண்மையி லேயே தனக்காகப் பரிசுத்த ஆவியைப் பெற விரும்பவில்லை. மாறாகத் தன்னுடைய விருப்பப்படி மற்றவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் வல்லமையை வழங்கும் திறனை விரும்பினார். பணத்தைப் பேதுருவிடம் கொண்டு வந்து தானும் அதைப்போல் யார்மேல் கைகளை வைக்கிறேனோ அவர்களும் இதே போல் பரிசுத்த ஆவியைப் பெறும் அதிகாரத்தைத் தர வேண்டுமென்றான் (8 : 19). இதேபோல் இயேசுவின் சீஷராகிய யாக்கோபும், யோவானும் இயேசுவி டம் தாங்கள் எலியாவைப்போல் வானத்திலிருந்து அக்கினி இறங்கி சமாரி யர்களை அழிக்கக் கேட்டனர் என்று லூக்கா 9 : 54 ல் பார்க்கிறோம். பேதுரு கோபத்தில் அவனுடைய இருதயம் செம்மையாக இல்லையென்றும், தேவனு டைய பணத்தை அவன் பணத்தினால் சம்பாதிக்க வேண்டுமென்று நினைத்த தால், இந்த விஷயத்தில் உனக்குப் பங்கில்லை என்று கூறி, அவனுடைய பணம் அவனோடுகூட நாசமாய்ப் போகட்டும் என்றான் (8 :18 – 20). ஏனெனில் அவன் இன்னும் அக்கிரமக்காரனாகவும், பாவ அடிமைத்தனத்துக்குள்ளும் இருந்தான் (8 : 22, 23).
இதேபோல் இயேசு கடைசியாக சீஷர்களின் கால்களைக் கழுவும் போது பேதுரு “நீர் ஒருக்காலும் தன்னுடைய கால்களைக் கழுவக் கூடாதென்றான்”. இயேசு உடனே “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்” (யோவான் 13 : 8, 9). பெந்தேகோஸ்தே நாளுக்கு முன்னும் பின்னும் கிறிஸ்துவைப் பின்பற்றியவர் கள் உயிர்த்தெழுந்த ஆண்டவர் மீது பக்தியுள்ளவர்களாகவும் (1 : 2 – 14, 2 : 32), இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறவர் களாகவும் (1 :14, 6 : 4), அவர்கள் உலகத்தை விட்டும் பாவத்தை விட்டும் விலகி னவர்களாகவும் (2 : 38 – 40), சோதனைகளுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும் இருந் தார்கள் (2 : 42, 6 : 4). தங்களுடைய வாழ்வில் பாவங்களை விட்டும், அக்கிரம வாழ்க்கையை விட்டும் விலகி, கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படியும் வாழ்க்கை வாழ்ந் தவர்களுக்கு மட்டுமே ஆவியானவர் இறங்கினார் (2 : 4 – 9, 4 : 8, 19 –31, 5 : 29 – 32, 8 : 16,17, 9 : 17,18, 10 : 44 – 46, 19 : 1 – 6) இவ்வாறு பிலிப்புவின் ஊழியத்திற்கு எதிராக இருந்த ஒருவனை தேவன் அதிசயத்தக்க விதத்தில் மாற்றினார். பேதுரு சீமானிடம் அவன் துர்குணத்தை விட்டு விட்டு தேவனை நோக்கி வேண்டிக் கொள் ஒரு வேளை தேவன் மன்னிப்பார் என்றான். அதற்குச் சீமோன் தான் எந்தப் பாவக்கட்டிலும் அகப்படாதபடி தனக்காக வேண்டிக்கொள்ளச் சொன் னான் (8 : 22 – 24). அதன்பின்பு பிலிப்பு சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். பிலிப்புவின் சமாரியா ஊழியம் வெற்றிகரமாக முடிந்ததால், எருசலேமுக்குச் சென்றான்.
பிலிப்புவும் எத்தியோப்பிய மந்திரியும்:
அப்போஸ்தலர் 8 : 26 “பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.”
பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்புவிடம் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற பாதையான வனாந்தரம் வழியாகச் செல் என்கிறார். அது கடினமான பாதையாக இருந்தாலும் எதிர்கேள்வி எதுவும் கேட்காமல் விசுவாசத்துடன் எழுந்து தூதன் கூறிய பாதையை நோக்கிச் சென்றான். இந்த விசுவாசச் செயலால் ஒரு முழுநாடே கிறிஸ்தவ நாடாகிறது. மட்டுமின்றி 2000 ஆண்டுகளாகவே கிறிஸ்தவ நாடாகவே இருந்து கொண்டிருக்கிறது. தேவன் ஒருவரைத் தனக்காகத் தெரிந்து கொள்ளும்போது அதற்கான ஆயத் தம் அனைத்தையும் செய்து முடிக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. பிலிப்பு சென்ற பகுதி பாலைவனப் பகுதியாக இருந் தாலும் அவன் அங்கே சென்றபோது எத்தியோப்பிய மந்திரி ஒருவர் எருசலே மிலிருந்து தன்னுடைய நாட்டிற்குத் தன்னுடைய ரதத்தில் திரும்பிக் கொண்டி ருந்தார். அவன் எத்தியோப்பிய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரி. கந்தாகே என்பது அந்த அரசியின் பட்டமாகும். அவளது பெயர் அமெந்திதெரே என்பதாகும். இதன் பொருள் ராணிமாதா என்பதாகும். இந்த மந்திரி எத்தியோப்பியா நாட்டில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்.
அவர் அந்த நாட்டின் பொக்கிஷ சாலைக்குத் தலைவனுமாயிருந்தான் (8 : 28). ஏத்தியோப்பியாவுக்கும் எருசலேமுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த மந்திரி இஸ்ரவேல் தேசத்தானல்ல. புறஜாதியான். வேத நூல்கள் ஏதாவது அவன் கையில் கிடைத்திருக்கலாம். அதில் இஸ்ரவேல் தேசத்தார் ஆராதிக்கும் தேவன் அவர்களுக்குச் செய்த அற்புதங்களை வாசிக்க வாசிக்க அவனுடைய உள்ளத்தில் அற்புதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். தாங்கள் காலாகால மாய் வணங்கி வந்த தெய்வங்கள் இதேபோல் இல்லையே என்று நினைத் திருப்பான். எனவே அந்தத் தெய்வம் தான் உண்மையான தெய்வம் என்று நினைத்து அதனால் எருசலேம் சென்று அந்தத் தேவனைத் தரிசிக்க வேண்டு மென்ற வாஞ்சை அதிகமானது. ராணியின் உத்தரவு கிடைத்தவுடன் பல நாட் கள் பிரயாணம் பண்ணி எருசலேம் சென்றடைந்தான். ஆனால் சென்றவன் துக்கத்தோடுதான் போயிருக்க வேண்டும். அவனுடைய நோக்கம் ஆலயத் துக்குள் பிரவேசித்து தான் நினைத்தபடியெல்லாம் தொழுதுகொள்ள வேண்டும் என்பதுதான். அவனுடைய ஆசை நிராசையானது. ஏனெனில் தமிழ் வேதாக மத்தில் எழுதப்படவில்லை. ஆங்கில வேதாகமத்தில் அலி என்று கூறப்பட் டுள்ளது. இவனுடைய துக்கத்திற்கு காரணம் என்னவென்றால்
உபாகமம் 23 : 1 ல் “ விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.”
என்றுள்ளது. அந்தக்காலத்தில் ஆலயத்துக்குள் யார் பிரவேசிக்கலாம் யார் பிரவேசிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருப்பார்கள். ஆசாரியர்களுக்குக்கூட அந்தச் சட்டம் உண்டு. ஆசாரியன் ஏதாவது ஒரு பிணத்தைத் தொட்டு விட் டால் 7 நாட்கள் ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது. ஆலயக் காரியங்களில் ஈடுபடவும் கூடாது. பலநாட்கள் பிரயாணம் பண்ணிக் களைத்துப் போய் வந்த வன் சட்டத்தைப் பார்த்து மனம் வருந்தியிருப்பான். அதிகாரம், பதவி, பணம் இருந்தும் என்ன பிரயோஜனம் உள்ளே போகக்கூட அருகதையற்றவனாகி விட்டேனே என்று ஏமாற்றத்துடன் திரும்பிச் வந்து கொண்டிருந்தான். அவனு டைய உள்ளத்தைக் கர்த்தர் கண்டார். அவருடைய ஊழியக்காரன் ஒருவனை அவனோடு பேசுவதற்கு அனுப்புகிறார். தேவனுக்கு எத்தனை கரிசனை பாருங் கள். எங்கிருக்கிறவனை எங்கு அழைத்துக் கொண்டு போகிறார் பாருங்கள். பாலைவனத்திலிருக்கிற ஒரு ஆத்துமாவுக்காக பிலிப்புவை அழைத்துக் கொண்டு போகிறார். பிலிப்பு அந்த இரதத்தோடு ஓடுகிறார். மந்திரி ஏசாயா 53 ம் அதிகாரத்தின் வேத வசனத்தை சத்தமாக வாசித்திருக்க வேண்டும் (8 : 30). அதனால்தான் ஓடிக்கொண்டிருக்கிற பிலிப்புவுக்குக் கேட்டிருக்க முடியும்.
அதனால் ஜீவனுள்ள தேவனைப் பற்றி அறிந்திருந்தார் என்று அறிகிறோம். ஆனால் மனுக்குல மீட்பிற்காக தேவன் அளித்திருந்த இரட்சிப்பின் திட்டத்தை அவர் அறிந்திருக்கவில்லை. மந்திரி பிறநாடுகளில் சுற்றித்திரியும் மந்திரியாக இருந்தபடியால் எபிரேயமொழி, கிரேக்க மொழி இரண்டையும் அறிந்திருக் கலாம். மந்திரி ஆகமத்தைப் படித்துக்கொண்டிருந்தாலும் அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை. உடனே பிலிப்பு அவனிடம் நீ வாசிக்கிற பகுதி உனக்குப் புரிகிறதா என்று கேட்டான். அதற்கு மந்திரி சொன்னால் தானே புரியு மென்றான். அவன் பிலிப்புவை தன்னோடு ரத்தத்தில் உட்காரும்படி வேண்டி னான் (8 : 30,31). அவரது உள்ளம் நற்செய்திக்காக ஆண்டவரால் பதப்பட்டிருந்த படியால் ஏற்றத்தாழ்வுகள், இன வித்தியாசங்கள் எதுவுமே அவர் கண்களுக்குத் தென்படவில்லை. பிலிப்பு அவனிடம் உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்து அப்பொழுது வரை விரிவாகச் சொல்லுகிறான். கிறிஸ்துவைப் பற்றி தெளி வாகச் சொல்லுகிறான். முடி கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல இயேசு பேசாமலிருந்தார் என்றார்.
இரத்தம் சிந்தி மரித்தார் என்றும் அவரைத் தேவன் உயிரோடெழும்பினார். என்ற அத்தனை விஷயங்களையும் சொல்லி முடித்தான். உடனே மந்திரி இயேவையே தன்னுடைய தெய்வமாக ஏற்றுக்கொண்டு அங்கிருக்கிற தண்ணீ ரைப் பார்த்து தான் ஞானஸ்நானம் எடுப்பதற்கு ஏதாவது தடை உண்டா என்று கேட்டான்.உடனே பிலிப்பு “நீர் முழு இருதயத்தோடு விசுவாசித்தால் தடை யில்லை” என்றான். அதற்கு மந்திரி “இயேசுவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்றவுடன் இரத்தத்தை நிறுத்தி பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். மந்திரி தண்ணீரிலிருந்து எழுந்து பார்க்கும்போது பிலிப்பு அங்கு இல்லை. அந்நேரத்தில் பிலிப்பு மறைந்து போகும்படி ஆவியா னவர் செய்கிறார் (8 :. 36 – 39). மந்திரி அதை நினைத்து திகைத்து நிற்காமல், தான் படுகிற வேதனையைப் பார்த்து ஒரு ஊழியக்காரனை இந்த வனாந் தரத்திக்கு அனுப்பியிருக்கிறார் என்று சந்தோஷப் பட்டிருப்பார். இந்த அற்புதம் மந்திரியின் உள்ளத்தில் இன்னும் அதிகமாகக் கிரியை செய்திருக்கும். அவரது விசுவாசமும் பலப்பட்டிருக்கும். அவர் சந்தோ ஷத்துடன் தன்னுடைய நாட்டிற்குப் போனார்.
இந்த நிகழ்ச்சி பிலிப்புவின் செயலினால் ஆயிற்று என்று கூறுவதை விட அவர் விசுவாசத்தோடு கீழ்ப்படிந்ததினால் ஏற்பட்டது என்று கூறலாம். அதன் பின்பு பிலிப்பு ஆசோத்தில் காணப்பட்டார். அங்கிருந்து செசரியாவுக்கு வருகிற வரை அங்குள்ள பட்டணங்களிலெல்லாம் கிறிஸ்துவின் சுவிஷேத்தைப் பிரசங்கித்துக் கொண்டு வந்தார் (8 : 40). பிலிப்பு கடைசி நாட்களில் செசரியா வில் தங்கித் தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவுல் அப்போஸ்தலரும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு வந்த போது அநேக நாட்கள் பிலிப்புவின் வீட்டில் தாங்கினார்கள். அவருக் கிருந்த தீர்க்கதரிசன வரம் பெற்ற 4 பெண்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகவில்லை. லூக்காவும் பிலிப்புவின் வீட்டில் தங்கியி ருந்தார். பிலிப்புவின் காலத்தில் லீதியாவிலிருந்த தெரீஸ் என்ற பட்டணத்தில் பிலிப்பு பேராயராக இருந்து வயது சென்ற பின்னர் மரித்தார். தேவனின் கட்டளைப்படி இனப்பாகு பாடின்றி, புறஜாதியர் மத்தியிலும் நற்செய்தியைப் பரப்புவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் முக்கியமான ஒருவர்தான் இந்த பிலிப்பு.
பிலிப்புவின் நற்குணங்கள்:
பிலிப்பு நல்ல போராட்டத்தைப் போராடி ஓட்டத்தை ஜெயமாக முடித்தார். கடைசி நாட்களில் நாமும் இரட்சிப்பின் சுவிசேஷத்தை ஆவியானவரின் பலத்தோடு சொல்லுவோம். பிலிப்பை பயன்படுத்தின ஆண்டவர் நம்மையும் பயன்படுத்துவார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும்…