கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 : 1– 10 ல் ஆறு முறை உள்ளது. ஆயிரவருஷ அரசாட்சியின் வேறு பெயர்கள்: தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யம் (எபேசியர் 5 : 5), கிறிஸ்துவின் ராஜ்யம் (2 தீமோத்தேயு 4 : 1, மத்தேயு 20 : 21), தேவனுடைய ராஜ்யம் (மாற்கு 14 : 25, லூக்கா 19 : 11), பரலோக ராஜ்யம் (மத்தேயு 4 : 17, 5 : 3), மறுஜென்ம காலம் (மத்தேயு 19 : 28), காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமம் (எபேசியர் 1 : 9) என்பதாகும். கிறிஸ்து மீண்டும் வரும் வரையிலும் 1000 வருஷ அரசாட்சி காணப்படப் போவதில்லை. சாத்தான் இந்த பூமியிலிருந்து அழிக்கப்படும் வரையிலும் 1000 வருட அரசாட்சி ஏற்படப் போவதில்லை. பாவத்தினால் உண்டாகும் சாபம் இந்த பூமியிலிருந்து நீக்கப்படும் வரை 1000 வருஷ அரசாட்சி ஏற்படப் போவதில்லை. வெளிப்படுத்தல் 19ம் அதிகாரம் கிறிஸ்துவின் பகிரங்க வருகையைக் கூறுகிறது. 20ம் அதிகாரம் பகிரங்க வருகைக்குப்பின் நடக்கும் தொடர் சம்பவங்களை விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் நான்கு முக்கிய காரியங்கள் கூறப்பட்டுள்ளன. 1. சாத்தான் கட்டுப்படுதல் (1 – 3), ஆயிரம் வருட அரசாட்சி (4 – 6), சாத்தான் விடுவிக்கப்படுதலும், அவனது வஞ்சகமும் (7 – 10), இறுதியான நியாயத்தீர்ப்பு (10 – 15). இந்த நான்கும் இறுதியான நிகழ்ச்சிகள் என்றாலும், இவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். தேவனுடைய நித்திய ராஜ்யத்தைக் குறித்த எதிர்பார்ப்பு பழைய ஏற்பாட்டு நாட்களிலேயே இருந்தது. இதை, 

தானியேல் 2 : 44 ல் “ பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை;” என்றும்,

தானியேல் 7 : 14 ல் “ அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.” என்றும்,

தானியேல் 7 : 27 ல் “ வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்கு கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.”

இஸ்ரவேல் பாபிலோனின் அடிமைத்தனத்துக்குள் பிரவேசித்து, அநேக ஆண்டு கள் யூதாவில் ராஜாக்கள் இல்லை. எருசலேமில் தேவாலயம் இல்லை. இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டனர். ஆனாலும் தேவன் என்ன கூறினாரென்றால், 

ஆமோஸ் 9 : 12 “ அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.” 

அதின் நிறைவேறுதலே ஆயிரவருஷ அரசாட்சி. காபிரியேல் தூதன் மரியாளிடம்,

லூக்கா 1 : 32, 33 ல் “ அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.” என்றதையும்,

எசேக்கியேல் 34 : 24 ல் “கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.” என்று கூறியதிலிருந்து அறிகிறோம். 

  1. சாத்தான் பாதாளத்தில் தள்ளப்படுதல்:

வெளிப்படுத்தல் 20 : 1, 2, 3 “ ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்”

ஆயிர அரசாட்சிக்கு முன் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த வசனங்கள் கூறுகிறது. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும், பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதை யோவான் பார்க்கிறார். வெளிப்படுத்தல் 9 : 11 ல் ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது பாதாளக்குழியின் திறவுகோலுடன் வந்து வெட்டுக்கிளிகளினால் ஒரு அழிவை உண்டாக்கியதைப் பார்த்தோம். தூதன் முதலில் வலுசர்ப்பத்தைப் பிடிக்கிறான். இரண்டாவதாக தன் கையில் வைத்திருந்த சங்கிலியினால் பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை ஆயிரம் வருஷம் வரை கட்டி வைக்கிறான். இதை,

யூதா 6 “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.” என்றும்,

2 பேதுரு 2 : 4 “ பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி..” என்றும். 

வெளிப்படுத்தல் 12 : 9 “ உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” என்றுமுள்ளது. 

மூன்றாவதாக அதைப் பாதாளத்தில் தள்ளுகிறான். எனவே தேவாதி தேவனும் ராஜாதி ராஜனுமானவர் சாத்தானை சொற்பகாலம் கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், அவனைச் சிறைப்படுத்த ஒரு காலமுண்டு என்பது நம்மெல்லாருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நான்காவதாக அந்தப் பாதாளத்தின் மேல் முத்திரை போடுகிறான். தூதன் ஏன் இவைகளை செய்கிறானென்றால், அவன் பூமியில் ஆயிரம் ஆண்டுகள் ஜனங்களை மோசம் போக்கக் கூடாதென்பதற்காகத் தான். ஏனெனில் சாத்தான் மனித இனத்தை வஞ்சிப்பதில் மிகுந்த திறமையுள்ளவன். வெளிப்படுத்தல் 12 : 9 ல் “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு “ என்றும் 13 : 14 ல் “”தனக்கு கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்குவான்” என்றும் கூறப்பட்டுள்ளது. 1 யோவான் 3 : 8 ல் “பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்” என்றுமுள்ளது. தானியேல் சிங்கத்தின் கெபியில் போட்டபின் அவன் தப்பித்துக்கொள்ளாதபடி கெபியின் மேல் முத்திரை போட்டார்கள் (தானியேல் 6 : 17). கிறிஸ்துவின் மரித்த சரீரத்தைப் பத்திரப்படுத்தும்படியாக அவருடைய கல்லறைக்குப் பிரதான ஆசாரியரும், பரிசேயரும் முத்திரை போட்டதை மத்தேயு 27 : 66 ல் பார்க்கிறோம். 

எல்லா அசுத்த ஆவிகளும் சாத்தானுடன் பாதாளத்தில் தள்ளப்படுமென்று ஏசாயா 24 : 22 ல் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. . சங்கிலியினால் கட்டப்பட்டு பாதாளத்தில் போடப்பட்ட வலுசர்ப்பம் ஆயிர வருஷ முடிவில் கொஞ்சகாலத்துக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்ற தேவ நியமம் இங்கு அறிவிக்கப்படுகிறது. தேவன் ஒருமுறை சாத்தானைத் தள்ளியபின் மீண்டும் ஏன் விடுதலையாக்கப்பட வேண்டும். தேவன் ஒரு திட்டத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த இரகசியம் ஒரு நாளில் விளங்கும். ஆயிரம் ஆண்டுகள் தேவன் சாத்தானைச் செயலிழக்கச் செய்கிறார். சாத்தானின் ஆற்றல் இந்தப் பூமியின் மீது அதிகமாக இருப்பதால் பூமியினின்று சாத்தான் நீக்கப்படுகிறான். பூமி இருளினின்று ஒளிக்குள் செல்லும். அதற்குப் பின் அவனது கிரியைகள் உலகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அதற்குப்பின் ஆயிரம் ஆண்டு அரசாட்சி கிறிஸ்துவின் தலைமையில் பூமியில் ஆரம்பமாகிறது. 

  1. தேவ அரசாட்சியில் தேவனோடிருப்பவர்கள்:

”வெளிப்படுத்தல் 20 : 4 “ அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்”

வெளிப்படுத்தின விசேஷத்தின் நீளமான வசனம் சிங்காசனங்களில் உட்கார்ந் திருக்கிறவர்களை யோவான் பார்க்கிறார். இதில் சிங்காசனங்கள் என்று பன்மையில் கூறப்பட்டுள்ளதால் பரலோகத்தில் பல சிங்காசனங்கள் இருக்க லாமென அறிகிறோம். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. யாருக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று யோவான் கூறப்படவில்லை. 1 கொரிந்தியர் 6 : 2 ன்படி பரிசுத்தவான்கள் நியாயந்தீர்ப்பார்களென்று எடுத்துக் கொள்ளலாம். லூக்கா 22 : 30, மத்தேயு 19 : 28 லிலும், மணவாட்டி சபையின் பிரதிநிதிகளாக சிங்காசனங்களில் வீற்றி ருக்கும் இருபத்து நான்கு மூப்பர்களும் நியாயந்தீர்ப்பார்களென்றும் எடுத்துக் கொள்ளலாம். லூசிபராக உருவாக்கப்பட்டு சாத்தானாக மாறிய கெரூபும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினால் கட்டப்பட்டு இருளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தூதரும் (2 பேதுரு 2 : 4, யூதா 6) இப்பொழுது உலகில் செயல்புரியும் எல்லா அசுத்த ஆவிகளும் நியாயந் தீர்க்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள் (மத்தேயு 25 : 41). இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிறைச் சேதம் பண்ணப்பட்டவர்களும், மிருகத்தையும் சொரூபத்தையும் வணங்கா மலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாதவர்களும், இரத்தசாட்சியாய் மரித்தவர்களும் சிங்காசனத்துக்கு முன்பாக நிற்கிறார்கள். இவர்களும் உயிர்த்து கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். இவர்களுடைய ஆத்துமாக்களை யோவான் காண்பதினால், அவர்கள் தங்களு டைய மகிமையின் சரீரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லையாயிருக்கும். 

  1. 1000 வருடம் இயேசுவோடு அரசாளுகிறவர்கள்:

வெளிப்படுத்தல் 20 : 5, 6 “ மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” 

இங்கே முதலாம் உயிர்த்தெழுதலென்றும், இரண்டாம் மரணம் என்றும் குறிப்பிடுவது, இரண்டு உயிர்த்தெழுதலையும், இரண்டு மரணங்களையும் குறிப்பிடுகிறது. முதலாம் உயிர்த்தெழுதல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலோடு ஆரம்பமாகிறது. இதுவே நீதிமான்கள் உயிர்த்தெழுதல் என்றழைக்கப்படுகிறது (லூக்கா 14 : 14, அப்போஸ்தலர் 24 : 15). உபத்திரவ காலத்திற்கு முன்பு மணவாட்டி சபை கிறிஸ்துவின் இரகசிய வருகையில் தேவனோடிருப்பர் (1 தெசலோனிக்கேயர் 4 : 17, 18). பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் உபத்திரவ காலத்தின் மத்திய பகுதியில் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில் பங்குகொள்ள தேவனோடிருப்பர் (வெளிப்படுத்தல் 19 :9, சங்கீதம் 50 : 4,5, தானியேல் 12 : 1, 2). உபத்திரவ காலத்து இரத்த சாட்சிகளின் ஆத்துமாவைத் தான் பலிபீடத்தின் கீழ் யோவான் காண்கிறார் (வெளிப்படுத்தல் 6 : 9 – 11). 

இந்த ஆட்சியின் பிரஜைகளாக உபத்திரவ காலத்தில் உண்மையாயிருந் தவர்கள், கர்த்தரின் வருகை மட்டும் ஜீவித்தவர்கள் ஆயிரம் வருஷ அரசாட் சியில் பிறந்த பிள்ளைகள் ஆகியோரடங்குவர் (14 : 12, 18 : 4, ஏசாயா 65 : 20, – 23). கிறிஸ்துவுடன் வாழ்பவர்கள் எல்லா தேசத்துக்கும் மேலாயிருந்து இஸ்ர வேலையும், மற்ற நாடுகளையும் ஆளுவார்கள் (வெளிப்படுத்தல் 3 : 21, 5 : 10, 20 : 6, மத்தேயு 19 : 28). ஆயிர வருஷ அரசாட்சியில் ஆளுகை செய்யும்படியாக இயேசுவின் பகிரங்க வருகைக்கு சற்றுமுன் அல்லது இரகசிய வருகையின் போது இவர்கள் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள் (வெளிப்படுத்தல் 20 : 4). முதலாவது உயிர்த்தெழுதலில் கடைசியாகப் பங்கு பெறுகிறவர்கள் இவர்கள்தான். இயேசு வைப் பற்றிய சாட்சியில்லாதவர்கள், வேத வசனத்தை ஏற்றுக் கொள்ளாதவர் கள், மிருகத்தையும், அதன் சொரூபத்தையும் வணங்குகிறவர்கள், அதின் முத்திரையைத் தரித்துக் கொண்டவர்கள், மிருகத்தைத் தேவனாக ஏற்றுக் கொண்ட அவனுடைய விசுவாசிகள் ஆயிரம் ஆண்டு முடிவது வரை உயிரடைய மாட்டார்கள். 

இரட்சிக்கப் படாதவர்கள் இவ்வாட்சியில் காணப்படமாட்டார்கள். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெற்ற அனைவரும் பாக்கியவான்களாகவும், பரிசுத்தவானுமாயிருப்பார்கள். அதற்குக் காரணம் இதில் பங்குபெறுகிறவர்கள் இரண்டாவது மரணமாகிய அக்கினிக்கடலில் . தள்ளப்படுவதில்லை. மேலும் அவர்கள் தேவனுடைய குமாரனாகவும், கிறிஸ் துவைப் பற்றிய சாட்சியையும் உடையவர்களாயிருப்பார்கள் (வெளிப்படுத்தல் 21 : 7, 20 : 4). இரண்டாவது உயிர்த்தெழுதலென்பது ஆயிரம்வருட அரசாட்சிக் குப் பின் கிறிஸ்துவை ஏற்காத துன்மார்க்கர் நித்திய தண்டனைக்கென உயிர்த்தெழுவதைக் குறிக்கிறது. முதலாம் மரணம் என்பது அனைவருக்கும் உண்டாகும் சரீரப்பிரகாரமான மரணமாகும். இரண்டாம் மரணமென்பது அக்கினிக்கடலிலே தள்ளப்படும் நித்திய மரணமாகும். 

வெளிப்படுத்தல் 20 : 14 ல் “அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.” 

ஒரு மனிதனுடைய ஆத்துமா நித்திய நித்தியமாக மீண்டும் சேரக்கூடாத முறையில் தேவனை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையே ஆவிக்குரிய மரணம். வெளிப்படுத்தல் 2 : 11 “ஜெயங்கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை” என்றுள்ளது. கிறிஸ்துவுக்கு முன்பாக அவர்கள் ஆசாரியாராயிருந்து அவரோடுகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். ஆபிரகாம் தன் குடும்பத்திலே ஆசாரியனாயிருந்தான். லேவி ஆசாரிய கோத்திரமாக ஆரோன் குடும்பத்தில் பிரதான ஆசாரியனாயிருந்தான். இந்தப் பூமியில் கிறிஸ்துவின் ஆட்சியில் இஸ்ரவேல் தேசத்தார் யாவரும் ஆசாரியர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் கிறிஸ்துவுக்கு முன்பாக ஆசாரியர்களாயிருந்து அவரோடுகூட ஆயிரவருஷம் அரசாளுவார்கள். 

  1. சாத்தான் காவலிலிருந்து விடுதலை:

வெளிப்படுத்தல் 20 : 7, 8 “அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.”

அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்போது சாத்தான் காவலிலிருந்து விடுதலை யாகிறான். ஏன் விடுதலையாக்கப்படுகிறான் என்று சொல்லப்படவில்லை. ஆயிரவருஷ அரசாட்சிக்கு முன்பு கோகு மற்றும் மாகோகு தேசங்கள் (ரஷ்யா) எருசலேமுக்கு எதிராக யுத்தம் செய்த நிகழ்ச்சி எசேக்கியேல் 38, 39 அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் கோகு மாகோகு என்பது தேவனுக்கு விரோதமாகச் செயல்படும் பொதுவான நாடுகளைக் குறிக்கும். விடுதலை பெற்ற சாத்தான், தேவனுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி உயர்த்துவான். ஆயிரம் ஆண்டுகள் அவனுக்குள் எந்த மனமாற்றமும் உருவாகவில்லை. அப்போது சாத்தான் ஒரு பெரிய படையுடன் தேவனுடன் யுத்தம் செய்யும்படியாக எருசலேமுக்கு வருகிறான். அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாக இருக்கும். ஆயிரம் வருட அரசாட்சியின் நாட்களில் சாதாரண மக்கள் இருப்பார்கள். இவர்கள் கடைசி வரை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறாதவர்களாகவே இருந்தாலும் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள். ஆயிரவருட அரசாட்சியின் போது இருக்கும் மக்களனைவரும் இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை பூரணமாக ஏற்றுக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாத்தானின் வஞ்சனையில் அகப்பட்டு, அவனது பொய்யை நம்பி தேவனுக்கு விரோதமாக யுத்தம் செய்யத் துணிவார்கள். சாத்தான் விடுவிக்கப்பட்டதும் திரள் கூட்டமான ஜனங்கள் சாத்தானிடம் சென்றுவிடுவர். இதைத்தான்,

வெளிப்படுத்தல் 16 : 14 “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமை யுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.”

இதுவே மனிதனுடைய கடைசி போராட்டமாயிருக்கும். இது சாத்தான் செய்யும் கடைசி யுத்தமாயிருக்கும். அதன் விளைவாக அக்கினிக்கடலில் தள்ளப்படுவான். ஆனால் அவர்களுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு முழுவதுமான அழிவாயிருக்கும். 

  1. சாத்தானின் சேனை அக்கினியால் பட்சிக்கப்படல்:

வெளிப்படுத்தல் 20 : 9, 10 “ அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.”

சாத்தானின் சேனை திரளானதென்பதால், பூமியெங்கும் பரவியிருப்பதாக இதில் சொல்லப்பட்டிருக்கிறது. சாத்தான் இன்று நரகத்திலில்லை. அது மட்டுமல்லாமல் வானமண்டலத்தில் அதிகாரம் பெற்றவனாகவும், இந்த உலகத்தை பெருமளவுக்குத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற வனாகவும் இருக்கிறான். மகா உபத்திரவ காலத்திலும் முழு அதிகாரமு டையவனாகக் காணப்படுவான். ஆயிரம் வருஷ அரசாட்சியின்போது எருசலேம் நகரம் உலகின் தலைநகரமாக மகிமையோடு விளங்கும் (வெளிப்படுத்தல் 21 : 10 – 22 : 2). இந்த வசனத்தில் எருசலேம் பரிசுத்தவான்களுடைய பாளையம் என்றும், பிரியமான நகரமென்றும் அழைக்கப்படுகிறது {சங்கீதம் 78 : 68, 87 : 2). அர்மகெதோன் யுத்தம் இயேசு கிறிஸ்துவினுடையதென்றால், ஆயிரவருஷ ஆட்சியின் முடிவில் நடக்கும், இந்த உலகத்தின் கடைசி யுத்தம் பிதாவாகிய தேவனுடையது. பிதாவானவர் பட்சிக்கிற அக்கினியாயிருப்பதினால் (எபிரேயர் 12 : 29) கடற்கரை மணலத்தனையான சாத்தானின் சேனையை வானத்திலிருந்து அக்கினியை இறக்கி பட்சித்துப் போடுவார்.

உபத்திரவ காலத்தில் மரணத்துக்குத் தப்பித்துக் கொண்டதன் விளைவாக சரீரத்தோடு ஆயிரவருஷ ஆட்சிக்குள் பிரவேசித்தவர்கள், தங்கள் சந்ததி யோடு அக்கினிக்குள் பிரவேசித்தவர்களாய் பட்சிக்கப்படுகிறார்கள். அங்கு யுத்தம் எதுவும் நடந்ததாகச் சொல்லப்படவில்லை. அந்திகிறிஸ்துவும் கள்ளத் தீர்க்கதரிசியும் நெருப்புக்கடலில் தள்ளப்பட்டு 1000 ஆண்டுகளாகியும் அழியாமல் உயிரோடு இருப்பது போன்று, இதில் தள்ளப்படும் யாவரும் (வெளிப்படுத்தல் 20 : 10, 14, 15, 21 : 8) அழிந்து போகாமல் என்றென்றைக்கும் இதில் வேதனையுறுவார்கள். மனிதர்களை மோசம் போக்கினவன் பிசாசா னவன் என்று மீண்டும் ஒரு முறை இங்கு கூறப்பட்டுள்ளது. அவனுடைய சேனை பட்சிக்கப் பட்டாயிற்று. சாத்தானையோ அக்கினி பட்சிக்கவில்லை. மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் தள்ளப்பட்ட (வெளிப்படுத்தல் 19 : 20) அதே அக்கினிக் கடலில் சாத்தான் தள்ளப்படுகிறான். ஆயிரம் வருஷங்கள் தனித்து பாதாளச் சிறையிலிருந்தவன், இனி தன்னுடைய தளபதிகளோடு இரவும், பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப் படுவான். நரக வேதனை நித்தியமானது என்று இங்கு மீண்டும் வலியுறுத்தப் படுகிறது. இதைத்தான் இயேசு, 

மத்தேயு 25 : 41 ல் “ …….சபிக்கப்பட்டவர்களே பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி” 

மத்தேயு 8 : 12 “ ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” 

மத்தேயு 13 : 42 “மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”

மாற்கு 9 : 44 “நரகத்தில் வர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.” 

என்றும் இயேசு கூறியுள்ளார். இவைகளிலிருந்து நரகம் என்பதைக் குறிக்க அக்கினி என்பதே அடையாளமாகும். ஒரு பாவியும் உலகத்தில் இல்லாத நிலை இப்போதுதான் உருவாகிறது. ஆதியாகமம் 3 : 15 ல் “அவர் உன் தலையை நசுக்குவார்” என்று சொல்லப்பட்ட முதல் தீர்க்கதரிசனம் இங்கே நிறைவேறுகிறது. அதனால்தான் பேதுரு, 

1 பேதுரு 5 : 8 “ தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” என்கிறார். 

அதன்பின் தேவதூதனால் கட்டிப் பாதாளத்தில் அடைக்கப்பட்டான். முடிவில் நிரந்தரமான அக்கினிக் கடலில் தள்ளப்பட்டான். இனி அவன் எழுந்து வந்து ஜனங்களை மோசம் போக்கவோ, தேவனோடு போர் செய்யவோ முடியாது. அவனது முடிவு அக்கினிக்கடலுக்குள் இருப்பதால் அதற்குள் செல்லும் வரையிலும் அவன் தன் தீய கிரியைகளைச் செய்துகொண்டே இருப்பான். ஏதேன் தோட்டத்திலே மனிதன் முதல்முறையாக தேவனுக்கு விரோதமாகச் செயல்பட்டதுபோல கடைசி எதிர்ப்பும் காணப்படும். இதில் கடைசி நியாயத்தீர்ப்பு கூறப்படுகிறது. 

  1. ஆலயம்:

உபத்திரவ காலத்தில் அந்திகிறிஸ்துவின் உதவியோடு கட்டப்பட்ட தேவா லயம் அவன் தன் சொரூபத்தை வைத்துத் தீட்டாக்கியதினால் இயேசுவின் வருகையின் போது அந்த ஆலயம் அழிக்கப்படும் (2 தெசலோனிக்கேயர் 2 : 4, வெளிப்படுத்தல் 11 : 1,2) எனவே ஆயிரவருஷ அரசாட்சியின் போது கிறிஸ்துவே தன்னுடைய ஆலயத்தைக் கட்டி அதில் தான் மகிமை பொருந்தி னவராய் வீற்றிருந்து ஆளுகை செய்வார் என்று, 

சகரியா 6 : 12, 13 ல் “அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.”

என்று பார்க்கிறோம். அதன் விளக்கங்களை எசேக்கியேல் 40 : 1 – 45 : 14 ஆகிய வசனங்களில் அறியலாம். அந்த ஆலயத்திற்குள் விருத்தசேதனமில்லாத மாம்சமுள்ள அன்னியபுத்திரன் ஒருவரும் (எசேக்கியேல் 44 : 9) அனுமதிக்கப் படுவதில்லை. லேவி கோத்திரத்தார் (2சாமுவேல் 8 : 17) ஆசாரிய ஊழியம் செய்வார்கள் (எசேக்கியேல் 45 : 19). போஜனபலி, தகனபலி, பானபலி (எசேக்கியேல் 45 : 17), பாவநிவாரணபலி (எசேக்கியேல் 44 : 29), குற்ற நிவாரணபலி (எசேக்கியேல் 46 : 20), ஸ்தோத்திரப்பலி (எசேக்கியேல் 43 : 27) ஆகிய அத்தனை பலிகளும் அந்நாட்களில் ஆலயத்தில் செலுத்தப்படும். மேலும் பஸ்கா பண்டிகை (எசேக்கியேல் 45 : 21), முதற்கனிகளின் பண்டிகை (எசேக்கியேல் 44 : 30), மாதப்பிறப்புகளையும், ஓய்வுநாட்களையும் (எசேக்கியேல் 45 : 17) யூதர்கள் அனுசரிப்பார்கள். ஏனென்றால் இந்த நியமங்களை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேலரோடு தேவன் ஏற்படுத்தியிருந்தார். ஆயிர வருஷ அரசாட்சியின்போது எருசலேம் உலகத்தின் தலைநகரமாக விளங்கும் (சங்கீதம் 48 : 8, ஏசாயா 2 : 2 – 4, 11 : 11 – 12 : 6, எரேமியா 17 : 25, மீகா 4 : 7). 

  1. ஆயிரம் வருஷ அரசாட்சியின் போது எவைகள் இருக்கும்:

ஓநாய் ஆட்டுக்குட்டிகளோடு தங்கும். புலியானது வெள்ளாட்டுக் குட்டியோடு படுத்துக் கொள்ளும். கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் சேர்ந்தி ருக்கும். பசுவும் கரடியும் சேர்ந்து மேயும். சிங்கமானது வைக்கோல் தின்னும். சிறு குழந்தைகள் விரியன்பாம்புகளுடன் விளையாடும். பூமியானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஏசாயா 11 : 6 – 9). பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள். ஜாதிக்கு ஜாதி கலகம் உண்டாவதில்லை (எசாயா 2 : 4, மீகா 4 : 3). ஜனங்கள் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் காணப்படுவர் (ஏசாயா 35 : , 10). மனிதர்களின் கைகளின் கிரியைகள் தேவனால் ஆசீர்வதிக்கப்படும். எல்லாரும் நீடிய ஆயுசுள்ளவர்களாக இருப்பார்கள் (ஏசாயா 65 : 20, 22). குருடர், செவிடர், முடவர் இருக்கமாட்டார்கள். சூரியன் சந்திரனுடைய பிரகாசம் ஏழு மடங்கு கூடுதலாக இருக்கும் (ஏசாயா 35 : 5,6, 30 : 26). ஒரு சுத்தமான பாஷை உண்டாயிருக்கும் ( செப்பனியா 3 : 9). எருசலேம் தேவாலயம் கர்த்தருடைய மகிமையால் நிரப்பப்பட்டிருக்கும் (ஏசாயா 4 : 5). ஆவியானவருடைய செயல்பாடுகளும் அந்த நாட்களிலிருக்கும் (ஏசாயா 32 : 15, எசேக்கியேல் 36 : 25 – 27, யோவேல் 2 : 28 – 32). எருசலேம் தேவாலயம் மகிமையால் நிரப்பப்பட்டிருக்கும் (ஏசாயா 4 : 4 – 6, எசேக்கியேல் 43 : 5). அதனால் ஜனங்கள்,

ஏசாயா 2 : 3 ‘திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.” என்பார்கள். 

  1. 1000 வருஷ ஆட்சியில் பிரவேசிக்க முடியாதவர்கள்:
  2. ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்காதவர்கள் பிரவேசிக்க முடியாது (யோவான் 3 : 3).
  3. பொல்லாதவர்கள் பிரவேசிக்க முடியாது (மத்தேயு 13 : 49, 50).
  4. பிரயோஜனமற்ற ஊழியக்காரர்கள் பிரவேசிக்க முடியாது (மத்தேயு 25 : 30)
  5. உபத்திரவ காலத்தில் இஸ்ரவேலருக்கு உதவி செய்யாத வெள்ளாடுகள் பிரவேசிக்க முடியாது (மத்தேயு 25 : 32 – 46).
  6. மிருகத்தையும், அதின் முத்திரையையும், அதின் சொரூபத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் பிரவேசிக்க முடியாது (வெளிப்படுத்தல் 14 : 9 – 11).
  7. முடிவுரை:

 கிறிஸ்துவும் பரிசுத்தவான்களும் ஆட்சி செய்வதற்கு முடிவில்லை. ஆனால் ஆட்சியின் ஒரு பகுதி ஆயிரம் ஆண்டுகளில் நிறைவுபெறும். ஆயிரம் ஆண்டு களாக பாதாளத்தில் சிறை வைக்கப்பட்ட சாத்தான் விடுவிக்கப்படுவான் (வெளிப்படுத்தல் 20 : 1 – 3). சிறிது காலத்திற்குள் அவன் உலகமெங்குமுள்ள அநேக மக்களைத் தன்வசப்படுத்தி புரட்சி செய்வான். தேவனால் அனுப்பப் படும் நெருப்புக்கு அவர்கள் இரையாவார்கள். மேலும் அக்கினிக்கடல் என்ற ழைக்கப்படும் நரகத்திற்கு சாத்தான் தள்ளப்படுவான். கிறிஸ்து நீதியுடன் ஆயிரம் ஆண்டு அரசாளுவார். அந்த அரசாட்சி நீதியும், நேர்மையும், உண்மையும், ஒழுங்குமானதாக நடைபெறும். அப்போது சிருஷ்டிகளின் சாபம் நீக்கப்படும் (ரோமர் 8 : 19 – 22). அவருடையவர்கள் அவரோடு ஆளுவார்கள் (ரோமர் 8 : 18, 2தீமோத்தேயு 2 : 12, 1 பேதுரு 4 : 2, 12, 13). அதன் இறுதியில் சாத்தான் கட்டவிழ்க்கப்படுவான். பூமியின் நாலாபக்கமும் சென்ற மக்களைக் கூட்டிவருவான். கிறிஸ்துவோ அவர்களை ஜெயித்து நரகத்தில் தள்ளுவார். தேவன் பூமியில் ஆயிரவருஷ அரசாட்சியை ஏன் ஸ்தாபிக்கிறாரென்றால் இந்த உலகம் தன்னுடைய குமாரனை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து சிலுவையில் அறைந்து கொன்றதோ, அதே உலகத்தை தன்னுடைய குமாரனின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது பிதாவிடைய தீர்மானம் ( சங்கீதம் 2 : 1, 1 கொரிந்தியர் 15 : 24 – 28). 

எபேசியர் 1 : 10 ல் “ காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவை களுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,” 

இதுவே பிதாவினுடைய தீர்மானம். மேசியாவாகிய கிறிஸ்துவின் உலக ராஜாங்கத்தைக் குறித்த பல வேதவாசனைகள் (தானியேல் 9 : 24, அப்போஸ் தலர் 3 : 20, 21, 1பேதுரு 1 : 10 – 13) ஆயிர வருஷ அரசாட்சியின் போதுதான் நிறைவேறுகின்றன (1பேதுரு 2 : 9, வெளிப்படுத்தல் 2 : 26, 5 : 10). மேலும் தேவன் ஆபிரகாமோடும் (ஆதியாகமம் 12, 13, 15, 17), ஈசாக்கோடும் (ஆதியாகாமம் 6), தாவீதோடும் (2 சாமுவேல் 7 ) இஸ்ரவேலின் மேன்மையை குறித்துச் செய்துகொண்ட நித்திய உடன்படிக்கைகள் ஆயிரவருஷ அரசாட்சியுடன் தான் பூரணப்படுகின்றன (உபாகமாம் 8, ஏசாயா 11 : 11, 12, அப்போஸ்தலர் 15 : 13 – 17). 

உலகம் முழுவதும் சமாதானம், பாதுகாப்பு, செழிப்பு, நீதி இவைகள் நிறைந்திருக்கும் (ஏசாயா 2 : 2 – 4, மீகா 4 : 4). ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில் ஆட்சியை இயேசு பிதாவிடம் ஒப்படைப்பார் (1 கொரிந்தியர் 15 : 24). அதன்பின்பு இறுதியும் நித்தியமுமான தேவனுடையதும் ஆவியானவரு டையதுமான இராஜ்ஜியம் ஆரம்பமாகும். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago

இயேசுவின் இரகசிய வருகை

இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும்…

1 month ago