மாற்கு அதிகாரம் 1 – 8 Quiz கேள்வி பதில்

  1. வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருந்தவன் யார்?
  2. நாசரேத்தூர் எத்தேசத்தில் இருந்தது?
  3. இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியவர் யார்?
  4. இயேசு வனாந்தரத்தில் எவைகளின் நடுவே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்?
  5. மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று இயேசு யாரிடம் கூறினார்?
  6. யார் யார் படவிலே வலைகளைப் பழுது பார்த்து கொண்டிருந்த போது இயேசு அவர்களைக் கண்டு அழைத்தார்?
  7. இயேசு கிறிஸ்துவின் கீர்த்தி எந்த நாடெங்கும் பிரசித்தமாயிற்று?
  8. இயேசுவை அறிந்திருந்தவை எவை?
  9. இயேசு எந்த இடங்களில் தங்கியிருந்தார்?
  10. நாலுபேர் யாரை சுமந்து கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்?
  11. இயேசு எதைக் கண்டு திமிர்வாதக்காரனுக்கு சுகம் கொடுத்தார்?
  12. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன் யார்?
  13. தாவீது தெய்வசமுகத்து அப்பங்களை புசித்த போது இருந்த பிரதான ஆசாரியன் யார்?
  14. பரிசேயர் இயேசுவை கொலை செய்ய யாரோடே ஆலோசனைப் பண்ணினார்கள்?
  15. யாக்கோபு யோவானுக்கு இயேசு என்ன பெயரிட்டார்?
  16. பொவெனர்கேஸ் என்பதன் அர்த்தம் என்ன?
  17. இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுகிறவன் யார்?
  18. தண்டின் மேல் வைக்கப்பட வேண்டியது எது?
  19. கடலுக்கு அக்கரையிலுள்ள நாடு யாருடையது?
  20. கதரேனர் நாட்டில் இயேசுவுக்கு எதிராக வந்தவன் யார்?
  21. மலையருகே மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
  22. இயேசுவோடே கூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க வேண்டிக்கொண்டவன் யார்?
  23. இயேசுவைக் கண்டவுடன் அவர் பாதத்தில் விழுந்தவன் யார்?
  24. இயேசுவுக்கு முன்பாக விழுந்து உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னவள் யார்?
  25. பிள்ளையின் கையைப்பிடித்து இயேசு சொன்னது என்ன?
  26. யவீருவின் குமாரத்தியின் வயது என்ன?
  27. தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலும் கனவீனமடைபவன் யார்?
  28. யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்ததாக இயேசுவைக் குறித்து கூறியவன் யார்?
  29. தன் ஜென்ம நாளில் விருந்து பண்ணியவன் யார்?
  30. மனுஷருடைய கற்பனைகளை உமதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொல்லிய தீர்க்கதரிசி யார்?
  31. தகப்பனுக்கும் தாய்க்கும் செய்ய வேண்டிய உதவியை எதைக் கொடுப்பதின் மூலம் முடிந்தது என்று எண்ணினார்கள்?
  32. எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன?
  33. பெத்சாயிதா ஊரில் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டவன் யார்?
  34. எனக்குப் பின்னாகப் போ சாத்தானே யார் யாரிடம் கூறியது?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

மாற்கு அதிகாரம் 9 – 16 Quiz கேள்வி பதில்

  1. யாரைக் குறித்து எழுதியிருக்கிறபிரகாரம் அவனுக்கு செய்தார்கள்?
  2. யாருக்கு எல்லாம் கூடும் என்று இயேசு கூறினார்?
  3. இயேசு யாரை எடுத்து சீஷர்கள் நடுவிலே நிறுத்தினார்?
  4. எந்த பலியும் எதினால் உப்பிடப்படும்?
  5. எந்த மனுஷனும் எதினால் உப்பிடப்படுவான்?
  6. ஒருவரோடொருவர் எது உள்ளவர்களாயிருக்க வேண்டும்?
  7. யாரை இயேசு தொடும்படிக்கு அவரிடம் கொண்டு வந்தார்கள்?
  8. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுக்குரியது?
  9. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கும்?
  10. பர்திமேயு யாருடைய குமாரன்?
  11. இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் கூப்பிட்டவன் யார்?
  12. இருவழிச்சந்தியில் கட்டப்பட்டிருந்தது எது?
  13. இயேசு அத்திமரத்தை சபித்ததை நினைவு கூர்ந்தவர் யார்?
  14. எல்லாரும் யாரை மெய்யான தீர்க்கதரிசி என்று எண்ணினார்கள்?
  15. இயேசுவை பேச்சில் ஆகப்படுத்தும்படி அவரிடத்தில் அனுப்பப்பட்டவர்கள் யார்?
  16. தன் வறுமையிலிருந்து காணிக்கை போட்டவள் யார்?
  17. யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கும் ஆனால் உடனே வராதது எது?
  18. சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டியது என்ன?
  19. இரட்சிக்கப்படுபவன் யார் என்று இயேசு கூறினார்?
  20. அந்த நாளையும் நாழிகையையும் அறிந்திருக்கிறவர் யார்?
  21. இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தியிருந்தார்?
  22. இயேசு சீமோன் வீட்டில் பந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ கொண்டு வந்தது என்ன?
  23. யார் உங்களிடத்தில் எப்போதும் இருக்கிறார்கள் என்று இயேசு கூறினார்?
  24. எது தம்மை விட்டு நீங்கிப்போகக் கூடுமானால் நீங்கட்டும் என்று இயேசு கூறினார்?
  25. எதற்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்?
  26. எது நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்று இயேசு கூறினார்?
  27. தூரத்தில் இயேசுவுக்கு பின் சென்றவன் யார்?
  28. இயேசுவின் சிலுவையை சுமக்கும் படி பலவந்தம் பண்ணப்பட்டவன் யார்?
  29. சீமோன் எந்த ஊரைச் சேர்ந்தவன் ?
  30. சீமோனின் குமாரர் பெயர்கள் என்ன?
  31. இயேசுவை சிலுவையில் அறைந்தது எத்தனை மணி வேளையாயிருந்தது?
  32. இயேசு யாரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் நிறைவேறினது?
  33. கனம்பொருந்திய ஆலோசனைக்காரன் யார்?
  34. யோசேப்பு எதுவரக்காத்திருந்தான்?
  35. இயேசு எழுந்திருந்த பின் முதல் முதல் யாருக்கு தரிசனமானார்?
  36. எதை விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago