இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக இறங்கினார். அதுவரை பயந்தவர்களாக இருந்த அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் பலத்தினால் தைரியத்தோடு சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள். அதிலும் குறிப்பாக பேதுருவின் பிரசாங்கத்தைக் கேட்டு 3000, 5000 பேரென்று சபையில் சேர்க்கப்பட்டனர். இதனால் யூதர்களுக்கு மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அதனால் சபைகளையும் அப்போஸ்தலர்களையும் துன்பப்படுத்தத் தொடங்கினர். அந்த நாட்களில் யூதர்களுக்கென்று தனியாக ஜெபஆலயங்கள் இருந்தது. அவர்களுக்கு நிர்வாகரீதியான அமைப்புகளும், தலைவர்களும் இருந்தனர். ஆனால் புதிதாகத் தோன்றின இவர்களுக்கு சபைகளோ அமைப்புகளோ இல்லாததால் வீடுகளில் ஆங்காங்கே ஆராதிக்கவும், ஜெபிக்கவும் தொடங்கினர். யூதர்களால் அவர்களுக்கு வந்த பிரச்சனை ஒருபுறமிருக்க சபைக்கு உள்ளிருந்து பிரச்சனைகள் எழும்ப ஆரம்பித்தது. 

சபைக்குள் வந்த பிரச்சனை:

அப்போஸ்தலர் 6 : 1, 2, 3 “அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

கிரேக்கர்கள் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதினர். இது இரு காரணங்க ளால் நிகழ்ந்திருக்கலாம். அரமேய மொழி பேசும் யூதரின் ஆளுகைப் பண்பும், ஒடுக்குதலும் அல்லது கிரேக்க மொழி பேசிய யூதரின் தாழ்வு மனப்பான்மை யுமாகும். கிரேக்க மொழி பேசுகிற யூதர்கள் சிறுபான்மையினர். எனவே சிறுபா ன்மை, பெரும்பான்மை என்ற சிக்கலாகவும் இருக்கலாம். அரமேய மொழி பேசும் யூதர்கள் தங்களை மேன்மையுடையவர்களாகக் கருதுவதும், கிரேக்க மொழி பேசும் யூதர்களைத் தரக்குறைவாக நடத்துவதும் அன்றைய ரோமப் பேரரசில் இயல்பாக இருந்தது. கிரேக்க விதவைகளை தங்கள் அன்றாட விசாரணையில், யூத விதவைகளுக்கு உணவு பரிமாறுவதைப் போலத் தங்க ளுக்குச் செய்யப்படவில்லை என்று குறை கூறினார்கள். அதாவது பந்தி விசா ரிப்பில் சரியாக விசாரிக்கப்படவில்லையென்பது தான் குற்றமாகும். கிரேக் கர்களின் பிரச்சனை அப்போஸ்தலர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப் பட்டது. அப்போஸ்தலர்கள் சீஷர்களின் கூட்டத்தை வரவழைத்துப் பேசினார் கள். அப்போஸ்தலர்கள் தங்களுடைய பிரதான நோக்கம் சுவிசேஷத்தை அறிவி ப் பதும், வசனத்தைப் போதிப்பதுமாகும். ஜெபிப்பதிலும் சுவிசேஷத்தை அறிவிப் பதிலுமே தவிரத் தாங்கள் பந்தி விசாரணை செய்வது சரியல்ல என்று சீஷர் களுக்கு உணர்த்தினர். மேலும் தாங்கள் இதே போன்ற காரியங்களில் கவனம் செலுத்துவோமானால், தங்களுடைய பிரதான நோக்கத்திலிருந்து வழி விலக வேண்டியதாகும் என்றனர். எனவே உங்களுக்குள் ஏழு முக்கியமான தலைவர் களைத் தெரிந்தெடுங்கள். அவர்கள் பரிசுத்த ஆவி நிரம்பினவர்களாகவும், தேவ ஞானம் நிறைந்தவர்களாகவும், எல்லாரிடமும் நற்சாட்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் சொல்லி முடிவெடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பந்திவிசாரிப்பு வேலைக்கு நியமிக்கலாமென்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் நல்ல யோசனையாகப் பட்டது. 

உபாகமம் 1 : 13 ல் “நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.”

எனவே சீஷர்களுக்குள் பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோ ரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தி யோகியா பட்டணத்தானாகிய நிக்கொலா ஆகிய ஏழு பேரைத் தெரிந்து கொண்ட னர். இவர்களுக்குள் ஆவிக்குரிய செயல்பாடு அதிகமாகவும், ஞானமுள்ளவர் களாகவும் இருந்ததால்தான் ஆவிக்குரிய சத்தியங்களை ஜனங்களுக்கு எடுத் துரைத்தனர்.. மேலும் சபையாரிடம் நற்சாட்சி பெற்றிருந்தால்தான் சபையார் அவர்களை நம்பினார்கள். அப்போஸ்தலர் 16 : 2 ல் தீமோத்தேயு என்னப்பட்ட சீஷன் லீஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான் என்று பார்க்கிறோம். அப்போஸ்தலர்கள் அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபம் பண்ணினார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பதவிக்காகப் பிரித்தெடுத்தவர்கள் மேல் கைகளை வைத்தல் யூதர்களின் அங்கீகாரத்துக்கு அடையாளமாகும். கைவைக்கும் பெரியவர் களிலிருந்து கைவைக்கப்படுவோருக்கு அதிகாரமும், பதவியும் கிடைத்திருக் கிறது என்பது அதன் பொருள். (எண்ணாகமம் 27 : 18 – 23, மாற்கு 16 : 18, 1 தீமோத்தேயு 5 : 22). நோயுற்றறவர்கள் சுகமடைவதற்காகவும் (மாற்கு 16 : 18), பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காகவும் (அப்போஸ்தலர் 8 : 17, 9 : 17, 19 : 6), ஆவி யின் வரங்களை அளிப்பதற்காகவும் (1தீமோத்தேயு 4 : 14, 2 தீமோத்தேயு 1 : 6) கைகளை வைத்து ஜெபிப்பது வழக்கம். இந்த ஏழு மனிதர்களையும் பரிசுத்தப் படுத்தி அபிஷேகம் செய்தது இரண்டு காரியங்களை உணர்த்தியது 1. இந்த ஏழு மனிதர்களும் தெய்வபக்தி, உண்மை, விசுவாசம், ஆவியின் வழிநடத்துதல் ஆகியவற்றைப் பெற்றவர்களாக இருந்தனர் (1தீமோத்தேயு 3 : 1 – 10) என்றும், 2. தேவனுடைய அழைப்பைப் பெற்று, அவருடைய பணிக்கென்று அவர்கள் தங்களை அர்ப்பணித்து முழு விருப்பத்துடன் ஒப்புக்கொண்டதற்குச் சாட்சியு மாகும் என்றும் அறிகிறோம். இயேசுவை மிகவும் வெறுத்த ஆசாரியர்கள் கூட விசுவாசத்துடன் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். 

ஸ்தேவான்:

அப்போஸ்தலர் 6 : 8 – 10 “ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள். அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.”

ஸ்தேவான் கிரேக்கமொழி பேசும் யூதன். அந்தக்காலத்தில் எருசலேமில் ஆயி ரக்கணக்கான கிரேக்கமொழி பேசும் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். தெரிந்தெடுக் கப்பட்ட ஏழு பேரின் பெயரில் ஸ்தேவான் பெயரே முதன்முதலில் இருந்தது. ஸ்தேவான் என்றால் முடி சூடியவர் அல்லது கிரீடம் என்று பொருள். அந்தக் காலத்தில் மலர்களினால் செய்யப்பட்ட கிரீடங்கள் வைத்து கவுரவப்படுத்து வார்கள். ஸ்தேவான் இரட்சிப்புக்கான நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவின் வல்லமை வெளிப்பட தன்னுடைய இருதயத்தைத் திறந்து கொடுத்து இரட்சிக் கப்பட்டு பாவமன்னிப்பைப் பெற்று தேவ ஞானத்தினாலும், பரிசுத்த ஆவியி னாலும் நிறைந்தவனாகக் காணப்பட்டபடியினால் கர்த்தர் அவனைச் சபை யின் நிர்வாக ரீதியான காரியங்களுக்கு மட்டுமல்லாமல் சுவிசேஷ ஊழியத் திற்கும் எடுத்துப் பயன்படுத்தினார். அவன் அறிந்திருந்த சத்தியங்களைக் குறித்து உறுதியான உணர்வுள்ளவனாக இருந்தான். அதோடு விசுவாசத்தில் நிறைந்தவனாகவும், வல்லமையுடையவனாகவும் இருந்தான். இரட்சிப்புக்கடுத்த விசுவாசம் மட்டுமல்ல, சேவை செய்யும் மனப்பான்மை உடையவனாகவும், சாட்சி பகரும் விசுவாசம் உடையவனாயுமிருந்தான். ஸ்தேவான் மூலமாக அநேக அற்புதங்களும் அடையாளங்களும் ஜனங்கள் மத்தியில் நடந்தது. 

அவனுடைய ஊழியங்கள் மூலமாக அநேகர் தேவனைப் பற்றிக்கொண்டனர். ஆதி திருச்சபையில் பிலிப்புவும், ஸ்தேவானும் பிரபலமானவர்களாகவும், முக்கியமானவர்களாகவும் இருந்தனர். தேவையுள்ளவர்களின் தேவைகளைச் சந்திக்கப் பலனுள்ளவர்களாக இருந்தனர். கிரேக்க மொழி பேசும் ஆலயங்க ளில் ஸ்தேவான் இயேசுவைப் பற்றி சாட்சி கூறி வந்தார். இது யூதர்களுக்கு இன்னும் கோபத்தை உண்டாக்கியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த ஐந்து வித்தி யாசமான கூட்டத்தாராகிய லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தா ரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவா னுடனே தர்க்கம் பண்ணினார்கள். ஸ்தேவான் அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஞானத்தையும் ஆவியையும் பார்த்து ஆச்சரியப்பட்டு மறுக்கவோ, எதிர்த்து நிற்கவோ அவர்களால் கூடாமற்போயிற்று (யாத்திராகமம் 4 : 15, லூக்கா 21 : 15). ஸ்தேவான் பண்ணியது ஒரேயொரு பிரசங்கம்தான். ஆனால் அது அத்தனை பெரிய பிரசங்கம். அதில் இஸ்ரவேலர்கள் வரலாறு முழுவ தையுமே விளக்கிக் கூறுகிறான். இயேசு இதை ஏற்கனெவே, 

லூக்கா 21 : 15 ல் “ உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். “ என்று கூறியுள்ளதைப் பார்க்கிறோம்.

ஆலோசனை சங்கத்தில் ஸ்தேவான்:

அப்போஸ்தலர் 6 : 11 – 15 “அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி; ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; பொய்ச் சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்; எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள். ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.”

ஸ்தேவான் சுவிசேஷத்திற்கு ஒரு உறுதியான சாட்சியாக இருந்தபடியால் சதுசேயரின் பகையைச் சம்பாதித்துக் கொண்டான். ஜனங்களும் மூப்பரும் வேத பாரகரும் எழும்பி ஸ்தேவானின் மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோ சனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக் கொண்டு போனார்கள். பொய் சாட்சிகளை அவனுக்கு முன்னால் நிறுத்திச் சொல்ல வைத்தனர். மேலும் ஸ்தேவான் நியாயப்பிரமாணத்துக்கும், பரிசுத்த ஸ்தலத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான் என்று குற்றம் சாட்டினர். இயேசுவுக்கும் இதே போல் பொய்சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடித்து நிறுத்தி யதை மத்தேயு 26 : 59 – 61 லிலும், யேசபேல் நாபோத்துக்கு எதிராகப் பொய் சாட்சிகளை நிறுத்திக் கொலை செய்ய வைத்ததை 1 இராஜாக்கள் 21 : 10 – 13 லிலும் பார்க்கிறோம்.தேவதூஷணம் சொல்பவர்களுக்கு மரணதண்டனை அளிக் கப்பட வேண்டுமென்று லேவியராகமம் 24 : 14 – 16 ல் கூறப்பட்டுள்ளதால், அவனைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடு இவ்வாறு கூறினார்கள். அது என்னவென்றால் நசரேயனாகிய இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப் போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று குற்றம் சாட்டினார்கள். 

மோசேயின் நியாயப்பிரமாணம் யாரையும் இரட்சிக்காது. ஆலோசனை சங்க த்தில் கூடியிருந்த அனைவரும் ஸ்தேவானையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தனர். ஸ்தேவானின் முகத்தில் ஒரு அற்புதக் காட்சியைப் பார்க்கிறார்கள். ஸ்தேவான் கூறுவதெல்லாம் உண்மை என்பதை நிறுவும் வகையில், தேவன் ஸ்தேவானின் முகம் ஒளிரும்படி செய்தார். ஒரு சாதாரண மனிதன், நம்மோடு வாழும் ஒரு மனிதனின் முகம் எப்படி பிரகாசிக்கிறது. அப்படியானால் இவன் உண்மையிலேயே தேவனால் அனுப்பப்பட்டவன் என்றெண்ணினர். மோசே நியாயப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கி வரும்போது அவனுடைய முகம் பிரகாசித்திருந்ததை யாத்திராகமம் 34 : 29 ல் பார்க்கிறோம். சாலமோன் பிரசங்கி 8 : 1 ல் “மனுஷனுடைய ஞானம் அவனு டைய முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும்” என்று கூறியுள்ளார்.ஆலோசனை சங்கத்தாரும் யூதர்களும் இன்னும் அதிகமாக அவன்மேல் கோபங்கொண்டு குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தனர். பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம் இத்தனை குற்றச்சாட்டுக்கள் உன்மேல் வைக்கப்படுகிறதே, உன்னுடைய பதில் என்ன என்று கேட்டார்கள். அப்பொழுது ஸ்தேவான் பேச ஆரம்பித்தான்.

சனகெரிப் சங்கத்தாரின் முன் ஸ்தேவான் பேசியது: 

ஸ்தேவான் அவர்களைப் பார்த்து சகோதரரே என்றும், பெரியவர்களைப் பார் த்து பிதாக்களே என்றும் மரியாதையாக அழைத்து ஆரம்பித்ததைப் பார்க்கி றோம். அவன் இளைஞனானதால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியா தையையும், மதிப்பையும் கொடுத்ததைப் பார்க்கிறோம். ஸ்தேவான் தன்னைக் குற்றப்படுத்தும் போது ஆத்திரமடையாமல் உட்கார்ந்திருந்தான். ஸ்தேவான் விசாரிக்கப்படும் போது தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தரவே யில்லை. தான் குற்றவாளியல்ல என்று வாதாடவும் இல்லை. தன்னைக் குறித்து எதுவும் பேசவும் இல்லை. அதற்கு மாறாகத் தன்னை நியாயம் விசா ரிக்கிறவர்களும், அவர்களின் முன்னோர்களும் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டினார் (7 : 51 – 53). அந்த வேளையில் நற்செய்தியை ஆதாரமாகக் கொண்டு தன்மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்குத் தைரியமாகப் பதிலளிக்க ஆரம்பித்தான். இதன் முலம் வேதவசனத்தின் சத்தியத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஸ்தேவான் நினைத்திருக்கலாம். ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட சத்திய ஜீவ வார்த்தைகளைக் கேட்பவர்கள் மனதிலாவது அது கிரியை செய்யும் என்று எண்ணினான். ஏனென்றால் குற்றம் சாட்டினவர்கள் பழைய ஏற்பாட்டு சத்தியங்களை விசுவாசிப்பவர்கள். ஆனால் வேறுபாடு என்னவென்றால் பழைய ஏற்பாட்டு கண்ணோட்டத்தைத் தீர்க்கதரிசன கண்ணோட்டத்தில் எடுத்துரைத்தார். 

அவர்கள் நியாயப்பிரமாணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஸ்தே வான் இஸ்ரவேலின் வரலாற்றைப் பற்றிப் பேசும்போது தேவன் எவ்வாறு வரலாற்றில் செயலாற்றுகிறார் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக் கிறார். தேவ அழைப்பு, தேவ மீட்பு, தேவ சட்டங்கள், தேவ வாசஸ்தலம் ஆகிய வற்றோடு தேவநியாயத்தீர்ப்புகளையும் பற்றிக் கூறுகிறார். மகிமையின் தேவன் ஆபிரகாமை மெசொப்பொத்தாமியா நாட்டிலிருக்கும் போது தரிசனமாகி இந்தப் பூமியைக் கொடுக்கிறேன் என்றார். அவன் விக்கிரக ஆராதனையில் இருந்த தால் அங்கிருந்து அவனை வெளியே அழைக்கிறார். ஆனால் அவருக்கென்று ஒரு இடம்கூட இல்லை. தன்னுடைய மனைவியைப் புதைக்கக்கூட இடமில் லாமல் காசு கொடுத்து இடம் வாங்கிப் புதைத்தார். அவனுடைய சரித்திரத்தை விவரிக்கிறார். ஆபிரகாமுக்குக் குழந்தையையும், தேசத்தையும் வாக்குப் பண் ணுகிறார். இந்த இரண்டும் இல்லாதிருந்தும் அவன் தேவன் தருவாரென்று விசுவாசித்தான். 100 வது வயதில் ஈசாக்கு பிறந்தான். அவனுக்குப் பிறந்த யாக்கோபு 12 கோத்திரப் பிதாக்களைப் பெற்றான். அவனுடைய வம்சா வழியில் தான் இஸ்ரவேலரைத் தெரிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து முற்பிதாக்கள் எல்லாருடைய வாழ்க்கையையும் பற்றிக் கூறுகிறார். அந்த முற்பிதாக்கள் யோசேப்பை (அவனது சகோதரர்கள்) எகிப்துக்கு கொண்டு போகும்படி விற்றுப் போட்டனர். 

தேவனே இடைப்பட்டு அவனைக் காப்பாற்றி எகிப்து தேசமனைத்திற்கும் ராஜாவாக ஏற்படுத்தினார். பின்பு அவனுடைய சகோதரர்கள் பஞ்சத்தால் எகிப் திலுள்ள யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ள வந்தனர். முதல் தடவை யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பைப் பார்க்கவில்லை. இரண்டாவது தடவை யோசேப்பைப் பார்த்தனர். யோசேப்பு தன்னுடைய இனத்தார் 75 பேரை எகிப்துக்கு வரவழைத்துப் பராமரித்தான். அதேபோல் இயேசுவையும் முதல் தடவை விற்றுப் போட்டீர்கள். இரண்டாவது தடவை வரும்போது தான் உங்கள் கண்கள் திறக்கப்படும். ஆபிரகாமுக்குத் தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுங் காலம் சமீபித்தபோது, யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றி இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினான். மேலும் பிதாக்களின் குழந்தைகள் பிறந்தால் அவைகள் உயிரோடிராதபடி செய்ய வேண்டுமென்று சட்டமியற்றினான். அந்த நேரத்தில் மோசே பிறந்து கர்த்தர் அவனைப் பார்வோனின் வீட்டிலேயே வளர்க்கும்படி செய்தார். அங்கு எகிப்தி யரின் சகல சாஸ்திரங்களும் கற்பிக்கப்பட்டு வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானவன். ஆனால் தேவனுடைய ஜனங்களை விடுதலை செய்ய ஆயத்தமாயிருக்கவில்லை. இயற்கையான ஒரு மனிதன் ஆவிக்குரிய காரியங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. அவ்விடத்தில் ஒரு எகிப்தியன் ஒருசகோதரனை அநியாயமாய் நடத்தப்பட்டதைக் கண்டு அவனை வெட்டிக் கொன்றான். 

அதனால் அங்கிருக்கப் பயந்து அங்கிருந்து ஓடி மீதியான் தேசத்தில் 40 வரு ஷம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். நாற்பது ஆண்டுகள் எகிப்தில் பயிற்சி பெற்ற பின்னரே அவனை வனாந்தரத்திக்குப் போகக் கர்த்தர் வைத்தார். அங்கு அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர். 40 வருடங்களுக்குப் பின்பு கர்த்தருடைய தூதன் முட்செடியில் தோன்றி மோசேயைப் பெயர் சொல்லி அழைத்து இஸ்ரவேல் ஜனங்களை மீட்டெடுக்கப் பயன்படுத்தினார். சிவந்த சமுத்திரத்தை கடக்கச் செய்தும், அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தும், இஸ்ரவேலர் மோசேயைத் தள்ளிவிட்டுத் தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பினார். மோசே சீனாய் மலையில் தேவனோடு பேசி, பத்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு வந்தபோது கீழே ஜனங்கள் ஆரோனிடம் தங்கத்தைக் கொடுத்து கன்றுக்குட்டி செய்தனர். இது மேலே கர்த்தருடைய மகிமையில் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த போது நீங்கள் மதிக்காமல் இவ்வாறு செய்தீர்கள் என்றான். மோசேயைக் கர்த்தர் விடுதலை வீரராகப் பயன்படுத்தி எகிப்திலிருந்து ஜனங்களைக் கூட்டி வந்தான். இருந்தாலும் ஜனங் கள் மோசேயைப் பின்பற்ற மனதற்றவர்களாய் வருத்தத்தையும், தொடர்ந்து பிரச்சனையையும் கொடுத்தனர். உடன்படிக்கைப் பெட்டியை வைத்து, அதில் தான் தேவனுடைய பிரசன்னம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் என்றார். 

மோசே கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றதோடு முடிக்கிறார். தேவ தூதர்களைக் கொண்டு நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும் அதைக் கைக் கொள்ளாமல் போனீர்கள் என்றான் இறுதியில் சுற்றி நின்ற மக்களைப் பார்த்து பரிசுத்த ஆவியைப் பெறாமல் தர்க்கம் பண்ணுகிறீர்கள் என்றும், அவர்களை முரட்டாட்டமுள்ளவர்களுக்குச் சமமாக்கி, வணங்காக் கழுத்துள்ளவர்கள் என்றும், இருதயத்திலும், செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்கள் என்றும், .அவர்களைக் கொலை பாதகர்கள் என்றும் நேரடியாகக் கூறியதுடன், கிறிஸ்துவின் மகிமையையும் அறிவித்தார். அழைப்பைப் பற்றிக் கூறும்போது அது மெசப்பொத்தாமியாவில் நிகழ்ந்தது என்றும், மீட்பு எகிப்தில் நிகழ்ந்தது என்றும், முதல் வாசஸ்தலம் வனாந்தரத்தில் கட்டப்பட்டது என்றும் விளக்கினார். ஸ்தேவானின் பேச்சைக் கேட்கும்போது அவன் உண்மையி லேயே எவ்வாறு நியாயப்பிரமாணத்தைக் கற்றுத்தேர்ந்து அதன்படி வாழ்வ தற்கு ஒப்படைந்திருந்த மனிதன் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நியாயப்பிரமாணத்தின் இரத்தின சுருக்கத்தையும் ஆதாமின் காலம் தொடங்கி சாலொமோன் ஆலயம் கட்டி முடிக்கும் வரையிலான சம்பவங்களைச் சுருக்கமாகக் கூறியிருப்பதையும் பார்க்கிறோம். ஸ்தேவான் ஆலோசனை சங்கத்தாரைப் பார்த்து பல கேள்விகளை முன் வைக்கிறான். 

ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் அவர்களிடத்தில் பதிலில்லை. விசுவாசிகளாகிய நாமும் நம்மிடம் மற்றவர்கள் கேள்வி கேட்கும் போது நாம் வேத வசனங்களை அறிந்தவர்களாகவும், அவர்களுடைய கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் கூறுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இதினிமித்தம் கடுங் கோபங்கொண்ட அந்தக் கூட்டத்தார் அவனைக் கொல்லும்படியாக முடிவெடுக்கிறார்கள். தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்றறிந்தும் விசுவா சத்தில் ஸ்தேவான் பின்வாங்கவில்லை. ஸ்தேவானைக் கொன்றால் முழுக் கூட்டத்தையும் ஒடுக்கி விடலாம் என்றெண்ணினார். ஆனால் தேவனுடைய திட்டம் வித்தியாசமானதாக இருந்தது. அவருடைய வழிகள் ஆச்சரியமான தாக இருந்தது. அவனைக் கொலை செய்ய சவுல் என்ற ஒரு மனிதன் சம்மதித் திருந்தான். ஒருவேளை அவன் அந்த நியாயசங்கத்திலே முக்கியமானவனாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அவனிடம்தான் ஸ்தேவானின் வஸ்திரங்களும், பொருட்களும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஸ்தேவான் கல்லெ றிந்து கொல்லப்படுவதை சவுல் நேரில் பார்த்துக் கொண்டிருந்தான். தரிசு பட்டணத்து சவுலும், ஸ்தேவானும் சந்தித்த வேளையில் எதிரிகளாக நின்றனர். சவுல் இந்நாட்களில் தமஸ்குவிலும் இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் இருக்கி றார்கள் என்பதை அறிந்து கொண்டான். 

அவர்களையும் கொல்லும்படியாக உத்தரவு பெற்றுக்கொண்டு தமஸ்குவுக்குப் பயணிக்கும் போதுதான் இயேசுவானவர் அவனைச் சந்தித்தார் ஒரு நீதிமா னின் மரணம் பல நீதிமான்களைப் பிறப்பிக்கும். என்று அறியாதிருந்தார்கள். அவனைக் கொல்வதற்கு நின்ற கூட்டத்திலிருந்தே ஒரு மனிதனைத் தெரிந் தெடுத்து எல்லா அப்போஸ்தலர்களும் அவனை ஒரு அப்போஸ்தலனாக்கி முழு ஆசியா கண்டத்துக்கும் சுவிசேஷம் அறிவிக்கும்படி தேவன் பயன் படுத்தினார் அவன்தான் பவுல் அப்போஸ்தலன். பவுல் பின்னாட்களில் அநேக ஊழியர்களையும், அநேக சபைகளையும் உருவாக்கியவர். இயேசு தன்னை சிலுவையில் அறைந்த ஜனங்களுக்காய் ஜெபித்த விதத்தைக் கேட்டு ரோம நுற்றுக்கதிபதி “இயேசு மெய்யாகவே தேவனுடைய குமாரன்” என்றான். அதேபோல் பவுலும் மனம் மாறினான். ஸ்தேவானையும், சவுலையும் கர்த்தர் ஆதிசபையை வடிவமைக்கப் பயன்படுத்தினார். சிலுவையிலறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கிடையே வித்தியாசம் இருந்ததைப் போல ஸ்தேவா னுடைய வாழ்க்கைக்கும், சவுலுடைய வாழ்க்கைக்கும் வித்தியாசமிருந்தது. இவைகளனைத்தைதையும் கேட்ட ஆலோசனை சங்கத்தார் மிகுந்த கோபங் கொண்டு பல்கலைக் கடித்தனர். 

ஸ்தேவானின் கடைசி நிமிடங்கள்:

அப்போஸ்தலர் 7 : 55, 56, 59, 60 “அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு; அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.”

ஸ்தேவானை எந்த நீதிமன்றமும் விசாரிக்கவில்லை. ஆலோசனை சங்கத் திலிலுள்ள ஒருவருக்கு மரணதண்டனை அளிக்கும் அதிகாரம் கிடையாது. அதற்கு ரோம ஆளுனரின் ஒப்புதல் தேவை. ஒரு வித்தியாசமான முறையில் கல்லெறிந்து கொலை செய்வர். கொலை செய்ய வேண்டியவனை ஒரு உயரமான இடத்தில் நிறுத்த வேண்டும். அங்கிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். கல்லெறிய வேண்டியவர்கள் குற்றம் செய்தார் என்று சாட்சிகள் கூற வேண்டும். கீழே விழும் போதே அவர் இறந்தால் நல்லது. இல்லாவிட்டால் பெரிய கற்களை அவர் மேல் தூக்கிப்போட்டு கொலை செய்வர். ஆனால் இவர்கள் கொல்ல வேண்டிய மனிதனை நடுவே நிறுத்தி சுற்றிலும் நின்று கல்லெறிந்தது தவறு. இயேசு ஏற்கனெவே மத்தேயு 10 : 17 ல் “மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களை ஆலோசனை சங்கத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்” என்றார். ஸ்தேவான் தனது மரண நேரத்தில் பரிசுத்த ஆவியில் நிறைந்த போது வானத்தை அண்ணாந்து பார்த்தான். அங்கு தேவனுடைய மகிமையையும், மனுஷ குமாரன் பிதாவின் வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறார். இயேசுகிறிஸ்து தனது பலி மரணத்தை முடித்து விட்டு பிதாவின் வலது பாரிசத்தில் அமரச் சென்றவர். பொதுவாக இயேசுவானவர் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பார் (சங்கீதம் 110 : 1, மத்தேயு 26 : 64, மாற்கு 16 : 19, லூக்கா 22 : 69, எபேசியர் 1 : 21, கொலோசெயர் 3 : 1, எபிரேயர் 10 : 12). 

ஆனால் இரத்தசாட்சியாக ஒரு மனிதன் மரணமடையும்போது எழுந்து நின்று வரவேற்கிறார். இரத்த சாட்சியாக மரணமடைகிறவர்களுக்கு அவர் அளிக்கும் மதிப்பு இது. ஸ்தேவான் கூறுவதைக் கேட்க அவர்கள் மனதில்லாமல் காது களை அடைத்துக் கொண்டனர். அவர்களனைவரும் உரத்த சத்தமாய்க் கூக்குர லிட்டு ஸ்தேவானை நகரத்துக்கு வெளியே கல்லெறிவதற்காக அழைத்துக் கொண்டு போனார்கள். ஸ்தேவானோ அப்பொழுது இயேசுவை நோக்கி தன்னுடைய ஆவியை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபம்பண்ணினான். அந்த நேரத்தில் அவனை நோக்கிக் கல்லெறிந்தார்கள். அப்பொழுதும் ஸ்தேவான் முழங்காலில் நின்று இயேசுவை நோக்கி மிகுந்த சத்தத்துடன் தன்மேல் கல்லெறிந்தவர்கள் மேல் அந்தப் பாவத்தைச் சுமத்தாதிருமென்று மன்றாடி னான். இயேசு தன்னைச் சிலுவையிலறைந்தவர்களின் மன்னிப்புக்காக பிதா விடம் வேண்டிக் கொண்டதுபோல ஸ்தேவானும் வேண்டிக்கொண்டான் (லூக்கா 23 : 34). முழங்காலில் நின்றுகொண்டு தனது கொலயாளர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபித்து இயேசு தமது ஆவியைப் பிதாவிடம் ஒப்படைந்தது போன்று, ஸ்தேவான் தனது ஆவியை இயேசுவிடம் ஒப்படைத்தார் (லூக்கா 23 : 45). சபையின் முதல் இரத்தசாட்சி ஸ்தேவான். 

ஸ்தேவானின் நற்குணங்கள்:

  1. ஸ்தேவானின் மனம் பரலோகத்தையும், இயேசுவையும் நோக்கிக் கொண்டிருந்தது.
  2. உபத்திரவப்படும்போதும் தேவனுடைய மகிமையைக் கண்டார்.
  3. ஆலோசனை சங்கத்தில் கூடியிருந்தவர்களின் எதிர்ப்பைக் கண்டு சிறிதும் அஞ்சவில்லை.
  4. பிதாவின் வலதுபாரிசத்திலிருந்த இயேசுவின் மீது தன் கண்களைப் பதிய வைத்திருந்தார்.
  5. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை மிகுந்த தைரியத்துடன் சாட்சி பகர்ந்தார்.
  6. துன்பப்படுத்தும் போதும் அதை சகித்தார். பின்பு கொலையும் செய்யப் பட்டார்.
  7. கல்லெறிந்தவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபம் செய்தார்.

நாமும் ஸ்தேவானைப் போல எதற்கும் யாருக்கும் அஞ்சாமல், இயேசுவின் சுவிசேஷத்தை அறிவித்து, ஆத்மாக்களை இயேசுவண்டை சேர்க்கப் பிரயாசப்படுவோம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago

இயேசுவின் இரகசிய வருகை

இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும்…

1 month ago