ஒரு பரிச்சேயனும், ஆயக்காரனும் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். பரிச்சேயன் பரிகாரனாக இல்லாமல், அநியாயக்காரனாக இல்லாமல், விபச்சாரக்காரனாக இல்லாமல், வாரத்தில் இரண்டு தடவை உபவாசித்து தசமபாகம் சரியாக செலுத்துகிறவனாக இருந்தான். இப்பண்புகள் அனைத்தும் நல்ல பண்புகள். ஆனால் இவற்றால் ஒரு மனிதன் நீதிமானாக்கப் படுவதில்லை. நான் இவ்வாறெல்லாம் இருக்கிறேன் என்று சொல்வது சுய நீதியாகும். நம்முடைய நீதி அழுக்கான கந்தையைப் போல் உள்ளதாக ஏசா 64 : 6 ல் கூறப் பட்டுள்ளது. மனிதன் இயேசுவை விசுவாசிப்பதினால் அடையும் தேவநீதியினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறான். (ரோ 3 : 20, 22 – 24) பரிச்சேயனுக்கு தேவனுடைய உதவியும், இரக்கமும், கிருபையும், எப்போதும் தேவை என்பது தெரியவில்லை. ஆயக்காரன் தன்னுடைய ஜெபத்தில் தான் ஒரு பாவி என்று ஒப்புக்கொண்டதோடு, தாழ்மையுடன், மனந்திரும்புதலோடு, தேவனுடைய மன்னிப்பையும், கிருபையையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்ள கெஞ்சினான். எனவே பரிச்சேயன் அல்ல ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டான்.
நாமும் நமது பாவங்களைக் கர்த்தரிடம் கூறி அவற்றை மன்னிக்குமாறு கேட்பதோடு நம்மீது கிருபையாக இருந்து நம்மைப் பொறுப்பேற்று வழிநடத்துமாறு முழுவதும் சரணடைய வேண்டும். மேலும் கிறிஸ்து இயேசுவிலிலுள்ள இலவசமான மீட்பை விசுவாசத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும் – ரோ 3 : 24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…