இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியிலே பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமான காணிக்கைகளைப் போட்டனர். ஏழையான ஒரு விதவையும் இரண்டு
காசு காணிக்கை போட்டாள். இதைப் பார்த்த இயேசு “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்றார். ஏனெனில் ஐசுவரியவான்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப் போட்டார்கள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததையெல்லாம் போட்டு விட்டாள்” என்றார்.
தேவன் நாம் கொடுக்கும் காணிக்கையின் அளவையும், பணத்தின் தொகையையும் பார்த்து மதிப்பிடுவதில்லை. மேலும் அவர்கள் காணிக்கையைக் கொடுப்பதின் மூலம்
எவ்வளவு தியாகம் செய்துள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஐசுவரியவான்கள் தங்களுக்குத் திரளாக உள்ள ஆஸ்தியில் ஒரு பங்கைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை. அந்த விதவையின் காணிக்கை அப்படிப்பட்டதல்ல. அவளிடமிருந்த அனைத்தையும் கொடுத்து விட்டாள். தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்து விட்டாள்.
இந்த கொள்கையை நாம் ஆண்டவருக்குச் செய்யும் ஒவ்வொரு ஊழியத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். அவர் நம்முடைய வேலையையும், ஊழியத்தையும் அதன் அளவு, அதன் செல்வாக்கு, வெற்றி ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. கொடுப்பவர்களின் பக்தி, தியாகம், அன்பு ஆகியவற்றைப் பார்த்து அவர்களை மதிப்பிடுகிறார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…