நியாயப்பிரமாணமென்பது தேவகட்டளை. அது பத்து கட்டளைகளையும் உள்ளடக்கிய 600க்கும் மேற்பட்ட கட்டளைகளைக் கொண்டது. தேவ பார்வையில் நன்மை, தீமையைப் பற்றி அது போதிக்கின்றது (உபாகமம் 6 :8) 

அதை மனிதர் கடைப்பிடிக்க முயன்று தோல்வியுற்றனர் (ரோமர் 3 : 20). அது பாவங்களையும் அதனுடைய முடிவையும் காட்டியது (1யோவான் 3: 4). 

பாவம் என்ன என்பதை உணர்த்தியது (ரோமர் 3 : 20). ஆனால் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை. மனிதனை நல்லவனாக அது மாற்றவில்லை. 

இவ்வாறு பாவத்தினால் வரும் சாபத்தின் மொத்த உருவாக மாறிய நியாயப்பிரமாணம் (கலாத்தியர் 3: 10), கதியற்ற நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தியது (கலாத்தியர் 3 :24). 

கிறிஸ்துவண்டை நாம் வந்தபோது, அவர் நம்மை நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுவித்தார் (கலாத்தியர் 3 :13). 

அவர் பாவத்தின் அதிகாரத்திலிருந்து விடுவித்தார் (ரோமர் 6 :14). 

அவரே நமது வாழ்வை வெற்றிகரமாக்க நம்மில் வாழ வந்துவிட்டார் (கலாத்தியர் 2 : 20, 1 கொரிந்தியர் 1: 31). 

இயேசு நியாயப்பிரமாணத்திற்கு எந்த சிறப்புமில்லாமல் போகும்படி செய்தார் (ரோமர் 4 :14). 

புதியஉடன்படிக்கையால் அதைப் பழையதும் ஒழிந்து போகிறதுமாக்கினார் (2 கொரிந்தியர் 3 : 6,8). 

நியாயப்பிரமாணத்திற்கு நம்மை மரிக்க வைத்து, அதன் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கினார் (ரோமர் 7 : 2, 6). 

நியாயப்பிரமாணத்தை இயேசு தனது மாம்சத்தினால் ஒழித்தார் (எபேசியர் 2:15).

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago