மத்தேயு 2 : 1 , 2 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்தலகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.”
இயேசு பெத்தலகேம் முன்னணையில் பிறந்தபோது, சாஸ்திரிகள் வரவில்லை. இரண்டு வருடம் கழித்துத் தான் வந்தனர். சாஸ்திரிகள் வரும் பொழுது அவர்களை வழிநடத்தியது ஒரு நட்சத்திரம். அந்த சாஸ்திரிகள் வானசாஸ்திரம் படித்தவர்கள். அவர்களுக்கு ஒரு நட்சத்திரம் தோன்றும், அது நகர்ந்து செல்லும், அது தேவனைக் காட்டும், என்ற அறிவு இருந்தது. அவர்கள் பிலேயாம் கூறிய தீர்க்கதரிசன வார்த்தையை அறிந்திருந்தனர். அது என்னவென்றால்:
எண்ணாகமம் 24 : 17 “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலில் இருந்து எழும்பும்.”
என்பது தான். அதைக் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு நாள் அந்த நட்சத்திரம் அவர்களுடைய கண்களுக்குத் தென்பட்டது. அதை அவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். நட்சத்திரம் ஒரு மனிதனைப் போல கடந்து வழிகாட்டிக் கொண்டே சென்றது. இவர்களுக்கு சாஸ்திரங்கள் தெரியும். ஆனால் இயேசு பிறந்த இடம் தெரியாது. அவர்களுடைய நோக்கமும் தீர்மானமும் என்னவென் றால் இயேசு என்ற அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும். அந்தக் குழந்தையைப் பணிந்து அதற்குக் காணிக்கை செலுத்த வேண்டும். தன் பிறவிப் பலனை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். எட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் வரை இந்த நட்சத்திரம் அவர்களை வழிநடத்தியது. அவர்கள் வந்தது அதிகமான தூரம். ஆனால் அவர்கள் தவறுதலாக ராஜாவின் அரண்மனைக்குச் சென்று இயேசுவைத் தேடினர். ஆனால் அங்கு இயேசு இல்லை. எனவே அங்கிருந்து திரும்பவும் நட்சத்திரம் வழிகாட்டியபடி இயேசு இருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். சேர்ந்த பின் அவர்கள் கொண்டு வந்த காணிக்கையை அதற்கு முன் வைத்து வணங்கினர். இந்தக் காணிக்கையை அவர்கள் கொடுத்தது இயேசுவுக்கு தான். ஏனெனில் பாவிகளை இரட்சிக்க வந்தது, பாவிகளுக்காக இரத்தம் சிந்தியது, பாவங்களை மன்னிப்பேன் என்று சொன்னது, அற்புதங்களும் அடையாள ங்களும் செய்தது, . கல்வாரிக்குப் போனது, கடைசிச் சொட்டு வரை இரத்தம் சிந்தி மரித்தது, பாவிகளுக்காகத் தன் ஜீவனை விட்டது, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் எழுந்தது அனைத்தும் இயேசு தான். “நான் திரும்ப வருவேன்” என்று கூறியதும் இயேசு. பழைய ஏற்பாட்டில் மேசியா பிறப்பார் என்ற தீர்க்கதரிசனங்கள் இயேசுவைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. இவைகள் அனைத்திலுமிருந்து காணிக்கையும், தொழுகையும் அவர்கள் யாருக்குக் கொடுத்தனர் என்றறிகிறோம். சபையின் மூலைக்கல் இயேசு தான். மரியாள் பரிசுத்தமுள்ள தாய். பரிசுத்த ஆவிக்காகக் காத்திருந்தவள். பரிசுத்த ஆவியைப் பெற்றவள்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…