அக்காலத்தில் உபவாசிப்போர் குளிப்பதில்லை, தலைமயிர் வாருவதில்லை, வாட்டமாக நடந்து கொள்வர். தலையிலும், முகத்திலும் சாம்பலைப் பூசுவர். இந்த சாம்பல் கண்ணீருடன் கலந்து முகத்தில் வழிந்து காண அகோரமாயிருக்கும் பிறருக்குக் காட்ட மாய்மாலக்காரர் செய்யும் இத்தகைய வேடங்கள் வேண்டாம் என்று கர்த்தர் உரைத்தார். அவர்கள் சாதாரண உணவு உண்ணும்முன் சடங்கு முறைப்படி கைகால்கள் கழுவி தலையிலும், முகத்திலும் ஒலிவ எண்ணெய் பூசுவது உண்டு. வேனிற்காலத்திலும் உடல் ஆரோக்கியத்திற்கு அது மிகவும் சிறந்தது. அசாதாரணமான எதுவும் உபவாசம் என்ற பெயரால் வேண்டாம் என்று கர்த்தர் உரைத்தார்.
மேலும் மாற் 2:18-22 லூக் 5:32-35 லும் கூறுகிறத்தின் விளக்கம் என்னவெனில் இயேசு தம்மை மணவாளனாக வர்ணித்துள்ளார். – வெளி 19:7-9,21:9.10 மணவாளன் கூடவே இருக்கும் போது உபவாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனவாளனோடு இருக்கும்போது சகலமும் உண்டாயிருக்கும். அவர் எடுபடும் நாள் வரும். அப்பொழுது உபவாசிப்பார்கள். மணவாளனாகிய இயேசுவின் இரண்டாம் வருகைவரை அவ்வப்பொழுது கிறிஸ்தவர்கள் உபவாசம் செய்ய வேண்டும். உபவாச ஜெபம் நமது அவிசுவாசத்தை நீக்கும். புதிய ஏற்பாட்டு சபையினர் உபவாசித்தனர். அப் 13:1-3, 14:23 பவுல் பல தடவைகள் உபவாசித்ததை 2கொரி 6:5,11:27 ள் காண்கிறோம். தியானம், ஜெபம், ஸ்தொத்தரித்தல், துதித்தல், ஆராதித்தல், உபவாசம் ஆகியவை ஒரு மெய்க் கிறிஸ்தவனின் அனுபவங்களாக அமைபவையாகும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…