புதிய ஏற்பாடு வேத பாடம்

ஜெபத்தைப் பற்றி இயேசு – மத்தேயு 6:5-15 லூக்கா 11:1-4

தேவனோடு தனித்து ஜெபிக்கவும், உறவாடவும், ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் ஒரு தனி இடம் வேண்டும். தனித்த இரகசிய ஜெபம் பின்வரும் காரியங்களில் மிகவும் சிறப்பானது.

  1. அதிகாலையில் நம்முடைய நாளை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுக்க முடியும்.
  2. மாலையில் அவரிடம் பெற்ற இரக்கங்களுக்காக நன்றி சொல்ல முடியும்.
  3. பரிசுத்த ஆவியானவர் நம்மை ஜெபிக்கத் தூண்டும் போது நமது ஆண்டவர் நமது ஜெபத்திற்குப் பதிலளிப்பார். அவரது பிரசன்னத்தை நமக்குத் தருவார். நித்தியத்துக்கு நம்மை வழிநடத்தி அவருடைய ஈவுகளை நமக்களிப்பார்.

இயேசு ஒரு  மாதிரி ஜெபத்தை நமக்கு எடுத்துரைக்கிறார். எந்த ஜெபத்தில் ஒரு கிறிஸ்தவனின் ஜெபத்தில் எந்தெந்தப் பகுதிகள் இடம் பெறவேண்டும் என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார். இதில் ஆறு விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் மூன்று தேவனுடைய சித்தம், நம்முடைய பரிசுத்தம் பற்றியவை. அடுத்த மூன்று பகுதியில் நம்முடைய தனித்தேவைகள் அடங்கியுள்ளன. முதலில் நாம் பரலோக பிதாவை நோக்கித் துதித்து அவருடைய நாமம் தூய்மையானதென்று போற்றப்பட வேண்டும். அதாவது கர்த்தருடைய நாமத்தை மகிமைப் படுத்த வேண்டும். அடுத்தாற்போல் நாம் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும், புதிய வானத்திலும், புதிய பூமியிலும் தேவனுடைய நித்தியராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படவும் ஜெபிக்க வேண்டும் வெளி 20:11, 21:1, 22:10  2பேது 3:10-12 தேவனுடைய ராஜ்ஜியம் எப்பொழுது வெளிப்பட வேண்டும் என்றும், அதன் ஆவிக்குரிய பிரசன்னத்திற்காகவும் ஜெபிக்க வேண்டும். “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும் போது நம்முடைய வாழ்விலும், நமது குடும்பத்தினர் வாழ்விலும் தேவனுடைய நித்திய திட்டத்தின்படி அவருடைய திட்டமும், நோக்கமும் நிறைவேற வேண்டுமென்பதே நமது மனப்பூர்வமான வேண்டுதல் ஆகும்.

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை என்று எங்களுக்குத் தாரும்” என்பது நம்முடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்கிறவர் அவரே. என்று உணர்ந்து ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும்.  நம்முடைய ஜெபத்தில் பாவங்களை அறிக்கையிடுவதுடன் நமக்கு எதிராக தீமை செய்கிறவர்களை மன்னிக்க வேண்டும். எபி 9:14, 1யோவா  1:9 ஒவ்வொருவரும் சாத்தானின் சக்திகளிலிருந்தும், சாத்தானின் திட்டங்களிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட அனுதினமும் அதற்காக ஜெபிக்க மறந்துவிடக் கூடாது.
நாம் மற்றவர்களின் தப்பை மன்னிக்கும் போது பிதாவும் நம் தவறுகளை மன்னிப்பார். மனம் வருந்துகிற எதிரிகளை நாம் மன்னிக்காவிட்டால் அவர்களுடைய பாவங்களை தேவன் மன்னிக்காதது மட்டுமல்ல, நமது ஜெபத்திற்கும் பலன் எதுவும் இராது.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago