மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி முதலில் பிறக்கும் ஆண்பிள்ள கர்த்தருக்கு சொந்தமானது. அந்தமுறைப்படி இயேசுவையும் விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, பிறப்பதற்கு முன்னால் தூதன் சொன்னபடி ஒரு ஜோடி காட்டுப் புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாக செலுத்த எருசலேம் தேவாலயத்துக்குக் குழந்தையைக் கொண்டு போனார்கள் – லூக் 2:21-24
தேவாலயத்தில் நீதியும், தேவபக்தியுமுள்ள, இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்த, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட, கிறிஸ்துவைக் காணுமுன் மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியினால் அறிவித்த சிமியோன் என்னும் தீர்க்கதரிசி ஆவியின் ஏவுதலால் தேவாலயத்துக்கு வந்தான். அவன் இயேசுவைக் கைகளில் ஏந்தி தேவனை ஸ்தோத்தரித்தான். “உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” என்றான். மேலும் அவர் கூறிய தீர்க்கதரிசனங்கள்:

  1. இயேசு புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி.
  2. இயேசு தம்முடைய ஜனத்துக்கு மகிமையானவர்.
  3. தேவனின் இரட்சண்யம் இயேசு.
  4. அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படவும், இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும், எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இயேசு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  5. மரியாளின் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும். என்றான் – லூக் 2:30-35

ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியும், 84 வயதுடைய அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். அவளும் அங்கு வந்து இயேசுவைப் பார்த்து அவரைப் புகழ்ந்து, யாவருக்கும் அவரைக் குறித்துப் பேசினாள். – லூக் 2: 36-38

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago