கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தனர். அங்குள்ள அரண்மனைக்குச் சென்று ஏரோது ராஜாவிடம் ”யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டனர். இதைக் கேட்டதும் ஏரோதும் எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினர். ராஜா பிரதான ஆசாரியரையும், வேதபாரகரையும் அவசரமாக அழைத்து கிறிஸ்து எங்கே பிறப்பார் என்று கேட்டான். அவர்கள் மீகா 5:2 வசனத்தை சுட்டிக்காட்டி, இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்றார்கள். ஏரோது ராஜா கெட்ட எண்ணத்தோடு “பிள்ளை எங்கே பிறந்திருக்கிறது என்பதை தீர விசாரித்து தானும் தரிசிக்கும் வண்ணமாய் தனக்குச் சொல்லுமாறு“ ஞானிகளிடம் கேட்டுக் கொண்டான்.
ஞானிகள் அரண்மனையை விட்டு வெளியே வந்தததும் , பிள்ளை இருந்த இடத்திற்கு நேராய் நட்சத்திரம் வழிகாட்டியது. ஞானிகள் இயேசு இருந்த வீட்டினுள் வந்து, சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையைத் தொழுது கொண்டனர். ஞானிகள் தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும்,, வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாகப் படைத்தனர். பின் தேவனால் எச்சரிக்கப்பட்டு ஏரோதிடத்திற்குப் போகாமல் வேறுவழியே தங்கள் தேசத்திற்குப் திரும்பிப் போனார்கள். – மத் 2:1-12
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…