இஸ்ரவேலரின் நிலை:

நியாயாதிபதிகள் 4 : 1 “ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.”

இஸ்ரவேலருக்குள் ராஜாக்கள் இல்லாத அந்த நாட்களில் நியாயாதிபதிகளைக் கொண்டு கர்த்தர் வழி நடத்தி வந்தார். ஒத்னியேல், சம்கார், ஏகூத் போன்ற மூன்று நியாயாதிபதிகளுக்குப் பின் தொபொராள் நான்காவது நியாயாதிபதி யாக நியமிக்கப்பட்டாள். தெபொராள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்த நாட்களில் ஜனங்கள் மிகவும் பொல்லாப்பு செய்து, துன்மார்க்கமாகத் தேவ னுக்குப் பிரியம் இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். திரும்பவும் திரும்பவும் கர்த் தருடைய ஜனங்கள் கர்த்தரை விட்டுத் தூரம் போய்க் கொண்டிருந்தனர். திரும் பவும் என்ற வார்த்தை நியாயாதிபதிகள் புத்தகத்தில் அநேக இடங்களில் வரு வதைப் பார்க்க முடியும். கர்த்தர் எத்தனை அற்புதங்கள் செய்தும் ஜனங்கள் அப் படிப்பட்ட வாழ்க்கைக்கு அடிமையாய்ப் போனார்கள். கொஞ்சகாலம் தேவனு க்காக வாழ்வார்கள். பின் பாவ இச்சைகளில் விழுந்து தப்பான வழிபாடுகளுக் குக் கடந்து தேவனை விட்டுப் பின்வாங்கிப் போவார்கள். இதைத்தான் நியா யாதி புத்தகத்தில் அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதேபோல்தான் நாமும் எத்தனையோ நன்மைகளைக் கர்த்தரிடமிருந்து பெற்றிருந்தும், ஆசீர்வாதம் நம்மை வந்தடைந்தவுடன் கொஞ்ச நாட்களில் தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசம் படிப்படியாகக் குறைந்து நம்முடைய மனம் போன போக்கில் வாழ ஆரம்பிக்கிறோம். 

யாபீன்ராஜா, சிசெராவின் கொடுமைத்தனம்:

நியாயாதிபதிகள் 4 : 2, 3 “ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான். அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.”

மூன்றாவது முறையாக ஜனங்கள் கர்த்தரை விட்டுத் தூரம் போனதால் அடி மைத்தனத்துக்குள்ளானார்கள். அதனால் கர்த்தர் தான் அவர்களுக்கென்று வைத் திருந்த நன்மைகள், ஆசிகள், பாதுகாப்புகள் அனைத்தையும் அவர்களை விட்டு விலக்கினார். அதனால் கர்த்தர் அவர்களை ஆதிசோரில் ஆண்டு கொண்டிருந்த கானானிய ராஜாவான யாபீன் ராஜா வசம் ஒப்புக் கொடுத்தார். யாபீன் ராஜாவி னுடைய சேனாதிபதியான சிசெரா இஸ்ரவேல் அல்லாத புறஜாதி பட்டணமா கிய அரோசேத்தில் குடியிருந்தான். இவனுக்குத் தொள்ளாயிரம் இரும்பு இரத ங்கள் இருந்தன. இவர்கள் இஸ்ரவேலரை 20 ஆண்டுகள் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தி வந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிப்பட்ட ஆயு தம் ஒன்றுமில்லாததால் போருக்குச் செல்லப் பயந்தனர். கர்த்தர் வாக்குப் பண் ணிய பூமியில் அடிமைகளாக வாழ்ந்தனர். அதற்குக் காரணம் நியாயாதிபதிகள் 5 : 6 ல் ஜனங்கள் இருபது வருடங்களாகக் கர்த்தரைத் தேடாமல் தங்கள் சுயத் தினால் முயற்சி செய்தனர். குறுக்கு வழியில் முயற்சி செய்து அவர்களின் முய ற்சி வீணானதால் கர்த்தரை நோக்கிக் கதறினார். ஜனங்கள் தங்களுக்கு உதவி செய்யக் கதறினார்களே ஒழிய, தங்கள் பாவங்களையும் குறைகளையும் கூறி கர்த்தர் தங்களை மன்னிக்கக் கெஞ்சவில்லை. அவர்கள் தங்களின் பாவங்களை உணராதவர்களாய் மனந்திரும்பாதவர்களாய் அழுதனர். நாமும் இதே போல் தான் நமக்கு வரும் பிரச்சனைகளின் போது கர்த்தரிடம் விண்ணப்பித்து விட்டு, அதைத் தீர்க்க மனுஷர்களிடம் போகிறோம். 

தெபொராள்:

நியாயாதிபதிகள் 4 : 4, 5 “அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.”

இவளுடைய கணவன் பெயர் லபிதோத். இவள் ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவில் குடியிருந்தாள். வீட்டின் பக்கத்திலுள்ள பேரீச்ச மரத்தினடியிலமர்ந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு நியாயம் விசாரிக்கவும், ஆலோசனை வழங்கவும் தேவனால் வழிநடத்தப்பட்டாள். தேவஞானம் நிறைந்தவளாக, நல்ல பண்புகள் நிறைந்தவளாக, ஆன்மீக இருட்டு நிறைந்த அந்தக் காலத்தில் தன்னை முழுவதும் கர்த்தரிடத்தில் அர்ப்பணித்து, அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தாள். மக்கள் மனம் போல் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் எந்த ஆண்மகனும் நியாயாதிபதியாகத் தகுதி இல்லாமல் இருந்தபடியால் பெண் நியாயாதிபதியாக தெபொராள் நியமிக்கப்பட்டாள். தன்னிடம் வந்த இஸ்ரவேல் ஜனங்களின் வழக்குகளைப் பாரபட்சமில்லாமல் நியாயமாக விசாரித்து நீதி வழங்கினாள். எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரின் செய்தியை மக்களுக்கு எடுத்துக் கூறி கர்த்தரின் வாயாக இருந்தாள். இவள் தன் குடும்ப த்திற்குச் செய்ய வேண்டிய வேலைகளையும் சரியாகச் செய்து குடும்பத்தையும் பராமரித்து, எல்லா தடைகளையும் தாண்டி கர்த்தருக்கு நியாயாதிபதியாக ஊழியம் செய்து வந்தாள். குடும்பப் பெண்களும் கர்த்தருக்கென்று ஊழியம் செய்யலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் தெபொராள். 

தெபொராள் சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், நான்காவது நியாயாதிபதி யாக முதல் பெண் நியாயாதிபதியாக அமர்த்தபட்டவள். அதேபோல் பெண் தீர்க்கதரிசியாகவும் இருந்தாள். கர்த்தர் கூறுபவைகளைக் கேட்டு ஜங்களுக்குக் கூறுபவர்களே தீர்க்கதரிசி. முழங்காலில் நின்று தனக்காக அல்லாமல் பிறருக்காக ஜெபிக்கிறவர்களே தீர்க்கதரிசி. ஆபிரகாமின் மனைவியை அபிமெலேக்கு ராஜா குட்டிக் கொண்டு போனான். அன்று ராத்திரி கர்த்தர் சொப்பனத்தில் அவனுக்கு காணப்பட்டு ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி என்று அவனிடம் கூறியதை ஆதியாகமம் ல் காணலாம். முதியவரோ, இளைஞரோ, ஆணோ, பெண்ணோ எவரையும் கர்த்தர் தலைவராக ஏற்படுத்தலாம். கர்த்தர் ஒரு பொறுப்பைக் கொடு த்தால் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதே சரியானது. பழைய ஏற்பாட்டு காலத் தில் ஒரு பெண் நியாயதிபதியாக எழுப்புவது சாதாரண காரியம் அல்ல. பல பராக்கிரமான ஆண்கள் மத்தியில் இந்த தெபொராளைக் கர்த்தர் தெரிந்தெடுத் தார். ஒரு தேசம் கர்த்தரை விட்டு விட்டு வேறு தெய்வத்தை வணங்கிப் பாவத் திலிருக்கும் மக்களை, ஆண்டவர் பக்கம் திசை திருப்பிய நியாயாதிபதி தெபொ ராள். விக்கிரக ஆராதனையிலிருந்த ஜனங்களை விடுவித்து, தங்கள் தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட ஜனம் என்று உணரவைத்து ஒரு தேசத்தின் வெற்றிக்கு முன்னாடியாக நின்று போராடின பெண் தெபொராள். தெபொராள் என்ற பெய ருக்குத் தேனீ என்று பொருள். 

இந்தத் தேனீ 40 லட்சம் பூக்களிலிருந்து அனைவரும் விரும்பிச் உண்ணும் ஒரு கிலோ தேனைச் சேகரிக்கும். அத்தனை சுருசுருப்பானது. பெரிய கூட்டைக் கட் டும். தெபோராளும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவள். இஸ்ரவேல் ஜனங்கள் விரும்பும் விடுதலையை வாங்கிக் கொடுத்தவள். அவள் மிகவும் தாழ்மையுள்ள ஸ்திரீயாகக் காணப்பட்டாள். தேனீயின் கொடுக்கு கடித்தால் மிகுந்த வேதனை யைக் கொடுக்கும். அதேபோல் தேவனுக்குக் கீழ்ப்படியாத ஜனங்களுக்கு மிகவும் கடினமானவளாகக் காணப்பட்டாள். அதேபோல் தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங் களுக்கு நன்மை செய்கிறவளாக இருந்தாள் . இவள் தனக்கென்று வாழாமல் இஸ் ரவேல் ஜனங்களுக்காகவே வாழ்ந்தாள். இஸ்ரவேல் ஜனங்கள் மனந் திரும்ப வேண்டும், தேவனிடம் நெருங்கி வாழ வேண்டும், சந்துருவின் கையிலி ருந்து விடுதலையைக் காண வேண்டும் என்பதற்காகவே தன்னை அர்ப்பணித்தவள். 

தெபோராளும் பாராக்கும்:

நியாயாதிபதிகள் 4 : 6, 7 “அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும், நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.”

தேபொராளிடம் சென்று இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் அனுபவிக்கும் கொடு மைகளைப் பற்றிப் புகார் செய்தனர். தெபொராள் வழக்கமாக செய்து கொண் டிருந்த வேலையை விட்டு விட்டு எழுந்தாள். இந்தப் பணி அவளுடைய பலத் தாலும், பராக்கிரமத்தினாலும் செய்ய முடியாது. தேவனுடைய ஆவியினால் மட்டுமே செய்ய முடியும். எழுந்து புறப்பட்டு எதிரிகளைப் புறக்கணிக்க தேவனி டமிருந்து அழைப்பு வந்ததும் அவள் புறப்பட்டாள். நியாயாதிபதிகள் 5 : 7 ல் தேபொராள் தான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப் போயின என்கி றாள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் தாயாக இருந்தாள் என்றால் கிராம ங்கள் அழிந்து பாழாய்ப் போயிருந்த நிலைமையில். அந்தக் கிராமங்களும், பட்டணங்களை கர்த்தரைத் தெரியாமலிருந்ததால் அவர்களுக்குத் தெரிய வைக்கவும், அவர்களை ஆசீர்வாதமாக மாற்றவும் தெபொராளைக் கர்த்தர் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். அவளை எழுப்பினது கர்த்தர். 

அவள் பெண்ணாக இருந்தாலும் தைரியமாகச் செயல்பட, ஞானமாகச் செய ல்படக் கர்த்தர் அவளுக்குத் துணை நின்றார். அதேபோல் நாமும் சாதாரணப் பெண்ணாக இருந்தால் நம்மையும் தேவன் எழுப்புவார். தெபோராளிடம் கர்த்தர் “நான் உனக்குத் துணை நிற்பேன்” என்று கூறுவதற்கு முன் பாராக்கிடம்தான் “சிசராவையும், அவன் சேனைகளையும் கீசோன் பள்ளத்தாக்கில் உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்” என்று கூறியிருந்தார். கர்த்தர் அவனிடம் எத்தனை பேரைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும், எங்கு போக வேண்டும், எதிரியை பாராக்கிடம் எந்த இடத்தில் ஒப்புக் கொடுப்பேன் என்றெல்லாம் தெளிவாகக் கூறியதைப் பார்க்கிறோம். கர்த்தருடைய கட்டளையைக் கேட்டும் பாராக் எதிரியின் பலத் தைப் நினைத்துப் பயந்து போய் வீட்டிலிருந்தான். 

ஆனால் இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்ட தெபொராள் நப்தலி கோத்திரத்தானான பாராக்கை அழைத்து, தேவ ஜனங்களை மீட்கும் பொறுப் பையும், சிசெராவை எதிர்த்துப் போர் செய்யும் படியும், கர்த்தர் அவனிடம் கூறி னதைக் குறித்துக் கேட்டாள். மேலும் தெபொராள் பாராக்கிடம் “நப்தலி புத்திரர், செபுலோன் புத்திரர் பதினாயிரம் போரையும் கூட்டிக்கொண்டு தாபோர் மலை க்குப் போ” என்றாள். பயந்த பாராக்கைப் பலவானாக மாற்றியது விசுவாச வீரா ங்கனையான தெபொராள். பாராக்கின் இன்னுமொரு அச்சம் ரூபன் கோத்தி ரத்தார் பிரிந்து போய் விட்டார்கள். யுத்தத்திற்குப் பேர்போன தாண் கோத்தி ரத்தாரும் யுத்தத்திற்கு வரவில்லை. ஆசேர் கோத்திரத்தார் தங்கள் தொழிலில் மும்மரமாகி விட்டார்கள். அதனால் கர்த்தர் தெபொராளைத் தாயாக எழுப்பினார். நாமும் முத்த விசுவாசிகள், பெரியவர்கள் எழும்பவில்லையே என்றெண்ணி எழும்பாமல் இருக்கக் கூடாது. கர்த்தருடைய பட்சத்தில் துணை நிற்காதவர்கள் சப்பிக்கப்பட்டனர் என்று நியாயாதிபதிகள் 5 : 23 ல் உள்ளது. 

தெபோராளின் தீர்க்கதரிசனமும், போருக்குப் புறப்படுதலும்:

நியாயாதிபதிகள் 4 : 8, 9 “அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.”

அவள் பதவி ஆசை இல்லாதவளாக, யுத்தத்தை தலைமை தாங்கி நடத்த விருப்பமில்லாதவளாக இருந்தாள். எந்த ஆண்மகனும் தலைமை தாங்க முன் வராமல் தயங்கினார்கள். தெபோராளின் வார்த்தைகளைக் கேட்டும் தைரியம் இல்லாத கோழையான பாராக் தெபொராளை யுத்தத்துக்குத் தன்னோடு வரும் படியாகவும், தலைமை பொறுப்பையும் அவள் ஏற்றுக்கொண்டு வழி நடத்து ம்படியும் கேட்டான். தெபொராள் பராக்கிரமசாலி, தைரியசாலியானவள். ஒரு ராஜாவையோ, அவனிடமிருந்த பயங்கரமான படைத்தளபதியையோ நினைத் துப் பயப்படாமல் பாராக்கோடு யுத்தத்திற்குச் செல்ல ஒத்துக்கொண்டாள். பிசாசு நம்மை மாற்ற எடுக்கும் முதல் ஆயுதம் பயத்தைக் கொண்டு வருவதுதான். கர்த்தர் நம்மோடு கூட இருப்பானால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை. சங்கீதம் 144 : 1 ல் நம்முடைய கைகளைப் போருக்கும், நம்முடைய விரல்களை யுத்தத்துக்கும் படிப்பிக்கிறார் என்று உள்ளது. ஆனால் பாராக்கிடம் வெற்றியின் மேன்மை உனக்கு இல்லை என்றும் கர்த்தர் நமக்கு எதிரியான சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக் கொடுப்பார் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தாள். கோலியாத்தைத் தாவீது வென்ற போது, அந்த மேன்மை சவுல் ராஜாவுக்கு கிடைக்கவில்லை. தாவீதுக்கு அந்த மேன்மை கிடைத்ததை சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம் என்று ஜனங்கள் பாடினதிலிருந்து அறிகிறோம். ஆண்டவருக்குத்தான் தெரியும், யாருக்கு எப்பொழுது எப்படிப் பட்ட மேன்மையைக் கொடுக்க வேண்டுமென்று. யுத்த உடைகளை உடுத்திக் கொண்டு களம் இறங்கினாள் அந்த இரும்புப் பெண்மணி. இந்தப் போரின் வெற்றி தங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் பாராக்கும், தெபோராளும் யுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றது மெச்சப்படத்தக்க விஷயம். இதனால் மாபெரும் பேறு ஒன்றைக் கர்த்தர் பாராக்குக்கு வைத்திருந்தார். அது கர்த்தருடைய சிறந்த விசுவாசிகளின் பட்டியலில் இடம் பெற்றதாகும் (எபிரேயர் 11 : 32). இவ்வாறே நாம் உண்மையாகச் செய்யும் ஊழியங்களுக்கு இறுதியில் கர்த்தரிடம் பாராட்டு உண்டு. 

இஸ்ரவேலருக்கும் சிசெராவுக்கும் நடந்த போர்: 

நியாயாதிபதிகள் 4:10,14,15,16 “அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரை யும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள். அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான். பாராக் ரதங்களை யும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.”

பாராக் செபுலோன், நப்தலி புத்திரர் பதினாறாயிரம் பேரோடு தாமோர் மலைக்குச் சென்றனர். 900 இரும்பு இரதங்களும் யுத்தம் செய்ய கீசோன் பள்ளத்தாக்கில் காத்திருப்பார்கள் என்பதையும் கர்த்தர் ஏற்கனேவே தெரிவித்திருந்தார். கீசோன் பள்ளத்தாக்கில் தெபொராள் சிசெராவின் இரதங்களையும், சேனைகளையும், வித்தைகளைக் கற்றுத்தேர்ந்த படைவீரர்களையும் கண்ட தெபொராள் எழுந்து சென்று சிசெராவை கர்த்தர் உன் கையில் ஒப்புக் கொடுக்கும் நாள் இதுவே என்று பாராக்கைத் தைரியப்படுத்தினாள். உடனே பாராக்கும் சேனைகளும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். தைரியமும் விசுவாசமும் அவர்களுக்கு ஜெய த்தைத் தந்தது. சிசெரா தன்னுடைய போர் யுக்திகளை ஜெயமாக்கக் கணக்குப் போட்டான். ஆனால் தெபொராள் என்ற தலைவியின் வலிமையான திட்ட மிடுதலையோ, வல்லமையுள்ள விசுவாசத்தையோ தப்பாகக் கணக்குப் போட் டான். கர்த்தர் எதிரிகளைப் பெரிய பள்ளத்தாக்குக்கு வரச் சொல்லி அங்கு மழையை வரவழைத்து (நியாயாதிபதிகள் 5 : 4) வெள்ளப்பெருக்கை ஏற்படப் பண்ணி இருப்புரதங்களை அதில் மாட்டும்படி செய்தார். சரியான போர் ஆயுத ங்கள் கூட இல்லாமல் வலிமையான போர் சேனாதிபதியைக் கர்த்தர் வெல்ல வைத்து வெற்றி வாகை சூட்டினார். 

யாத்திராகமம் 14 : 14ல் “மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.”

அதேபோல் இந்த யுத்தத்தை தேவன் நடத்தினார். கர்த்தர் சிசெராவையும் அவ னுடைய சேனைகள் அனைத்தையும் பட்டயத்துக்கு இரையாகக் ஒப்புக் கொடுத் தார். சிசெராவின் படைகள் தோற்றுப்போனதால் யுத்தகளத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சிசெரா தன்னைக் கொன்று போடுவார்கள் என்று பயந்து தன்னு டைய இரத்தத்திலிருந்து இறங்கி தப்பித்துக்கொள்ள புறமுதுகு காட்டி கால் நடையாக ஓடி ஒளிய வகை தேடினான். கர்த்தர் தெபோராளின் தீர்க்க தரிசனத்தின்படி ஒரு பெண்ணின் கையால் அவனைச் சாகடித்தார். 

எசேக்கியேல் ராஜாக்காக கர்த்தர் ஒரு தூதனை அனுப்பிக் 185000 அசீரியர்களைக் கொன்று போட்டதை ( ) ல் பார்க்கிறோம். அதேபோல் ஒரு புதுவகையான யுத்தம் வானத்தில் உண்டாயிற்று. நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் பண்ணின. ஆவிக்குரிய யுத்தமென்பது பூமியில் நடப்பதல்ல. அது ஆவி மண்டலத்தில் நடப்பது ( நியாயாதிபதிகள் 5 : 20, எபேசியர் 6 : 12,). நட்சத்திரங்களும், தேவதூதர்களும் சிசெராவுக்கு எதிராக யுத்தம் பண்ணினார்கள். கர்த்தர் இஸ்ரவேலருக்கு இரக்கம் பாராட்டியதால் வானத்தின் பிரதிநிதியான நட்சத்திரங்களும், பூமியின் பிரதிநிதியான நதிகளும் இவர்களுக்கு உதவிபுரிய கர்த்தர் அனுமதித்தார். இதைத் தெபொராள் தனது நன்றிபாடலில் பாடினாள். யுத்தத்தில் தெபொராள் ஜெயம் பெற்றவுடன் கர்த்தர் தங்களுக்குச் கொடுத்த வெற்றிக்காக கர்த்தர் செய்தவைகளைக் கூறி நன்றி பாடல் பாடினாள். (நியாயாதிபதிகள் 5 ம் அதிகாரம்) அதேபோல் நாம் தேவனுக்காக எழும்பும் போது பரிசுத்த ஆவியானவரும், தேவதூதர்களும் நம்முடைய பக்கம் சார்ந்து வெற்றியைத் தருவார்கள் (நியாயாதிபதிகள் 4 : 14, 15). 

முடிவுரை:

இந்த யுத்தத்திற்குப் பின் தேசம் 40 வருடங்கள் அமைதலாயிருந்தது. கர்த்தர் தெபொராளுக்குளிருந்து வரங்களையும், வல்லமையையும், தைரியத்தையும் கொடுத்தார். ஜனங்களின் கூக்குரலுக்குச் செவி கொடுத்து அவர்களுக்கு கானா னின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தாள். ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகள் வழிதப்பித் போகும்போது நல்வழிப்படுத்துவது போல தெபொராள் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தாயாக இருந்து அவர்களின் தவறுக ளைத் திருத்தி மீண்டும் தேவ பயமுள்ள ஜனங்களாக மாற்றினாள். இயேசு வோடு கூட பல பெண்கள் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர் (மத்தேயு 27 : 55). பெண் களாகிய நாம் ஒவ்வொருவரும் தெபொராளைப் போல கர்த்தருக்காக எழும்ப வேண்டும். இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அற்பமானவர்கள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய வேண்டும். இதைத்தான்,

1நாளாகாமம் 16 : 23 “பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.”

என்று கட்டளையிட்டிருப்பதால் அதன்படி நாம் மற்றவர்களுக்கு இரட்சிப்பைப் பற்றி அறிவிப்போம். தேவ ஆசீர்வாதம் நம்முடைய வாழ்வில் நீடிக்க நாம் தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். பாராக்கை எழுப்பின தெபொராளைப் போல நாம் அநேக பயத்திலிருக்கிற பாராக்குகளை பலவான்களாகக் கர்த்தருக்குள் எழுப்புவோம். இந்தத் தெபொராள் நமக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறாள். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago