லூக்கா 13 : 10 – 13 “ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக் கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.”
இயேசு ஒரு ஓய்வுநாளில் தேவாலயத்தில் பிரசங்கம் பண்ணிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த ஆலயத்தில் 18 வருடமாகப் பலவீனப்படுத்தும் ஆவியோடுள்ள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். 18 வருடம் என்பதால், இது பிறவியில் அந்த பெண்ணுக்கிருந்த கூன் அல்ல. இந்தப் பெண் வேதத்தில் கூறப்பட்டுள்ள கொடிதான நோயில் மிகவும் பாதிக்கப்பட்டவளாக இருந்தாள். அந்த ஆவியானது அவள் நிமிரக் கூடாத படி, அவளைக் கட்டி வைத்திருந்தது. அன்றிலிருந்து அவளால் நிமிர்ந்து பார்க்க முடியாதவளாக இருந்தாள். இயேசு அந்தப் பெண்ணைத் தனிப்பட்ட விதத்தில் சந்தித்தார். வியாதிகள் பாவத்தின் விளைவாகவோ, சாத்தான் கொண்டு வருவதன் மூலமாகவோ வரலாம். சாத்தான் திருடவும், கொல்லவும், அழிக்கவும் தான் வருவான். சரீரத்தின் சுகத்தை, ஆரோக்கியத்தை, பலத்தை, வல்லமையைத் திருடுகிறான்.
உலகத்திலுள்ளவர்கள் அந்தப் பெண்ணின் கூனைப் பார்த்து, அது இயற்கையாக ஏற்பட்ட கூன் என்று எண்ணினார்கள். ஆனால் கர்த்தரோ, அது சாத்தானின் கட்டு என்பதை அறிந்தார். ஆனால் இயேசுவோ அந்தக் கட்டிலிருந்து அந்தப் பெண்ணை விடுதலையாக்க அவளைக் கண்டார், அழைத்தார், “உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப் பட்டாய் என்று சொல்லி,” தன்னுடைய கைகளை அந்தப் பெண்ணின் மேல் வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து பார்த்துத் தேவனை மகிமைப்படுத்தினாள். இயேசு நமக்கு ஜீவன் உண்டாயிருக்கும், அது பரிபூரணப் படவும், கட்டுண்டவர்களை விடுதலையாகவும் இந்த பூமிக்கு வந்தார். இதைத் தான் பேதுரு
1 பேதுரு 2: 24 ல் “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்து இருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்றார்.
இந்த அற்புதத்தில் 18 வருடமாக கூனியாக இருந்து, பிசாசின் கட்டினால் கட்டப்பட்டிருந்த ஒரு பெண்மணியை இயேசு ஆலயத்தில் கண்டு, அவளைத் தன்னுடைய வல்லமையுள்ள கரத்தினால் அவளைத் தொட்டு சுகம் கொடுத்து நிமிர வைத்ததைப் பார்க்கிறோம். 18 வருடமாக சரிப்படுத்த முடியாத கூனை இயேசுவின் வல்லமையுள்ள, அற்புதங்களைச் செய்யும் கரம் தொட்டதினால் நிமிரப் பெற்றாள். வேதத்திலுள்ள எல்லா சுவிசேஷங்களும் கர்த்தர் தமது கரத் தினால் செய்த அற்புதத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களுக்கும் வியாதிகளும், பலவீனங்களும், வருடக்கணக்காக சுகமாகாமல் இருந்தாலும், இந்த நிமிடத்தில் இயேசுவை நோக்கி, இயேசுவே உமது வல்லமையுள்ள, விடுதலையாக்கும் கரத்தினால் என்னைத் தொடும் என்று வேண்டுங்கள். அப்போது உங்கள் பலவீனங்களை இயேசு ஏற்றுக்கொண்டு, உங்கள் நோய்களைச் சுமந்து, கட்டுக்களைத் தகர்த்தெறிந்து விடுதலையாக்குவார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…