ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்:
லூக்கா 8 : 41, 42 “அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படிஅவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.”
இயேசு லேகியோன் என்ற பிசாசு பிடித்த மனிதனுக்குள்ளிருந்த அனேக பிசாசுகளைத் துரத்தின பின் மறுபடியும் இக்கரைக்கு வந்தார். அப்பொழுது யவீரு என்னும் பெயர் கொண்ட ஜெபஆலயத்தலைவன் இயேசுவிடம் வந்து தன்னு டைய குமாரத்தி வியாதியாயிருக்கிறாள் என்று கூறாமல், மரண அவஸ்தைப் படுவதாகக் கூறினான். இயேசு வந்து அவருடைய கைகளைத் தன் மகளின் மேல் வைத்தால், அவள் ஆரோக்கியம் அடைவாளென்றும், பிழைத்துக் கொள்வாளெ ன்றும் கூறினான். இயேசுவின் கைகளுக்குள்ள வல்லமையைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். இந்த ஜெபஆலயத்தலைவன் ரோம அலுவலகத்தில் வேலை செய்கிறவன். இவன் ஆசாரியனின் பலிகளைச் செலுத்தக் கூடியவன், பழைய ஏற்பாட்டை நன்றாகத் தெரிந்தவன், மனிதர்களுக்குத் தேவனைக் குறித்து போதிக்கிறவன், தெய்வ பக்தியுள்ளவன். அப்படிப்பட்ட இந்த மனிதன் இயேசுவின் பாதத்தில் விழுந்து பணிந்து கொண்டதைப் பார்க்கிறோம். யாராயிருந்தாலும் இயேசு வணங்கத்தக்கவர் என்பதை யாவரும் அறியும்படியாக ஜெபாலயத் தலைவனின் செயல் அமைந்தது.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடான கிறிஸ்துவின் கால்களில் விழுந்ததைக் காண்பிக்கிறது. மோசேயின் நியாயப்பிரமாணம் சிலுவையில் முடிந்ததைக் காண்பிக்கிறது. இயேசு ராஜாதி ராஜா என்பதைக் காண்பிக்கிறது. இயேசுவின் வல்லமைக்கு முன் பலிகள் ஒன்றுமில்லை என்றும், இயேசுவுக்கு முன்பாக நியாயப்பிரமாணமும் ஒன்றுமில்லை என்றும் அறிந்து கொண்டான். இயேசு ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனோடு கூடப் போனார். ரோம சாம்ராஜ்யத்தின் அலுவலராயிருந்தாலும், ஜெபஆலயத் தலைவ னாயிருந்தாலும், கானானியப் பெண்ணாயிருந்தாலும், பாவியான பெண்ணாயி ருந்தாலும், கள்ளனாயிருந்தாலும் இயேசு எல்லோரின் வேண்டுதல்களையும் கேட்பவராக இருப்பதை அறிகிறோம். அப்போது திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, தன்னுடைய குணமாகாத வியாதியினால், இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டுக் குணம் பெற்றாள். அதனால் இயேசுவின் பிரயாணம் தாமதமானது.
ஜெப ஆலயத் தலைவனுக்கு வந்த செய்தி:
மாற்கு 5 : 35 “அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.”
பெரும்பாடுள்ள பெணணால் இயேசுவின் பிரயாணம் காலதாமதமானதால் யவீரு மிகவும் வேதனைப்பட்டாலும், இயேசுவிடம் தன்னுடைய கஷ்டத்தைக் கூறி விட்டதால் காலம் தாழ்ந்தாலும், இயேசு பார்த்துக் கொள்வார் என்ற விசுவாச த்துடன் இருந்தார். ஆனால் அவருடைய வீட்டிலிருந்து தன்னுடைய மகள் மரித்து விட்டதாகச் செய்தி வந்தது. போதகரை அழைத்து வரவேண்டாம் என்று அந்தச் செய்தியில் கூறினர். ஒரு மணி நேரம் முன்னால் போயிருந்தால் என் மகள் பிழைத்திருப்பாள் என்று அந்தத் தகப்பன் கலங்கி இருப்பான். அதனால் யவீரு நம்பிக்கை இழந்திருப்பதைப் பார்த்த இயேசு அவருடைய விசுவாசத்தை ஊக்குவிக்க எண்ணினார்.
இதேபோல் கர்த்தர் விசுவாசத்தை ஊக்குவித்துச் செயல்பட்டதைப் பல இடங் களில் காணலாம். அதில் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடச் சென்றபோதும் (ஆதியாகமம் 22 :2, யாக்கோபு 2 : 21, 22) மோசே செங்கடலைப் பிளக்க இருந்த போதும் (யாத்திராகமம் 14 :10 – 22) தாவீது கோலியாத்தை வீழ்த்த நினைத்தபோதும் (1 சாமுவேல் 17 :44 – 47) யோசபாத் அமோனியரையும், மோவாபியரையும், சேயீர் மலை தேசத்தாரையும் வீழ்த்த நினைத்தபோதும் (2 நாளாகமம் 20 :1,2,15) கர்த்தர் இவர்களின் விசுவாசத்தை ஊக்குவித்து செயலில் இறங்க வைத்து ஜெயம் பெற வைத்தார் இந்த அற்புதத்திலும் யவீருவின் விசுவாசத்தை ஊக்குவித்தார்.
யவீருவின் வீட்டில் இயேசு:
லூக்கா 8 : 50 “இயேசு ஜெபஆலயத்தலைவனின் வீட்டில்:இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
மாற்கு 5 : 38 – 41 “ ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.”
இயேசு ஜெபஆலயத்தலைவனின் விசுவாசத்தைத் தூண்டுவதற்காக பயப்படாதே என்றும், விசுவாசமுள்ளவனாயிரு என்றும் கூறினார். விசுவாசத்துடன் இருப்பா யானால் உன்னுடைய மகள் இரட்சிக்கப்படுவாள் என்றும் வாக்குறுதி அளித்தார். இயேசு சுகமாக்குகிறவர் மட்டும் அல்ல, நம்முடைய உணர்வுகளை, பாசத்தை, வேதனைகளைப் புரிந்து கொள்கிறவர். இயேசு ஜெபஆலயத்தலைவனின் வீட்டிற் குச் சென்றார். அங்கு அனைவரும் கூடி துக்கத்தோடு அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களைப் பார்த்து பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக் கிறாள் என்றார். இயேசு தம்மோடு வீட்டிற்குள் நுழைவதற்கு யாக்கோபு, பேதுரு, யோவானை மட்டும் தான் அழைத்தார். ஏன் அவர்கள் மூவரை மாத்திரம் உள்ளே அழைத்துக்கொண்டு போனாரென்றால் இவர்கள் மூவரும் இயேசுவை அளவில்லாமல் நேசித்தவர்கள்.
இயேசு பிள்ளை நித்திரையாயிருக்கிறாள் என்று கூறியதால், அங்குள்ளவர்கள் மரித்த பிள்ளையைப் பார்த்து நித்திரையாயிருக்கிறாள் என்று கூறுகிறாரே என்று நகைத்தார்கள். இயேசு வந்துவிட்டால் இந்தப் பிள்ளையை எழுப்புவார் என்று யாரும் விசுவாசிக்கவில்லை. எனவே அவர்களனைவரையும் இயேசு வெளியே போகச் சொன்னார். பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தம்மோடு கூட வந்த மூன்று பேரையும் கூட்டிக்கொண்டு பிள்ளையைப் படுக்க வைத்திருந்த இடத் திற்குள் இயேசு நுழைந்தார். மரித்த பிள்ளையின் கையைப் பிடித்து சிறு பெண்ணே எழுந்திரு (தலீத்தாகூமி) என்றார். தலீத்தாகூமி என்பது ரோமர்கள் மத்தியில் தினமும் பயன்படுத்தப்படுகிற ஒரு லத்தீன் வார்த்தை. எந்தக் கரம் தன்னுடைய பிள்ளைக்கு அற்புதம் செய்யும் என்று ஜெபாலயத்தலைவனான யவீரு நினைத்தானோ, அந்த இயேசுவின் கரம் மரித்துக்கிடந்த பிள்ளையைத் தொட்டுத் தூக்கியது.
இயேசு செய்த அற்புதம்:
மாற்கு 5 : 42, 43 “உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்.”
இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, மரித்த அந்த பன்னிரண்டு வயதுப் பெண் எழுந்தாள். உடனே நடந்தாள். அங்கிருந்த பெற்றோர்களும், சீஷர்களும் இயேசு உயிரோடு எழுப்பிய முதலாம் அற்புதத்தைப் பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டு பிரமித்தனர். அதோடு அந்தப் பெண்ணுக்கு மிகவும் அக்கறையுடன் ஆகாரம் கொடுக்க இயேசு சொன்னதையும் பார்க்கிறோம். இந்த அற்புதத்தை ஒருவரு க்கும் சொல்ல வேண்டாம் என்று உறுதியாய் கட்டளையிட்டார். யவீருவின் விசு வாசம் அவருடைய மகளை உயிரோடெழுப்பச் செய்தது. ரோமர்களின் கீழிருந்த போதும், யவீருவின் பெரிய விசுவாசம் அவனுடைய மகள் உயிரோடெழுப் பட்டதைப் பார்க்கிறோம். அதேபோல் நாமும் விசுவாசத்துடன் ஜெபத்தில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று வாக்களித்த ((மத்தேயு 21: 22) இயேசுவிடம் சாவுக் கேதுவாக இருக்கும் நமது சரீரத்தையும், செத்துக்கிடக்கும் நமது உணர்வு களையும் இயேசுவின் கிருபையின்படி (சங்கீதம் 119 : 80) உயிர்ப்பிக்க மன்றாடு வோம். தேவனுடைய கரத்தின் வல்லமையைப் பார்த்த நாம் இயேசுவின் கரம் நம்மைத் தொட வேண்டுமென்று வாஞ்சிப்போம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…