தேவ கரம்

சீஷர்களின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்

பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்: 

மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்த படியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப் படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.

இயேசு 5 அப்பம் 2 மீனை ஆசீர்வதித்து 5000 பேரைப் போஷிக்கச் செய்து அனுப் பிய பின், தான் துரிதமாகச் செயல்பட்டு தம்முடைய சீஷர்களை தமக்கு முன்னே அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்கு எதிராகப் போகும்படி துரிதப்படுத்தினார். ஏனெனில் ஜனங்கள் இயேசுவை ராஜாவாக்க முயற்சித்ததால், அதை அறிந்த இயேசு மறுபடியும் அவர்களிடமிருந்து விலகி தனியாக மலையின்மேல் ஏறி ஜெபம் பண்ணச் சென்றார். சீஷர்கள் மட்டும் அந்த இருட்டு வேளையில் படகில் ஏறி கடலின் கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு இயேசு இல்லாமல் பயணமானார்கள். சாயங்கால வேளையில் கரையில் இயேசு தனிமையாக இருந்தார். சீஷர்கள் படகில் போய்க்கொண்டிருந்தபோது பெருங் காற்றினால் கடல் கொந்தளித்தது. காற்று படகுக்கு எதிராக வீசியது. சீஷர்களோ தாங்கள் சரியாகப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் உண்மையான நிலையை இயேசு கண்டார். மலையின்மேல் இருந்தாலும், சீஷர்களின் நிலைமையை அறிந்து, இரவின் நாலாம் ஜாமத்தில் கடலில் நீந்தி வராமல், நீரின் மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார். 

சீஷர்களின் பயத்தை இயேசு போக்கினார்: 

மாற்கு 6 : 49 – 51 “அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.”

இருளின் மத்தியில் சீஷர்கள் பயந்த சூழ்நிலையில் இருந்ததால் இயேசு நடந்து வருகிறதைப் பார்த்து ஆவேசம் என்று சத்தமிட்டனர் (மாற்கு 6 : 48, 49). இதற்கு முன் அவர்கள் இதைப் போன்ற எந்த ஆவேசத்தையும் பார்த்ததில்லை. எனவே அலறினார்கள். கர்த்தர் தான் சமுத்திரம் புரண்டு வந்தபோது கதவுகளால் அடைத் தவர் (யோபு 38 :8), அவைகளிடம் அதன் எல்லையைக் குறித்து அதற்குத் தாழ்ப்பா ள்களையும், கதவுகளையும் போட்டு, இம்மட்டும் மிஞ்சி வராதே என்றவரும் அவரே (யோபு 38:10,11) இயற்கை மட்டுமல்ல, கடலும் கூட அவருக்குக் கட்டுப் படும் என்றறிகிறோம். சீஷர்களின் படகு அமிழ்ந்து விடுமே என்று ஓடி வந்த இயேசு, நமது வாழ்க்கையும் அமிழ்ந்து போக விட மாட்டார். சீஷர்கள் எல்லோ ரும் மிகவும் கலக்கம் அடைந்தனர். அதனால் இயேசு அவர்களோடே பேசி நான் தான் என்று அவர்களைத் திடன் கொள்ளச் செய்தார். பயப்படாதிருங்கள் என்று கூறினார். அவர்கள் இருந்த படகில் இயேசு ஏறினார். உடனே காற்று அமர்ந்தது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

பேதுருவின் பயத்தை இயேசு போக்கினார்:

மத்தேயு 14 : 28 – 32 “பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. “

படகில் உள்ள அத்தனை பேருக்கும் இல்லாத ஒரு ஆசையும், வாஞ்சையும் பேதுருவுக்கு வந்தது. அந்த வாஞ்சையினால் இயேசுவிடம் தானும் இயேசுவைப் போல் கடலில் மேலே நடக்க வேண்டும் என்று கேட்டான். இயேசு வா என்று கூறி னார். இயேசு எல்லோரையும் வா என்றுதான் அழைப்பார். பேதுரு படகை விட்டி றங்கி ஜலத்தின் மேல் நடந்தான். பேதுரு கடலின் மேல் நடக்கக் கேட்டவுடன் இயேசு கடிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்ட விசுவாசத்துடன் பேதுரு இருந்த தால் தான், இயேசு அவரை மிகுதியான வல்லமையுடன் பயன்படுத்தினார். பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கித்த செய்தியின் மூலமாக 3000 பேர் மனந்திரும்பச் செய்தார். காற்று பலமாக வீசியதால் அதுவரை இயேசுவையே பார்த்துக் கொண்டிருந்தவர் காற்றைப் பார்த்தவுடன் அமிழ்ந்து போகிறான். பேதுரு திறமையான மீனவன். அவன் எந்த ஆழத்தில் சென்றாலும் நீந்தி வெளியே வர அவனுக்குத் தெரியும். நடந்து இயேசுவிடம் செல்ல வேண்டும் என்ற எண்ண த்தில்தான் பயந்தான். பேதுரு அந்த நேரத்தில் ஒரு சின்ன ஜெபத்தை ஏறெடுக் கிறான். “ஆண்டவரே இரட்சியும்” என்று கூப்பிட்டான். 

உடனே இயேசு கையை நீட்டி“அற்பவிசுவாசியே” என்று கோபப்பட்டுத் தூக்கினார். அவர்கள் படகில் ஏறினவுடன் காற்று அமர்ந்தது. ஜலத்தின்மேல் நடப்பதற்கு பயப்படாத பேதுரு, அதற்குச் சம்பந்தம் இல்லாத காற்றைப் பார்த்துப் பயப்பட் டான். அப்பொழுது படகில் உள்ளவர்கள் “உண்மையிலேயே நீர் மெய்யான தேவன்” என்று இயேசுவைப் பணிந்து கொண்டனர். வாஞ்சையும், விசுவாசமும் உள்ளவர்களால் மட்டுமே அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பேதுருவிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். பேதுரு அமிழ்ந்து போகையில் இயேசுவின் கரம் உடனே பேதுருவைத் தூக்கி எடுத்ததைப் போல, இயேசு நம்மு டைய போராட்டங்களிலும், கஷ்டங்களிலுமிருந்து உடனடி தீர்வை அவருடைய கரத்தினால் தருவார். கர்த்தர் பாதாளத்தின் வல்லமையிலிருந்து நம்மை இரட்சி க்கிறார். பாவ பழக்க வழக்கத்திலிருந்தும் நம்மை இரட்சிக்கிறார். சத்துருக்களின் பிடியிலிருந்தும் பிசாசின் பிடியிலிருந்தும் நம்மை இரட்சிக்கிறார். இரட்சிப்பின் ஒளியையும், பிரகாசத்தையும் நமக்குள் வீசச் செய்கிறார். மத்தேயு 17 : 1 – 7 ல் இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் அழைத்துக் கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அங்கு அவர்கள் கண்ட காட்சியும், கேட்ட கர்த்தரின் சத்தமும் அவர்களைப் பயத்தில் ஆழ்த்தி, முகங்குப்புற விழுந்தார்கள். அப்பொழுது இயேசுவின் அன்புக் கரம் அவர்களைத் தொட்டு பயப்படாதேயுங்கள் என்றது. இயேசுகிறிஸ்து நம்மைத் தொடும்போது நமக்குள் இருக்கிற பயங்களெல்லாம் மறையும். ஏனென்றால் வேதம் நமக்கு, 

2 தீமோத்தேயு 1 : 7 ல் “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago