மத்தேயு என்ற பெயருக்கு யேகோவாவின் ஈவு என்று பொருள். இவனுக்கு லேவி என்ற மற்றொரு பெயரும் உண்டு – மாற் 2:14 இவன் 12 அப்போஸ்தலரில் ஒருவன் மத் 10 : 3, மாற் 3 :18, லூக் 6 : 15 அப் 1:13 இவனுடைய ஊர் கலிலேயாவிலுள்ள கப்பர்நாகூம். இவன் ஒரு ஆயக்காரன். அதாவது வரிவசூலிப்பவன். இவனுடைய தந்தையின் பெயர் அல்பேயு. இவன் யூத குலத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு நாள் வரிவசூலித்துக் கொண்டிருக்கும்போது இயேசு இவனை அழைத்து தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார் – மத் 9 : 9 – 13, மாற் 2 : 14, லூக் 5 : 27, 28 இயேசு அழைத்தவுடன் தன் வேலையை விட்டுவிட்டவன். ஒரு பெரிய விருந்து செய்து தன்னுடைய சிநேகிதரும் இயேசுவை சந்திக்கும்படி செய்தான்.
இயேசு உயிர்த்தெழுந்த பின் எருசலேமில் தங்கியிருந்தவர்களில் இவனும் ஒருவன். இதற்கு 25 வருடங்களுக்குப் பின் இந்த முதலாம் சுவிசேஷத்தை எழுதினான். இதன்பின் பெர்சியா, மேதியா தேசங்களில் சுவிசேஷ ஊழியம் செய்தான். இந்த சுவிசேஷம் ஒரு யூதன் யூதரைப் பற்றி யூதருக்காக எழுதப்பட்டது. அவர்கள் பேசின “அரேமிக்” பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. மத்தேயு கலிலேயனாயிருந்தபடியால் இயேசு கலிலேயாவில் செய்த ஊழியத்தைப் பற்றியும், அவர் உயிர்த்தெழுந்த பின் கலிலேயாவில் கொடுத்த தரிசனங்களைப் பற்றியும் விசேஷித்து எழுதியிருக்கிறான்.
இந்த சுவிசேஷத்தை எழுதியதன் முக்கிய நோக்கம் யூதர்கள் காத்திருந்த மேசியா இந்த இயேசுதான் என்பதே – 1:23, 2:2, 6, 3:17, 4:15-21: 5, 9 22 : 44, 45,26 :64, 26:64, 27:11, 27-37 பரலோகராஜ்ஜியம் என்றசொல் இந்நூலில் 32 தடவை வருகிறது. புதிய ஏற்பாட்டில் வேறெந்த நூலிலும் இச்சொல் காணப்படவில்லை. மத்தேயு பிற அனைத்து புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களை விட அதிகமான அளவு பழையஏற்பாட்டு மேற்கோள்களை (சுமார் 130) யும், குறிப்புகளையும் பயன்படுத்துகிறார். “தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி“ என்ற நிலையில் வரும் வசனங்கள் 9 தடவை இந்நூலில் காணப்படுகிறது. பிற நூல்களில் இது இல்லை. இயேசு தீர்க்கதரிசிகளின் எதிர்பார்ப்பு பெட்டகமாயிருந்தார் – 12:39,40 13:13—15, 35, 17:5 – 13
இந்நூல் மனுஷகுமாரன், கர்த்தரின் தாசன், தாவீதின் குமாரன் போன்ற பெயர்களை இயேசுவுக்கு வழங்கியுள்ளது. இயேசுவின் முக்கியமான 5 பிரசங்கங்கள் இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.
1. மலைப்பிரசங்கம் – 5:3-7:27
2. சீடர்களுக்கான அறிவுரை – 10:5-42
3. பரலோக ராஜ்யம் பற்றிய உவமைகள் – 13:3-52
4. சீடத்துவத்தின் நிபந்தனைகள் – 9:3-38
5. ஒலிவமலை பிரசங்கம் – 24:3-25:46 முதலியன.
மத்தேயு எத்தியோப்பியாவில் பட்டயத்தால் சிரச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தான்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…