மாற்கு என்ற பெயருக்கு தேவகிருபை என்று பொருள். இவனுடைய யூத பெயர் யோவான் – அப் 12:12,25 இவனுடைய தாயின் பெயர் மரியாள். இவனுடைய சகோதரன் சீபுரு தேசத்தானாகிய பர்னபா. இவன் யூதகுலத்தைச் சார்ந்தவன். பேதுரு மூலமாய் விசுவாசியானான். இவனுக்கு எருசலேமில் ஒரு வீடு இருந்தது. அங்கு விசுவாசிகள் கூடி ஜெபிப்பார்கள். மாற்குவை பேதுரு :என் குமாரனாகிய மாற்கு” என்று கூறுகிறார் – 1பேது 15:13 கெத்செமனே தோட்டத்தில் கர்த்தர் பிடிக்கப்பட்டபின்பு துப்பட்டியைப் போட்டுவிட்டு நிர்வாணியாய் ஓடித்தப்பிய வாலிபன் இவனாக இருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர். பவுலோடும் கூட இவன் ஊழியம் செய்தான் – அப் 12:25 பவுல் ரோமாவில் கைதியாக இருக்கும் போது மாற்கு உடனிருந்ததாக எழுதியுள்ளான். – கொலோ 4:10, பிலே 24 பவுலின் முடிவிலும் “மாற்குவை உன்னுடன் கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்கு பிரயோஜனமுள்ளவன் – 2தீமோ 4: 11 என்று தீமோத்தேயுவிடம் கூறியதைக் காணலாம். ஆக இவன் பவுலுடன் – அப் 13 : 1—13, கொலோ 4: 10 பிலே 24 பர்னபாவுடன் – அப்15:39 பேதுருவுடன் – 1பேது 5:13 ஊழியம் செய்தவன்.
மாற்கு ரோம மக்களுக்காக இந்த சுவிசேஷ நூலை எழுதியதாகத் தெரிகிறது. இதில் இயேசுவை பாடுபடும் தாசனாகவும், மேசியாகவும், தேவகுமாரனாகவும் காட்டுகிறார். நான்கு சுவிசேஷ நூல்களிலும் இது மிகச் சிறியது. உடனே, அப்பொழுது என்ற சொற்கள் இந்நூலில் சுமார் 42 தடவைகள் உபயோகித்திருப்பதைக் காணலாம். இந்நூலில்
1. இயேசுவின் ஊழிய ஆயத்தம் – 1:1-13
2. இயேசுவின் கலிலேய ஊழியம் – 1:14-9:50
3. இயேசுவின் பெராயா ஊழியம் 10ம் அதிகாரம்
4. இயேசுவின் எருசலேம் ஊழியம் – 11-16 அதிகாரங்கள் ஆகியவைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
பழைய ஏற்பாட்டிலிருந்து 63 மேற்கோள்களை மட்டுமே காணமுடியும். நான்கு சுவிசேஷங்களிலும் இயேசுவின் நற்செய்தியைக் குறித்த தெளிவான விவரங்களைத் துல்லியமாகத் தருவது மாற்கு சுவிசேஷம் மட்டுமே. சீஷர்கள் துன்பம் அனுபவிக்க நேரும் என இந்நூலில் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம் – 3:21,22,30, 8:34-38, 10:33,34, 45 13:8 11-13 மாற்கு கடைசியாக அலெக்சாண்டிரியா பட்டணத்தின் தெருக்களின் வழியாய் கொடூரமாய் தரையில் இழுத்துக் கொண்டு போய் இரத்தசாட்சியாய் மரித்தான்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…