புதிய ஏற்பாடு வேத பாடம்

புதிய ஏற்பாடு நூல்களின் விளக்கம்

  1. மத்தேயு: கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை அரசரான மேசியா என்ற நிலையில் தருகிறது.
  2. மாற்கு: கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பாடுபடும் தாசன் என்ற நிலையில் தருகிறது.
  3. லூக்கா: கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மனுஷகுமாரன், இரட்சகர் என்ற நிலையில் தருகிறது.
  4. யோவான்: கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை தேவகுமாரன், இஸ்ரவேலின் மேசியா என்ற நிலையில் தருகிறது.

இந்த நான்கு புத்தகங்களையும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்  எனலாம்.

  1. அப்போஸ்தலருடைய நடபடிகள்: இது லூக்கா எழுதிய சுவிசேஷநூலின் பின்னிணைப்பு. சபையின் தொடக்கத்தையும், வளர்ச்சியையும் பற்றிக் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவின் பரமேறுதல் முதல் ரோமசிறையில் பவுல் கைதியாயிருத்தல் வரை குறிப்பிடுகிறது.

இதை வரலாற்று நூல் எனலாம்.

  1. ரோமர்: பவுல் ரோமைச் சென்றடையுமுன்னே தமது செய்தியின் மாதிரியை ரோம சபைக்குக் கொடுக்கிறார்.
  2. 1கொரிந்தியர்: கொரிந்து சபையின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கூறி விசுவாசிகள் எவ்வாறு வாழவேண்டுமென்றும் பவுல் போதிக்கிறார்.
  3. 2கொரிந்தியர்: பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தையும், ஊழியத்தையும் உறுதிப்படுத்தி கொரிந்தின் தவறான போதகர்களைக் கண்டிக்கிறார்.
  4. கலாத்தியர்: புறஜாதிகளிலிருந்து கிறிஸ்துவ விசுவாசத்துக்கு வந்தவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமெனில் நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்ற யூதர்களின் போதனையைப் பவுல் கண்டிக்கிறார்.
  5. எபேசியர்: பவுல் எபேசுவிலும் பிற இடங்களிலுமுள்ள விசுவாசிகளை கிறிஸ்துவ விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறார். கிறிஸ்துவ சபையின் நோக்கத்தையும், பண்பையும் பற்றி விளக்குகிறார். யூதர்களும், புறஜாதியரும் தேவனுக்கு முன்பாக சமம் என்கிறார்.
  6. பிலிப்பியர்: பவுல் உண்மை மகிழ்ச்சி கிறிஸ்துவில் மட்டுமே என்கிறார்.
  7. கொலோசெயர்: கொலோனிக்கேய சபையின் தவறான உபதேசங்களை எதிர்த்து, விசுவாசிகளின் தேவை கிறிஸ்துவில் உண்டென்கிறார்.
  8. 1தெசலோனிக்கேயர்: கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி பவுல் கூறுகிறார்.
  9. 2தெசலோனிக்கேயர்: பவுல் இரண்டாம் வருகையைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கிறார்.
  10. 1தீமோத்தேயு: பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனையளிக்கிறார்.
  11. 2தீமோத்தேயு: பவுல் தனது இதய வாஞ்சைகளையும், வாழ்வில் முதலிடம் பிடித்தவைகளையும் பற்றிக் கூறுகிறார்.
  12. தீத்து: பவுல் தீத்துவுக்கு கிரேத்தா சபைக்கு வேண்டிய பொறுப்புணர்வைப் பற்றிக் கூறுகிறார்.
  13. பிலேமோன்: பவுல் பிலேமோனிடம் அவரைவிட்டு ஓடிப்போன அடிமையான ஓனேசிமுவை மன்னித்து சகோதரனாக எண்ண வேண்டுமென்கிறார்.
  14. எபிரேயர்: பவுல் கர்த்தரின் முழுமைத்துவத்தையும், மேன்மைத்துவத்தையும் விளக்குகிறார்.

இந்த 14 நூல்களும் பவுலின் நிருபங்கள்.

  1. யாக்கோபு: எருசலேமின் சபை மூப்பரும், கர்த்தராகிய இயேசுவின் சகோதரருமான யாக்கோபு ஒழுக்கக் கேடுகளை சுட்டிக்காட்டி, நடக்க வேண்டிய முறைகளைப் போதிக்கிறார்.

இது யாக்கோபு என்ற இயேசுவின் சகோதரன் எழுதியது.

  1. 1பேதுரு: பேதுரு பாடனுபவிக்கும் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் நிற்க உற்சாகப்படுத்துகிறார்.
  2. 2பேதுரு: பேதுரு கள்ளத்தீர்க்கதரிசிகளைப் பற்றி எச்சரிக்கிறார். விசுவாசிகள் விசுவாசத்திலும், கர்த்தரை அறிகிற அறிவிலும் வளர அழைப்பு விடுவிக்கிறார்

இது பேதுரு எழுதியது.

  1. 1யோவான்: அப்போஸ்தலராகிய யோவான் விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறார்.
  2. 2யோவான்: அப்போஸ்தலராகிய யோவான் ஒரு கனமான பெண்மணிக்கும் அவளது குடும்பத்தினருக்கும் எழுதியது. சத்தியத்தைப் பற்றியும், அன்பைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.
  3. 3யோவான்: அப்போஸ்தலராகிய யோவான் காயுவுக்கு, ஆத்துமா வாழ்வது பற்றியும், சத்தியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

இவைகள் இரண்டும் யோவான் எழுதியது.

  1. யூதா: இயேசுவின் சகோதரரான யூதா சபைகளிடம் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், பொய் உபதேசங்களை எதிர்த்து விசுவாசத்தைக் காக்கவும் உபதேசிக்கிறார்.

இது யூதா என்ற இயேசுவின் சகோதரன் எழுதியது.

  1. வெளிப்படுத்தின விசேஷம்: அப்போஸ்தலனாகிய யோவான் கூறிய ஒரு தீர்க்கதரிசன நூல். பாடுகள் வழியாக செல்வோருக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. கிறிஸ்துவின் ஆளுகையை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago