மத்தேயு 3 : 11, 12 “மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.நூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.”
இயேசுவின் முதலாம் வருகைக்காக, வழியை ஆயத்தம் பண்ண வந்த யோவான்ஸ்நானகன், மக்கள் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காக ஞானஸ்நானம் கொடுப்பதாகக் கூறினார். தனக்குப்பின் வருகிற இயேசு தன்னை விட வல்லவர் என்றும், அவருடைய பாதரட்சைகளைக் கூட சுமப்பதற்கு தான் பாத்திரன் அல்ல என்றும் கூறினார். அந்த இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பார். அவருடைய இரண்டாம் வருகையின் போது அக்கினியி னால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான். அக்கினி என்பது நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. கோதுமையையும் பதரையும் களஞ்சியத்தில் பிரிப்பது போல, ஜனங்களை இயேசு பிரித்தெடுப்பார். கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பது போல தன்னுடைய ஜனங்களை அவருடைய ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வார். பதரை அக்கினியால் சுட்டெரிப்பது போல, அக்கிரமம் செய்கிறவர்களை அக்கினி சூளையில் போடுவார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…