யோவான் 1 : 1 – 5 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.”
யோவான் அப்போஸ்தலர் இயேசுவை வார்த்தை என்று அழைத்து தனது சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறான். ஆதியிலே வானமும் பூமியும் படைக்கப் பட்டன. ஆனால் வார்த்தை படைக்கப்படவில்லை. வார்த்தையாகிய இயேசு எப்பொழுதுமே இருந்தார், இருக்கிறார், இருப்பார் (வெளிப்படுத்தல் 1 : 8, 11). தேவனுடைய வார்த்தையாக இருந்த அவர், மனிதனாக வந்த போது இயேசு என்று அழைக்கப்பட்டார் (யோவான் 1 : 14). ஆதியிலே அவர் தேவனோடிருந்தார். யாவுமே தேவனுடைய வார்த்தை மூலமாகத்தான் உண்டாயிற்று (கொலோசெயர் 1 : 16). உயிருள்ள யாவும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர் பெற்றன. நித்தியஜீவன் அவருக்குள் இருக்கிறது. அவராலே நாம் அதைப் பெற்றுக் கொள்கிறோம் (1 யோவான் 5 : 11, 12). ஜீவனாயிருக்கிற இயேசு நமக்கு ஜீவன் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 10 : 28). இயேசுவே ஜீவன் என்பது மட்டுமன்றி, ஒளியாகவும் திகழ்கிறார் (யோவான் 1 : 4). கர்த்தர் தம்மைப் பின்பற்றுகிறவர்களை உலகிற்கு ஒளியாக மாற்றுகிறார் (எபேசியர் 5 : 8). சாத்தானின் அதிகாரத்திற்கும் பாவத்திற்கும் எதிராக கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கிறது. அவைகளால் கிறிஸ்துவின் ஒளியை மேற்கொள்ள முடியவில்லை.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…