இந்தக்காட்சி இயேசுவின் வாழ்க்கையில் கடைசி இரவு அன்று நடந்தது. இயேசு இதைச் செய்ததற்குக் காரணம்
1. சீஷர்களை அவர் எவ்வளவாய் நேசித்தார் என்று அவர் களுக்குக் காண்பிப்பதற்காக
2. சிலுவையில் தன்னை தியாகபலியாக ஒப்புக் கொடுப்பதற்கு முன்னறிவிப்பாக
3. சீஷர்களுக்குள் தாங்கள் பெரியவர்களாக வேண்டுமென்ற ஆசை இருந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் பணிவிடை செய்ய வேண்டும்
என்ற உண்மையை அவர்களுக்குப் போதிப்பதற்காக இவ்வாறு செய்தார்.
ஒரு மனிதனிடம் ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அவன் பெருமை கொள்வான். இயேசுவோ பிதா தன்னிடத்தில் அத்தனையும் ஒப்புகொடுத்த பின்னும் தாழ்மையைக் காண்பித்தார். உங்களிடம் வேலை பார்க்கிறவர்கள், உங்கள் குடும்பத்திலி லுள்ளவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று சிந்தியுங்கள். பிறருடைய கால்களை
கழுவுவதற்கு தயாராக இல்லாத மனிதன் தேவனுடைய பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது.
“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை”
என்று இயேசு கூறுவது சிலுவையில் இயேசு அறையப்பட்டதன் மூலம் பாவத்திலிருந்து ஆவிக்குரிய கழுவப்படுதலைக் குறிக்கிறது. இதனாலேயல்லாமல் யாரும் கிறிஸ்துவுக்குச் சொந்தமாக முடியாது – 1யோ 1: 7
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…