ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக் கொண்டிருந்த போது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ எவ்வளவும் நிமிரக் கூடாமல் இருப்பதைப் பார்த்தார். மக்கள் வியாதி, மரணம் போன்ற வற்றால் கட்டப்பட்டு, துன்பத்திலும், பெரிய தேவைகளிலும் இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்தவர். இயேசு அவளைத் தம்மிடத்தில் அழைத்து “உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி அவள் மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப் படுத்தினாள்.
நோய்களும், பலவீனங்களும் அசுத்த ஆவிகளாலும் ஏற்படுகின்றன. அசுத்த ஆவிகள் போகும்போது அவ்விதம் பாதிக்கப்பட்டவர்கள் சுகமடைகிறார்கள். அதேபோல் தான் இந்தப் பெண்ணும் சுகமடைந்ததைக் காண்கிறோம். இயேசு இந்த அற்புதத்தை ஓய்வுநாளில் செய்ததால் ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து ஓய்வுநாளிலே அப்படி செய்யலாகாது என்றான். இயேசு அவர்களிடம் உங்களிடமுள்ள கழுதையையும், எருதையும், தொழுவத்தி லிருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுகிறீர்கள் அல்லவா அதேபோல் தான் ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவள் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த கட்டிலிருந்து அவிழ்த்து விடவேண்டியதாயிற்று என்றார். அவர் சொன்னதை கேட்டு அவரை விரோதிக்கிறவர்கள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களோ இயேசு செய்த அற்புதத்தை குறித்து மிகவும் சந்தோஷப்பட்டனர்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…