இயேசுவும் சீஷர்களும் படகில் பிரயாணம் பண்ணிக்கொண்டு சென்ற போது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. இயேசுவோ படகில் நித்திரையாயிருந்தார். சீஷர்கள் இயேசுவினிடம் வந்து “ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்து போகிறோம் என்றார்கள்” “படகைக் காப்பாற்றும், நம்மைக் காப்பாற்றும்” என்று கூறவில்லை. இயேசு மட்டும் எப்படியாவது தப்பித்துக் கொள்வார் என்று எண்ணினார்கள். இயேசு அவர்களைப் பார்த்து “அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்” என்று சொல்லி எழுந்தது காற்றையும், கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதல் உண்டாயிற்று. இயேசு தங்களோடு படகில் இருப்பதால் அழிவு ஏற்படாது என்ற விசுவாசம் சீடர்களுக்கு இல்லாமல் போயிற்று. விசுவாசமின்மையால் அவர்கள் பயந்தனர். நமது ஆண்டவர் இயற்கையின் மீது அதிகாரமுள்ளவராக தமது வார்த்தையால் காற்றையும் கடலையும் அதட்டி அமர்ந்திருக்கச் செய்தார்.
இயேசு நமது வாழ்க்கையிலும், நம்மோடும் இருக்கும் போது நாம் அமிழ்ந்து போக மாட்டோம். நமக்கு வரும் எந்தப் போராட்டங்களையும் தேவன் அமர்த்தி விடுவார்.
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…