புதிய ஏற்பாடு வேத பாடம்

பாவியான ஸ்திரீ இயேசுவுக்குப் பண்ணின அபிஷேகம்: லூக்கா 7:36-50

இயேசுவின் மீது மிகவும் அன்பு கொண்ட இந்த பாவியான ஸ்திரீ தன்னிடமிருந்த மிகவும் விலையுயர்ந்த பரிமளத்தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் கண்ணீரினால் அவருடைய பாதங்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். அவள் இயேசுவிடம் மிகவும் அன்பு கூர்ந்ததால் இவ்வாறு செய்தாள். இந்த நிகழ்ச்சி இயேசு ஒரு பரிச்சேயனின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்த போது நடந்தது. பாவியான பெண் அந்த விருந்துக்கு அழைக்கப் படாதவள்.

ஆனாலும் அவளிடம் இயேசுவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம், பின்னாலே நின்று கொள்ளும் பணிவு, கால்களைக் கண்ணீரினால் நனைத்த பாசம், தனது தலைமயிரினால் இயேசுவின் பாதங்களைத் துடைத்த மாபெரும் தாழ்மை, கால்களை முத்தம் செய்யும் கனிவு, பரிமளத்தைலத்தைப் பூசிய தியாகம் ஆகியவற்றால் இப்பெண் மிகச்சிறந்தவளாகி விட்டாள். மனப்பூர்வமான நன்றியையும், அன்பையும் தனது செயல்களால் கர்த்தரின் பாதத்தில் ஊற்றி விட்டாள்.

ஒரு பாவியான ஸ்திரீ இயேசுவுக்கு அபிஷேகம் பண்ணுகிறாளே என பரிச்சேயன் சந்தேகப்பட்டான். இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் இவள் எப்படிப் பட்டவள் என்று அறிந்திருப்பாரே என்று எண்ணினார். இயேசுவோ ஒருவன் தன் உள்ளத்தில் நினைப்பவற்றை அறிகிறவர் – சங் 139:2 இயேசு அந்த பரிச்சேயனின் நினைப்பை அறிந்து அவள் காட்டின அன்பை பரிச்சேயனுக்கு விவரித்துக் கூறினார். அது என்னவென்றால்

லூக் 7:44-47    “இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் மயிரினால் அவைகளைத் துடைத்தாள்.”
“நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.”
“நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளத்தைலம் பூசினாள்.”
“ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.”
”மேலும் அந்த ஸ்திரீயை இயேசு பார்த்து “உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டது என்றார்” நாமும் விசுவாசத்துடன் நமது உள்ளத்தில் இருக்கும் ஏக்கங்களையும், விண்ணப்பங்களையும் கண்ணீரினால் காணிக்கை செலுத்தி பாவமன்னிப்பைப் பெறுவோம். இன்றும் இயேசுகிறிஸ்துவிடம் அழுகிறவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் – லூக்கா  6:21 தம்முடைய மக்களின் கண்ணீர் யாவையும் வரப்போகிற கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் தேவன் துடைப்பார் -. வெளி  7:17, 21:4 இயேசு அடக்கம் பண்ணப்படுவார் என்பதை இந்நிகழ்ச்சி மட்டுமே முன்னறிவிப்பதாக உள்ளது.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் இயேசுவண்டை சென்று அவர்  பாதங்களில் விழுந்து அறிக்கையிட்டு, இனி பாவம் செய்யாமலிருக்கத்  தீர்மானம் எடுத்து பாவமன்னிப்பைப் பெற அவரை நோக்கி மன்றாடுவோம்.

Sis. Rekha

View Comments

  • இந்த ஸ்தீரியும் மார்கு 14 இல் இருக்கும் ஸ்த்ரீயும் ஒன்றா?

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago