புதிய ஏற்பாடு வேத பாடம்

தேவனுடைய சித்தமும் பரலோக பிரவேசமும் பற்றி இயேசு: மத்தேயு 7:21-23 லூக்கா 6:46, 13:26,27

பரலோகராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இயேசு கூறுகிறார். “பிதாவின் விருப்பத்தின்படி நடக்கிறோமா?” என உங்களையே ஆராய்ந்து பாருங்கள். கர்த்தரின் நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தல், பிசாசுகளைத் துரத்துதல், அற்புதங்களைச் செய்தல் ஆகியவை நல்லது தான். ஆனால் இவைகளின் அடிப்படையில் யாரும் பரலோகம் செல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் கூறுவதில் “நாங்கள் செய்தோம்” என்று தங்கள் செயல்களைப் பற்றி தெரிவிக்கப் படுகின்றன. பரலோகம் செல்வதற்கான தகுதி நம்முடைய நற்செயல்கள் மட்டும் அல்ல. இயேசுவிடமிருந்து பாவமன்னிப்பையும், ஆவியானவரின் அபிஷேகத்தையும் விசுவாசத்தினால் பெற்று, அவருடைய சித்தம் செய்வதே ஆகும். கொண்டிருப்பதே பரலோகம் செல்வதற்கான தகுதியாகும் – யோவான் 3:3-5

நாம் பரலோகம் செல்வதற்கு ஒரே வழி இயேசுவே நீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் அல்லவா, உமது இரத்தத்தால் பாவமற என்னைக் கழுவினீர் அல்லவா – வெளி 1:6, கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சித்தீர் அல்லவா, இது உம்முடைய ஈவு அல்லவா – எபே 2:8, பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்தீர் அல்லவா –  யோவான் 3: 3-5 ராஜ்ஜியத்தைக் கொடுப்பதாகக் கூறினீர் அல்லவா –  லூக்கா 12:32 உமது கிருபை எனக்குப் போதுமல்லவா –  2 கொரி 12: 9 என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து கூறினால் இயேசு அளிக்கும் பதில் “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்பார்”

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago