கள்ளத்தீர்க்கதரிசிகளை கெட்டமரத்துக்கும், கணிகொடாத மரத்துக்கும் இயேசு
ஒப்பிடுகிறார். அவர்கள் கொடுக்கிற கனி அல்லது உபதேசங்களில் அவர் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்று அறிந்து கொள்ள முடியும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்காதது போல நல்ல தீர்க்கதரிசிகள் தீய உபதேசங்களை உபதேசிப்பதில்லை. அதேபோல் கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்காதது போல கள்ள தீர்க்கதரிசிகள் நல்ல உபதேசங்களை உபதேசிக்க மாட்டார்கள் என இயேசு கூறுகிறார்.
கள்ளப்போதகர்கள் வெளித்தோற்றத்தில் நீதிமான்களைப் போல ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு வருவார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்திலோ பட்சிக்கிற ஓநாய்கள் என்று இயேசு கூறுகிறார். நற்கனிகளாகிய திராட்சையும், அத்திப்பழமும் முட்செடிகளாகிய கள்ளத்தீர்க்கதரிசிகளிடமிருந்து வெளிப்படவே செய்யாது. கள்ளப் போதகர்களின் கனிகள் அவர்களிடம் காணப்படும் துர்குணங்களாகும். அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்திற்குச் செவிகொடுக்கு மாட்டார்கள். தேவனுடைய மகிமைக்கும், கனத்துக்கும் முதலிடம் கொடுக்காமல் தங்கள் ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளப்போதகரும் உலகின் அநேகப் பகுதிகளில் எல்லாக் காலத்திலும் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய இறுதி முடிவு அக்கினிக்கடல். வாழ்க்கையில் ஆவியின் கனி காணப்படாத, ஆத்துமா ஆதாயம் செய்யாத ஊழியர் கள்ளப்போதகரே – லூக் 11:23 செல்வம் சேர்த்தல், புகழ் பெறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உழைப்பவர்கள் கள்ளப்போதகர்களே
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் நல்லது, கெட்டது என கண்டுபிடிக்கும் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும் என ஜெபிக்க வேண்டும்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…