இயேசு நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ அவன் புத்தியுள்ள மனிதன் என்றும், கேளாதவன் புத்தியில்லாத மனிதன் என்றும் திட்டவட்டமாக கூறுகிறார். புத்தியுள்ள மனிதன் தன்னுடைய வீட்டின் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் போடப்பட்டிருக்கிறதா என்பதை துல்லியமாகக் கவனிப்பான். இயேசு மலைப்பிரசங்கத்தில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அதை விசுவாசித்து, வார்த்தையின்படி செய்பவர்களை கன்மலையின் மேல் வீட்டைக்கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்ட வீடு எந்த மழையினாலும், எந்தக் காற்றினாலும் சேதமடையாமல் நிற்கும். அதேபோல் ஒருவன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் நஷ்டங்களினாலும், ஏமாற்றங்களினாலும், வியாதிகளினாலும் (மழை), உலகத்தின் ஆசாபாசங்கள் நிமித்தம் அவன் சந்திக்கும் ஆபத்துகள், கண்ணிகள், வலைகளினாலும் (வெள்ளம்), பிசாசின் நேரடியான எதிர்ப்பினாலும் (காற்று) சேதமடைய மாட்டான்.
இங்கு புத்தியில்லாதவன் என்றால் ஒரு காரியத்தை எப்படி செய்யவேண்டும் என்று அறிந்தும் அதன்படி செய்யாதவன். அப்படிப்பட்டவன் மணல் மேல் தன் வீட்டைக் கட்டினதால் காற்றும், மழையும் அடித்தவுடன் அது விழுந்து முழுவதும் அழிந்து விடுகிறது அதேபோல் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி நடக்காதவன் புத்தியில்லாதவன் என்று இயேசு குறிப்பிடுகிறார்..
இயேசு இவைகளை வேதபாரகரைப் போல் போதிக்காமல் “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்ற அதிகாரத்துடன் போதித்தார், தெளிவாகப் போதித்தார், எவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாக போதித்தார். ஜனங்கள் அதனால் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டனர்.
நாமும் தேவ வார்த்தையின் மேல் அஸ்திபாரமிட்டு நமது வாழ்க்கையை அதன் மேல் கட்டுவோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…