லூக்கா 2 : 10 – 12 “தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.”
மேய்ப்பர்கள் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தபோது, தேவதூதன் அவர்களுக்கு முன் தோன்றினான். உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன் என்று கூறாமல், எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றான். முதலாவது ஒரு குழந்தை பிறந்தால் அது தாய்க்குத் தெரிந்து அவள் சந்தோஷப்படுவாள்.. அதன் பின் அந்தக் குடும்பத்தார் சந்தோஷப்படுவர். அதன்பின்தான் மற்றவர்கள் மகிழ்வர். ஆனால் இந்த உலகத்தில் இயேசு பிறந்த பொழுது மட்டும் தான் எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் நற்செய்தி வந்தது. மேய்ப்பர்கள் இதைக் கண்டு பயந்தனர். இதைக் கேட்டவுடன் உண்மை அறிய வேண்டும் என்று அந்தக் குழந்தையைப் போய்ப் பார்த்தனர். முதலில் கேட்டனர், பின்பு குழந்தையைக் கண்டனர். அதன் பின் அந்தச் செய்தியை உலகத்திற்கு அறிவித்தனர். அந்த செய்தி தான் உலகத்துக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற செய்தி. மேய்ப்பர்கள் தான் இந்த நற்செய்தியை முதன் முதலாக உலகத்துக்கு அறிவித்தனர்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…