1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25
2. தவளைகள் தேசத்தை மூடினது: ஆரோன் தன் கையை எகிப்தின் தண்ணீர்கள் மேல் நீட்டினான். தவளைகள் வந்து தேசத்தை மூடிக்கொண்டது. பார்வோனின் மந்திரவாதிகளும் தவளைகளை வரப்பண்ணினார்கள் – யாத் 8:1-7
3. பேன்கள் மனிதர்கள், மிருகங்கள் மேலேறியது: ஆரோன் கோலை நீட்டி புழுதியில் அடித்தான். அது பேன்களைப் பிறப்பித்தது. மந்திரவாதிகளால் பேன்களைப் பிறப்பிக்க முடியாமற் போயிற்று. இது தேவனுடைய விரல் என்று மந்திரவாதிகள் சொன்னார்கள் – யாத் 8:16-19
4. வண்டுகள் தேசத்தை நிரப்பிற்று: வண்டுகள் தேசத்தை நிரப்பும்படி செய்தார். கோசேன் நாட்டில் மட்டும் வண்டுகள் வராதபடி காத்தார் – யாத் 8:20-32
5. மிருகங்களுக்கு கொள்ளை நோய்: கர்த்தர் எகிப்தியருடைய எல்லா மிருகங்களின் மேலும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். ஆனால் இஸ்ரவேலின் மிருகங்களுக்கு ஒன்றும் வரவில்லை – யாத் 9:1-7
6. எரிபந்தங்கள், கொள்ளைநோய்கள்: மோசேயும், ஆரோனும் தங்கள் கைநிறைய சூளையின் சாம்பலை அள்ளி பார்வோனுடைய கண்களுக்கு முன் வானத்திற்கு நேராக இரைத்தான். எகிப்தியருடைய எல்லா மிருகங்கள் மேலும், மனிதர்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் வந்தது. எகிப்திலுள்ள மந்திரவாதிகள் மேலும் கொப்புளங்கள் வந்தது – யாத் 9:8-12
7. கல்மழை: மோசே தன் கையை வானத்துக்கு நேராக நீட்டினபோது எகிப்து தேசத்தின் மேல் கர்த்தர் இடிமுழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். அக்கினி தரையின் மேல் வேகமாய் ஓடிற்று – யாத் 9:12-26
8. வெட்டுக்கிளிகள்: மோசே தன் கையை நீட்டிய போது, எகிப்தில் கல்மழைக்குத் தப்பின பயிர்களை வெட்டுக்கிளிகளை கர்த்தர் அனுப்பி அரித்துப் போடச் செய்தார் – யாத் 10:12-20
9. காரிருள்: மோசே தன் கையை வானத்துக்கு நேராக நீட்டினபோது எகிப்து தேசமெங்கும் மூன்று நாள் காரிருள் உண்டானது. ஆனால் இஸ்ரவேலருக்கோ வெளிச்சமாயிருந்தது – யாத் 10:21-27
10. தலைப்பிள்ளை சங்காரம்: கர்த்தர் நள்ளிரவில் எகிப்தியரின் தலையீற்றுகளையும், மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும் சங்கரிக்கும்படி செய்தார் – யாத் 11:1-8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…