1. தாவீது இளமையிலிருந்தே தனக்கு நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் கர்த்தர் தான் நடக்க வைக்கிறார் என்று விசுவாசித்தான் – 1சாமு 24 – 27 அதிகாரங்கள்
2. தாவீது தான் செய்கிற காரியங்களை கர்த்தரிடத்தில் கேட்டுத் தான் செய்தான். பெலிஸ்தியரை முறியடிக்கப் போகலாமா எனக் கர்த்தரிடம் கேட்டான் – 1சாமு 23:2 கர்த்தர் போ என்றார் – 1சாமு 23:4
சிக்லாக்கை முறியடிக்கப் போகலாமா எனக் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர் போ என்றார் – 1சாமு 30:8
தாவீது யூதாவின் பட்டணங்களில் ஒன்றில் இருக்கலாமா என்று கர்த்தரிடம் கேட்டு கர்த்தர் எபிரோனுக்குப் போ என்றார் – 2சாமு 2:1
தாவீது பெலிஸ்தியருக்கு விரோதமாக போகலாமா எனக் கர்த்தரிடம் கேட்டபோது கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என வாக்குக் கொடுத்தார் – 2 சாமு5 :19
எப்படி போகவேண்டும் என்று ஆலோசனையளித்தார் – 2சாமு 5:23
3. தாவீது தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்மாவோடும் தேவனைத் தொழுது கொண்டான். இஸ்ரவேலர் அனைவரும் அப்படியே செய்ய வேண்டும் என்றும் போதித்தான் – 1நாளா 15, 16அதிகாரங்கள்
4. “எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்வான்” என்று தேவனிடமிருந்து சாட்சி பெற்றான் – அப் 13:22
5. கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் ராஜாவாக திடப்படுத்தி தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் நிமித்தம் தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது உணர்ந்தான் – 2சாமு 5:12
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…