1. ஜனங்களின் மீறுதல்களையும், பாவங்களையும் பயப்படாமல் எடுத்துச் சொல்வது ஊழியர்களின் கடமை – ஏசா 58:1
2. ஊழியக்காரர்கள் அமரிக்கையாயிராமல் கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ண வேண்டும் – ஏசா 62:6
3. ஜனங்களின் அக்கிரமத்தை சுமக்க வேண்டும் – எசே 4:4
4. உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் – மாற் 16:15
5. சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் – மத் 28:19
6. தேவனின் வழிநடத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் – யோவா 21:16
7. ஆலயத்தில் நின்று ஜனங்களுக்கு தேவவார்த்தைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் – அப் 5:20
8. ஜெபம் பண்ணுவதிலும், தேவவசனத்தைப் போதிக்கிறதிலும் இடைவிடாமல் தரித்திருக்க வேண்டும் – அப் 6:4
9. சீஷர்களின் மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்து தேவராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பண்ண வேண்டும் – அப் 14:22
10. தேவன் உங்களுக்குக் கொடுத்த சபைக்காகவும், விசுவாசிகளுக்காகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் – அப் 20:28
11. சரீரத்தில் பாவம் ஆளாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் – ரோம 6:12
12. நீதிக்குரிய ஆயுதங்களாக அவயங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோம 6:13
13. புறஜாதிகளிடம் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தை அறிவிக்க வேண்டும் – எபே 3:8
14. வார்த்தைகளிலும், போதகத்திலும் இயேசுவுக்கு நல்ல ஊழியக்காரனாக இருக்க வேண்டும் – 1தீமோ 4:6
15. தேவவரத்தை அனல்மூட்டி எழுப்ப வேண்டும் – 2தீமோ 1:6
16. வெட்கப்படாத ஊழியக்காரனாக, சத்திய வசனத்தை நிதானமாய் போதிக்கிறவனாக உத்தமனாக வாழ வேண்டும் – 2தீமோ 2:15
17. ஊழியக்காரர்கள் தன் குறைவுகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – தீத் 1:5
18. ஊழியக்காரர் தான் நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபை என்று சாட்சி கொடுக்க வேண்டும் – 1பேது 5:12

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago