• மோசேக்கு தேவனோடு சில நேரடி அனுபவங்கள் இருந்தன. மோசே தேவனுடைய பர்வதமாகிய ஒரேப் மலைக்கு வந்த போது தேவனுடைய தூதன் முட்செடியின் மத்தியில் தோன்றி கூப்பிட்டு தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனென்று கூறினார். தமது மக்கள் எகிப்தில் படும் துன்பங்களைக் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து விடுதலையாக்கி பாலும் தேனும் ஓடுகிற கானானுக்கு அழைத்துக் கொண்டு செல்ல இறங்கி வந்திருப்பதாகவும் கூறினார் – யாத் 3:1-10
• தேவன் மோசேயை சீனாய் மலையின் உச்சியில் அடர்ந்த கார்மேகத்தில் எக்காளச் சத்தத்தோடும், மின்னல் இடி முழக்கத்தோடும் சகல ஜனங்களும் காணும்படி சந்தித்தார். தேவன் அக்கினிமயமாய் இறங்கினபடியால், பெருஞ்சூளையிலிருந்து புறப்படும் புகையைப்போன்று, புகை மலையிலிருந்து கிளம்பிற்று. பர்வதம் அதிர்ந்தது. யாத் 24:16 – 18 கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின் மேல் நிலைத்திருந்தது என்றும், மேகம் அதை ஆறுநாள் மூடியிருந்தது என்றும் வேதத்தில் பார்க்கிறோம்.
• கர்த்தருடைய மகிமையானது பார்ப்பதற்கு பட்சிக்கிற அக்கினி போலிருந்தது. மோசே மேகத்தின் நடுவே நுழைந்து அங்கேயே அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் இருந்தார். சிலகாலம் மோசே தேவனுடைய சமூகத்தில் இருந்தபடியால் மோசேயின் முகத்தை திரையிட்டு மறைக்கும் அளவிற்கு அது ஒளி படைத்ததாயிற்று. இந்த நேரடித்தொடர்பில் தேவன் மோசேயோடு நீண்டநேரம் உரையாடினார். மற்றும் அவன் நிறைவேற்றும்படியான திட்டங்களையும் கொடுத்தார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…