பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவன் நமக்கு ஆசீர்வாதத்தைத் தரமாட்டாரா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். கடன்பாரத்தால் அழுந்திக் கொண்டிருக்கிறவர்கள், கடன்பாரத்தை தேவன் இறக்கி வைக்க மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் எப்பொழுதும் பற்றாக்குறையாக இருக்கிறவர்கள், வறுமையால் வாடுகிறவர்கள் செழிப்பைத் தேவன் கட்டளையிட மாட்டாரா என ஏங்குகிறார்கள். தேவன் இன்று உங்களுக்கு ஒரு வார்த்தையைக் கட்டளையிடுகிறார்.
“… உனக்கு முன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப் பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும், கனத்தையும் உனக்குத் தருவேன்” (2 நாளா 1:12) என்கிறார்.
இந்த வார்த்தையானது கர்த்தர் சாலமோனுக்குக் கொடுத்தது. அந்த வார்த்தை நிறைவேறியதை “சாலமோன் எருசலேமிலே வெள்ளியையும், பொன்னையும் கற்கள் போலவும், கேதுரு மரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான்”. (2 நாளா 1:15) என்பதிலிருந்து அறியலாம். இதைத்தவிர (1 இரா 10:14-25) வரை உள்ள வசனங்களில், அவருடைய அளவில்லாத ஐசுவரியத்தையும், அவருக்கு வர்த்தகத்தின் மூலம் வந்த ஐசுவரியத்தையும் பார்க்கலாம். இதுவரை எந்த ராஜாக்களுக்கும் இல்லாத ஐசுவரியத்தைத் தேவன் அவருக்குக் கொடுத்திருந்தார்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
நான் படித்த ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவிலேயே மொகலாராய சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் ஷாஜஹான். அவருடைய காலத்திலே அவருக்கு ஒரு பெரிய வைரச்சுரங்கம் இருந்தது. அந்த சுரங்கத்திலிருந்து விலையேறப்பெற்ற வைரக்கற்களை வெட்டி எடுத்து ராஜாவிடம் கொடுத்தார்கள். ஒருமுறை ராஜா வெளி தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்ற போது அவருக்கு உதவி செய்த ஒரு ஏழை மனிதனுக்கு வைரக்கற்களை வெகுமதியாகக் கொடுத்தார். அந்த ஏழையோ அதன் மதிப்பு தெரியாமல் அதை மிகச் சாதாரணமாக எண்ணினான்.
ஒருநாள் அவனுடைய வறுமை மிகவும் வாட்டியதால் தன் நண்பனிடம் “ராஜா ஒரு கல்லை கொடுத்தார். அதைக் கடையில் சென்று விற்றால் ஏதாவது கிடைக்குமா பார்க்கலாம்” என்று கூறி அழைத்துச் சென்றார். அங்கு போனபின் வியாபாரி கூறிய விலையைக் கேட்டவுடன் அதிசயத்தில் ஆழ்ந்தான். இதை வீட்டில் வைத்துக் கொண்டா நான் இத்தனை நாளும் வறுமையில் வாடினேன்” என அங்கலாய்த்தான். அதே போல் கர்த்தர் நமக்கு விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறார். அவர்தான் இயேசு. அவர்விலையேறப் பெற்றவர். ஒப்பற்ற செல்வமானவர். அவர் நமக்குள் இருந்தால் போதும். அவருடைய ஆவி நமக்குள் இருந்தால் போதும். சகல சம்பூர்ண ஆசீர்வாதங்களையும் அவர் நமக்குத் தருவார்.
அடுத்தாற்போல் சாலமோனுக்கு என்ன சம்பத்தைக் கொடுத்தாரென்று பார்ப்போம். (1 இரா 10:26)ஐ வாசித்தீர்களானால் அவருக்கு 1400 இரதங்களும், 12000 குதிரை வீரர்களும் இருந்ததாகப் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, தானே கப்பல்களைச் செய்தான். கப்பல் வாணிபத்தின் மூலமும் அவருடைய சம்பத்து அளவில்லாமல் பெருகியது. சாலமோனுக்கு என்ன கனம் கிடைத்ததென்று பாருங்கள். சேபாவின் ராஜஸ்திரீ சாலமோனின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டு (1இரா10 :1- 6) சகல பரிவாரங்களோடும் மிகுந்த வெகுமதிகளோடும் வந்தாள். அவருடைய சந்தேகங்களையெல்லாம் சாலமோன் தீர்த்து வைத்தார்.
“அவள் எதைப் பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டாளென்றால், அவன் பந்தியின் போஜன பதார்த்தரங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய. ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும்…” (1 இரா 10:5) பார்த்து ராஜாவின் கனத்தை நினைத்து பெருமிதத்தில் ஆழ்ந்தாள். இவ்விதமாக சாலமோனை ஐசுவரியத்திலும், சம்பத்திலும், கனத்திலும் ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார். உங்களுடைய அறியப்படாத எதிர்காலத்தை அறிந்திருக்கும் தேவனிடம் நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள். “நான் எவ்வளவோ ஜெபித்து விட்டேனே என்னுடைய கடனும், வறுமையும் மாறவில்லையே” எனப் புலம்பாதீர்கள்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற 25 ஆண்டுகள் காத்திருந்தான். யோசுவா பொறுமையாக 40ஆண்டுகள் மோசேயின் கரத்தின் கீழ் அடங்கியிருந்தான். எலிசா எலியாவின் கீழ் 14 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தான். யோசேப்பு எகிப்தின் அதிபதியாக உயர்த்தப்பட 15 ஆண்டுகள் பொறுத்திருந்தான். இதே போல் உங்களையும் தேவன் ஏற்ற காலத்தில் உயர்த்துவார். காத்திருங்கள்.
வேதத்தில் தேவனால் உயர்த்தப்பட்ட யோசேப்பை பற்றி இங்கு நினைவு கூற விரும்புகிறேன். யோசேப்பின் சிறுவயதில் தேவன் அவனுக்கு சொப்பனங்கள் மூலமாக நல்வார்த்தைகளை முன்னறிவித்தார். நம் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வரும் காரியங்களை முன்னறிவிப்பவர். ஆனால் அவன் அந்த சொப்பனத்தைக் கண்டு தன் சகோதரர்களிடமும், தன் தந்தையிடமும் கூறிய பின் நடந்தவைகள் அனைத்தும் மாறாகவே நடந்து கொண்டிருந்தன.
யோசேப்பிடம் தன் தந்தை பிரியமாயிருப்பதைப் பார்த்த அவனது சகோதரர்கள் அவனை வெறுத்தனர். அவனைக் குழியில் போட்டனர். (ஆதி 37:24) பின் குழியிலிருந்து எடுத்து (ஆதி 37:28) இஸ்மவேலர் கையில் 20 வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டனர். இஸ்மவேலர்களோ அவனை (ஆதி 37:36) எகிப்திலே பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாரிடத்தில் விற்றார்கள்.
இத்தனை பாடுகள் பட்டு கடைசியில் சிறைச்சாலையிலிருந்தே (ஆதி 41:41) எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார். அதுமட்டுமல்ல பஞ்சகாலத்தில் அவனுடைய குடும்பம் முழுவதையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றினார். தேவன் யோசேப்புக்கு “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும் யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்” (எரே 33:14) என்று நிறைவேற்றினார். அத்தனை பாடுகளுக்குப் பின்பும் கர்த்தர் தான் கூறிய வார்த்தையை யோசேப்புக்கு நிறைவேற்றி பார்வோனின் அதிபதியாக உயர்த்தியதைப் பார்க்கிறோம்.
பிரான்ஸிஸ் பேகன் என்ற நூலாசிரியர் “சில நூல்களை ருசி பார்க்க வேண்டும், சில நூல்களை நாம் அப்படியே விழுங்க வேண்டும், சில நூல்களை மெதுவாகச் சுவைத்து ஜீரணிக்க வேண்டும்” என்றார். பசுமாடு புல்லை மேய்வது வேதத்தை வாசிப்பதற்கு ஒப்பாகும். ஆனால் அந்த புல்லை மேய்ந்தபின் தனியாக ஒரு நிழலில் படுத்துத் தான் மேய்ந்த புல்லையெல்லாம் தன்னுடைய நாவிலெடுத்து அசை போடுகிறது. அதனால் அந்தப் புல் நன்கு ஜீரணமாகிறது. முடிவில் பாலாக மாறி விடுகிறது. அதே போல் வேதவசனங்களை நாம் தியானிக்கும்போது அது நமக்கு வல்லமையையும், பலனையும் கொடுக்கும். அபரீதமான ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். தேவ ஆவியில் நிறைந்து நாம் காணப்படும்போது, முடவனை நடக்கச் செய்தவர், குருடனை பார்க்கச் செய்தவர், மரித்தோரை உயிரோடெழுப்பியவர், நம்மையும் எழுப்புவார்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
இங்கு ஒரு கதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். ஞானி ஒருவன் ஆற்றைக் கடக்கும்படி படகோட்டியின் உதவியை நாடினான். ஞானி தான் எவ்வளவு ஞானவான் என்று காட்ட அவனிடம் சில கேள்விகள் கேட்டான். முதலில் ஞானி கேட்ட கேள்வி “படகோட்டியே உனக்கு தத்துவ சாஸ்திரம் தெரியுமா?” என்று கேட்டான். படகோட்டி தெரியாது என்றான். உடனே ஞானி “நீ உன் வாழ்க்கையில் கால் பகுதியை இழந்து விட்டாய்” என்றான். இரண்டாவதாக ஞானி “படகோட்டியே வானசாஸ்திரம் தெரியுமா?” என்று கேட்டான். படகோட்டியோ தெரியாது என்று பதில் கூறினான். உடனே ஞானி” அப்படியானால் நீ உன் வாழ்க்கையில் பாதி பகுதியை இழந்து விட்டாய்” என்றான். மூன்றாவதாக “படகோட்டியே தர்க்க சாஸ்திரமாவது உனக்குத் தெரியுமா?” என்றான். அதற்கும் படகோட்டி தெரியாதென்றான் உடனே ஞானி “உன் வாழ்க்கையின் முக்கால் பகுதியையும் இழந்து விட்டாய்” என்றான். ஞானி அவனிடம் “நான் எத்தனை சாஸ்திரங்களை அறிந்து வைத்திருக்கிறேன். நீயோ ஒன்றும் தெரியாமலிருக்கிறாயே” என்றார். அதற்கு படகோட்டி “ஐயா இந்த ஒரு தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாது” என்று கூறிக்கொண்டே தன்னையுமறியாமல் தன் கைகளை விரித்துக் காட்டினான். தண்டுகள் தண்ணீரில் விழுந்தது. படகு தடுமாறியது. உடனே படகோட்டி “சகல சாஸ்திரம் அறிந்த ஞானியே தங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா?” என்றான். ஞானி “தெரியாது” என்றான். உடனே படகோட்டி “உன் வாழ்க்கையின் முழுப்பகுதியையும் இழந்து விட்டாய்” என்றான்.
இதேபோல் உங்களுக்குள் எல்லாம் இருந்தாலும் கிறிஸ்து உங்களுக்குள் இராவிட்டால் உங்களுக்குள்ளவைகள் அனைத்தும் பூஜ்யமே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…