உலகப் பொருட்களின் மேல் ஆசை வைப்பதே பொக்கிஷம் என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசு பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று கூறினார். ஏனெனில் பூமியிலே அதிக பொக்கிஷங்களையுடையவர்கள், பரலோக பொக்கிஷங்களை இழந்து விடக்கூடியவர்களாயிருக்கின்றனர். மத் 19:23 ல் ஐசுவரியவான் பரலோகராஜ்ஜியத்தில் நுழைவது அரிது” என இயேசு கூறுகிறார்.
இன்றைய பொக்கிஷங்கள் என்பது வங்கிநிதி வைப்புகளும்,, பொன்னும், நிலமும், வீடும் ஆகும். முதலாம் நூற்றாண்டின் பொக்கிஷங்களில் முக்கியமான ஒன்று விலையுயர்ந்த ஆடைகளாகும். அதுபோல திராட்சரசம், வாசனைத் திரவியம், பொன், வெள்ளி, முத்துகள் போன்றவைகளும் பொக்கிஷங்களாகக் கருதப்பட்டன – ஆதி 45:22, யோசு 7:21, நியா 14:12 உலகப் பொருட்களை சேர்த்து வைக்கும் மனிதனை வெகுவிரைவில் அவைகள் ஆளுகை செய்ய ஆரம்பிக்கின்றன. முதலாவது இருதயம், பின் கண் பாதிக்கப்படுகிறது. .
பூமியிலே பொக்கிஷங்களை சேர்த்து வைக்கக் கூடாததற்கு மூன்று காரணங்களை இயேசு கூறுகிறார். விலையுயர்ந்த ஆடைகளை காலப்போக்கில் பூச்சிகள் அரித்து விடும் என்றும், விலையுயர்ந்த உலோகங்கள் காலப்போக்கில் துருபிடிக்கும் என்றும், இவைகளை நாம் எவ்வளவு தான் பாதுகாத்துக் கொண்டாலும் நாம் அறியாத நேரத்தில் திருடர்கள் அவற்றை அபகரிக்கக் கூடும் என்றும் இயேசு கூறுகிறார். மேலும் தேவைக்கதிகமான ஐசுவரியம் ஆபத்தானது என்றும், அதை நாடித்திரியும் மனிதன் உண்மையான பரலோக ஐசுவரியத்தின் மேன்மையை உணராமல் போய்விடக்கூடும் (ஏசா 55:2) என்பதால் இயேசு இவ்வாறு கூறுகிறார்… பரலோக பொக்கிஷங்கள் எத்தனை காலங்களானாலும் கெட்டுப்போவதில்லை.
பொக்கிஷங்களுக்கு விரோதமாக இயேசு பேசவில்லை. அவைகள் எங்கே சேர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார். பரலோக பொக்கிஷங்கள் எவைகளென்றால், நம்மிடம் வெளிப்படும் ஆவிக்குரிய கனிகள், கிறிஸ்துவுக்காக நாம் படும் பிரயாசங்கள், நாம் சம்பாதித்த ஆத்துமாக்கள், நற்கிரியைகள் போன்றவைகளாகும். (1தீமோ 6:17-19)
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் நாம் ஒவ்வொரும் பரலோக பொக்கிஷங்களைச் சேர்த்து தேவனின் ஆசிகளைப் பெற முயலுவோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…