இந்த உவமை யூதருக்குச் சொல்லப்பட்டது. இயேசு உபத்திரவ காலத்தில் நடக்கும்
நிகழ்சிகளை விவரிக்க இதைக் கூறுகிறார். இதில் பத்து கன்னிகைகள் என்பவர்கள் மணவாளனின் வருகைக்காக காத்திருக்கும் மக்களைக் குறிக்கிறது. எண்ணெய் என்பது
பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது. தீவட்டி என்பது இரட்சிப்பின் வெளிச்சத்தைக்
குறிக்கிறது. எண்ணெய் இல்லாத பத்து கன்னிகைகள் திருமண வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. அதேபோல் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இல்லாவிட்டால் பரலோகத்திற்குச் செல்ல முடியாது.
இவர்களுக்கும் மணவாளனுக்கும் இடையே சின்ன இடைவெளி அதாவது கதவு மட்டுமே இருந்தது. கன்னிகைகள் மணவாளனிடம் பேசினார் அவரும் பதில் கூறினார்.
ஆனால் கன்னிகைகளால் உள்ளே செல்ல முடியவில்லை. புத்தியுள்ள கன்னிகைகளுக்கும், புத்தியில்லாத கன்னிகைகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் புத்தியில்லாதவர்கள் மணவாளன் எதிர்பாராத வேளையில் வருவார் என்பதை உணரத் தவறி விட்டனர். அதே
போல் தான் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எந்த நாள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் அந்த வருகைக்காக அனைவரும் உண்மையுடனும், விழிப்புடனும் அவருடைய வருகைக்காகக் காத்திருக்க வேண்டும்.
இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில் கிறிஸ்து எதிர்பார்க்க முடியாத, அறியமுடியாத ஒரு நாளில் வருவார் என்னும் அபாயம் இருப்பதால் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்து ஆவிக்குரிய நிலையில் அவரை சந்திக்க ஆயத்தத்துடன் காத்திருப்போம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…