இதில் புதைக்கப்பட்ட பொக்கிஷம், விலையேறப்பெற்ற முத்து ஆகியன பற்றிய உவமைகளைக் காணலாம். இவைகள் இரண்டு சாத்தியங்களைத் தெரிவிக்கின்றன.
தேவனுடைய ராஜ்ஜியம் மற்ற எல்லாவற்றையும் விட நேசிக்கத்தக்க விலையேறப் பெற்ற பொக்கிஷமாகும். அதில் நாம் பங்குபெறுவதை தடுத்துநிறுத்தும் அனைத்தையும் விட்டுவிட்டு இந்த பொக்கிஷமாகிய ராஜ்ஜியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட்டுவிடுதல் என்பது எல்லாவற்றின் மீது நமக்குள்ள ஆசை, பாசம் அனைத்தையும் விட்டு விட்டு கிறிஸ்துவையே விலையேறப் பெற்றவராகப் தெரிந்து கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த கிறிஸ்துவைக் குறித்த காலம் வந்த போது பிடித்தனர், கட்டி வைத்தனர், அடித்தனர், உதைத்தனர், கன்னத்தில் அறைந்தனர், காரி உமிழ்ந்தனர், பரிகசித்தனர், பாரச் சிலுவையை சுமக்க வைத்தனர், துடிக்கத் துடிக்க கைகளிலும், கால்களிலும் ஆணி அடித்தனர். பூமியின் இதயம் வெடித்துச் சிதறியது. தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று
அலறினார்? தன் தோளில் சாய்ந்து உயிரை விட்டார். சந்தேகத்தில் குத்திப் பார்த்தனர். இரத்தமும், தண்ணீரும் இரத்தத்துளிகளாய் வந்தது. அந்த விலையில் சபை என்ற முத்தாகிய அவரது மணவாட்டியைப் பெற்றார். அதில் தான் இன்று நாம் உறுப்புகளாக இருக்கிறோம்.
நாமும் இந்த விலையேறப்பெற்ற பொக்கிஷமாகிய, முத்தாகிய இயேசு கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் பாதத்தில் அமர்ந்து நித்தியராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முயலுவோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…