தீமை செய்கிறவர்களுக்குத் எதிராகத் தீமைசெய்வது சரியன்று. தீமையைப் பொறுத்துக்கொள்வதுடன் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யும் பொழுது கிறிஸ்துவின் அன்பை நாம் காண்பிக்க முடியும். இயேசு என்ன கூறுகிறாறென்றால்
மேலும் இயேசு பரலோக பிதாவுக்குப் புத்திரராக இருக்க வேண்டுமென்றால் சத்துருக்களைச் சிநேகிக்க வேண்டும், சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டும், பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும். தேவன் தீயோர் மேலும், நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதியுள்ளோர் மேலும், அநீதியுள்ளோர் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். நம்மைச் சிநேகிக்கிறவர்களையே நாம் சிநேகித்தால் நமக்குப் பலன் கிடையாது. பிதா எவ்வாறு பூரண சற்குணராயிருக்கிறாரோ அதேபோல் நாமும் பூரண சற்குணராயிருக்க வேண்டும். கிறிஸ்தவ அன்பு என்பது சிநேகிக்கிறவர்களைச் சிநேகிப்பதுடன் அமைவது அல்ல. அது பகைப்போரை சிநேகிப்பதற்கு முதலிடம் அளிக்கிறது. இதனைக் கிறிஸ்து வெறும் உதட்டளவில் விளம்பியதுடன் நின்றுவிடவில்லை. அதை வாழ்ந்து காட்டி நிரூபித்தார். கல்லெறியத் துணிந்தோருக்காகக் கதறி ஜெபித்தார் மத் 23:37 கன்னத்தில் அறைந்தோருக்காகவும், காரி முகத்தில் துப்பியோருக்காகவும், இரத்தத்தால் மூழ்கி இருந்த ஆடையைக் கூட இரக்கமின்றி சீட்டிட்டுப் பங்கிட்டோருக்காகவும், தன்னை ஆணி அறைந்து, சிலுவையில் அறைந்த போதும், மூச்சுத் திணறிய போதும் ஜெபித்தார் – லூக் 23:34 நமக்கு அளிக்கப்பட புதிய கற்பனை என்னவென்றால் “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்” என்பதே – யோவா 13:34 அன்பு கூறவேண்டும் என்பது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒரு ஆலோசனையல்ல. அன்பு கூர்ந்தே ஆகவேண்டும் என்பது இயேசுவின் முக்கிய கட்டளை. அதுவும் நண்பனை அல்ல, பகைவரை.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…