புதிய ஏற்பாடு வேத பாடம்

மலைப்பிரசங்கத்தில் நியாயப்பிரமாணம் பற்றி: மத்தேயு 5:17-20

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தார். நமது சார்பில் அதை நிறைவேற்றினார். அவ்வாறு நிறைவேற்றியதும் அதைத் தமது மாம்சத்தினாலே ஒழித்தார் – எபே 2:15 கிறிஸ்துவின் நோக்கம் தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில், தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே – ரோ 3:31, 8:4 இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறபடியால் – ரோ  10:4 ஆவியினால் நடத்தப்படுகிற நாம் – கலா  5:18 நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களல்ல – ரோ 6:14 அன்று தேவனுடைய கட்டளைகள் நேரிடையாக இஸ்ரவேல் மக்களுக்குப் பொருத்தமாக பலிகளைக் குறித்தும், சடங்காச்சாரங்களைக் குறித்தும், சமுதாய நிர்வாக சட்டங்கள் குறித்தும் கூறப்பட்டவை. என்று அவைகள் பொருத்தமானவை அல்ல எபி 10:1-4 கிறிஸ்துவின் போதனைகளும் அப்போஸ்தலரின் உபதேசங்களும் – மத் 28:20 1கொரி 7:19, 9:21 கலா 6:2 தேவனுடைய சித்தம், இயேசுவின் சுபாவம் ஆகியவற்றை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்துகின்றன. அவை என்றைக்கும் பொருத்தமாக உள்ளன. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என்பது இப்பொழுது இருக்கும் நிலமையிலிருந்து மாற்றப்பட்ட புதிய வானம் புதிய பூமியைக் குறிக்கிறது – வெளி 21:1 நியாயப்பிரமாணத்திலிலுள்ளவை நிறைவேறுமளவும் அதிலிலுள்ள  ஒரு சிறு எழுத்தோ, எழுத்தின் உறுப்போ ஒழிந்து போகாது. என்று தீர்க்கமாக இயேசு எடுத்துரைக்கிறார். வேதபாரகர், பரிச்சேயர் என்பவர்களுடைய நீதியை விட உங்கள் நீதி அதிகமாக இருந்தால்தான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்று இயேசு கூறுகிறார். வேதபாரகர், பரிச்சேயரின் நீதி நியாயப்பிரமாணத்தினால் உண்டாகும் சுயநீதியாகும் – லூக் 18:10-14 அவர்க;ள் பல கற்பனைகளைக் கடைப்பிடித்தார்கள். ஜெபித்தார்கள், துதித்தார்கள், உபவாசமிருந்தனர். தேவனுடைய வார்த்தையை வாசித்தனர். ஆலயங்களில் பங்கு கொண்டனர். ஆனால் அவர்களுடைய உள்மனப்பான்மைகள் சரியாக இல்லை. இயேசு எதிர்பார்க்கும் நீதி இவர்களைவிட மிகவும் அதிகம் என்றார்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago