இயேசு சீஷர்களுடன் பேதுருவின் வீட்டில்:
லூக்கா 4 : 38 “பின்பு இயேசு ஜெபஆலயத்தை விட்டு புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.”
இயேசு கப்பர்நகூம் ஜெபஆலயத்தில் போதகம் பண்ணினார். இயேசு அந்த ஜெபஆலயத்திலிருந்த ஒரு அசுத்தஆவி பிடித்த மனிதனுக்குள்ளிருந்த அசுத்தஆவியைத் துரத்தினதினால் அவருடைய கீர்த்தி சுற்றிலுமுள்ள நாடுகளிலெல்லாம் பரவியது. (லூக்கா 4 : 33, 34) இயேசு அதன்பின் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு தன்னுடைய சீஷர்களுடன் சீமோன் பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். பேதுரு பெத்சாயிதா பட்டணத்தில் இருந்தவன் (யோவான் 1 : 44). பேதுரு இயேசுவுக்காகத் தன்னுடைய வீட்டை பெத்சாயிதாவிலிருந்து கப்பர்நகூமுக்கு மாற்றினான். அங்கு பேதுருவின் மாமி கடுமையான ஜுரத்தினால் எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தாள். பேதுருவின் மாமி என்று கூறப்பட்டிருப்பதால் பேதுரு திருமணமானவர் என்று தெரிகிறது. அவருடைய மாமியை சுகமாக்கும்படி இயேசுவிடம் வேண்டினார்கள்.
இயேசு செய்த அற்புதம்:
லூக்கா 4 : 39 “இயேசு அவளிடத்தில் குனிந்து நின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார். அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.”
பேதுருவின் விண்ணப்பத்தைக் கேட்டு இயேசு அந்த வீட்டிற்குள் நுழைந்தார். இயேசு அந்தப் பெண்ணின் பக்கத்தில் குனிந்து நின்றுகொண்டு அந்தக் கடுமையான ஜுரம் நீங்கும்படி கடிந்து கொண்டு கட்டளையிட்டார் என்று லூக்கா கூறுகிறார். மத்தேயு அவள் கையைத் தொட்டார் என்று கூறுகிறார். மாற்கு அந்தப் பெண்ணின் பக்கத்தில் போய் அவளுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார் என்று கூறுகிறார். (மாற்கு 1 : 31) இயேசு பேதுருவின் மாமியின் கையைத் தொட்டதால் அவருடைய மனதுருகும் அன்பைப் பார்க்கிறோம், அவளுடைய விசுவாசமும் அதன் மூலம் பலப்பட்டிருக்கும். இயேசுவின் வல்லமை அந்தப் பெண்ணுக்குள் புகுந்து, அந்தக் கடுமையான ஜுரம் அவளை விட்டு நீங்கச் செய்தது. அவளுக்குள்ளிருந்த பலவீனம் முற்றிலும் அவளை விட்டு நீங்கியது. உடனே அவள் எழுந்து வந்திருந்த அனைவருக்கும் பணிவிடை செய்ததைப் பார்க்கிறோம். இது அவளது நன்றி தெரிவிக்கும் செயலாக இருப்பதைப் பார்க்கிறோம். காய்ச்சலினால் மற்றவர்கள் தனக்கு உதவி செய்யக்கூடிய நிலைமையில் இருந்தவள் இயேசுவின் வல்லமையினால் விடுதலை பெற்று மற்றவர்களுக்குச் சேவை செய்யக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டாள்.
எத்தனை கொடூரமான வியாதி ஒரு மனிதனுக்குள் இருந்தாலும் இயேசு அவனைக் குணமாக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாவதில்லை, முழுமையான சுகத்தை, பரிபூரண சுகத்தை, அற்புத சுகத்தை கொடுத்து ஆசியளிப்பார். இயேசு ஒரு சாதாரணக் குடும்பத்திலுள்ள பேதுருவின் மாமியை பார்த்தார், தொட்டார், தூக்கினார், சுகம் கொடுத்தார். இன்றைக்கும் இவ்விதம் செய்துகொண்டிருக்கிறார். மாற்கு 5 : 23, 41 ல் ஜெப ஆலயத்தலைவனான யவீருவின் மகள் இறந்து போன பின்பு, அவன் இயேசுவிடம் வந்து இயேசு அவள் மேல் கையை வைத்தால் போதும் பிழைப்பாள் என்று மகள் இருந்த வீட்டுக்கு அழைத்தான். இயேசுவானவர் அங்கு போய், பிள்ளையின் கையைப் பிடித்துத் தூக்கி விட்டு பிழைக்க வைத்தார் என்று பார்க்கிறோம். இயேசுவின் கைகளிலுள்ள வல்லமையை இதனால் அறிகிறோம். கர்த்தாவே நீர் என்னைப் பாரும் எனக் கெஞ்சுங்கள். கர்த்தரிடம் நன்மை பெற்றவர்கள் பேதுருவின் மாமியைப் போல கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய ஆயத்தமாவோம்.
எபிரேயர் 4 : 15, 16 “- நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”
“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…