இயேசு கலிலேயாவிலிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் சென்றார். இதைக்கேள்விப்பட்ட ஏரோதுராஜாவின் மனுஷன் ஒருவன் தன் மகன் மரண அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறபடியால் அவன் சாகிறதற்கு முன்னே இயேசு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இயேசு அவனை நோக்கி ”நீ போகலாம் உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என்றார். இயேசு கானா ஊரிலிருந்து கொண்டே கப்பர்நாகூமிலிலுள்ள வாலிபனைக் குணமாக்கினார். இயேசுவால் எல்லாம் செய்ய முடியும்.
இயேசுவின் சொல்லை முழுவதும் நம்பி மீண்டும் அவரை வற்புறுத்தாமல் நிச்சயத்தோடு கர்த்தருக்குக் கீழ்படிந்து சென்ற அந்த மனிதனின் நம்பிக்கையும் கீழ்படிதலும் அவனுடைய மகனுக்கு சுகம் கொடுத்தது. ராஜாவின் மனுஷன் இயேசுவிடமிருந்து புறப்பட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் “குமாரன் பிழைத்து விட்டான்” என்ற செய்தி வந்தது. அந்த மனுஷனோ ஆவலுடன் குணம் கிடைத்த நேரத்தை விசாரித்தார். நேற்று ஏழாம் மணி நேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றனர். அந்த மனுஷனோ மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானார். ஏனெனில் கிறிஸ்து சொன்ன நேரம் அதுதான். கர்த்தரின் வார்த்தை தீவிரமாய் ஓடும். அவர் அனுப்பின காரியத்தைச் செய்து முடிக்கும். அதற்கு வாகனங்கள் தேவையில்லை. அவனும் அவன் வீட்டாரனைவரும் இயேசுவை விசுவாசித்தனர்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில்: ராஜாவின் மனுஷன் எவ்வாறு இயேசுவின் வார்த்தையை நம்பிப் போனானோ அதேபோல் நாமும் இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து அற்புதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…