எல்க்கானாவின் குடும்பம்:

எப்பிராயீம் மலை தேசத்தில் உள்ள ராமதாயிம் என்னும் ஊரில் எல்க் கானா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி பெயர் அன்னாள். இன்னொருத்தியின் பெயர் பெனின் னாள். பெனின்னாளுக்குக் குழந்தைகள் இருந்தது. ஆனால் அன்னாளுக்குக் குழந்தைகள் இல்லை. அன்னாள் என்றால் “கர்த்தரின் கிருபை” என்று பொருள். கர்த்தருக்குப் பலி செலுத்த சீலோவிலுள்ள உள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வருஷத்தில் மூன்று முறை (பஸ்காபண்டிகை, புளிப்பில் லாப் பப்பண்டிகை, கூடாரப்பண்டிகை) ஆண் மக்கள் எல்லோரும் தேவ சந்ததியில் குடும்பத்துடன் காணவேண்டும் என்று தேவன்கூறிய கட்டளை யின்படி ஒவ்வொரு வருடமும் ஆலயத்துக்குஎல்க்கானா குடும்பத்தோடு செல்வான். இந்தக் கட்டளை நியாயப்பிராணத்திலுள்ளது (உபகாமம் 6 :16). இதற்கென்று பணம் சேர்க்கும்படியும் உபகாமம் 14:22–26ல் கூறப்பட்டுள் ளது. பிரயாண வசதிகள் இல்லாத காலமாதலால் அவர்கள் வாழ்ந்த மலை தேசத்திலிருந்து சீலோவரை செல்வது மிகவும் சிரமம். ஆனால் அவைக ளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் செல் வான். அப்பொழுது அன்னாள் என்னால் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியாது என்றோ, கர்த்தர் எனக்குப் பிள்ளைகளைத் தரவில்லை என்றோ போக்குகள் சொல்லாமல், தன் கணவனுடன் கூடவே செல்வாள்.. 

அன்னாளின் குணமும், எல்கானாவின் பாசமும்:

எல்க்கானாவின் இரண்டாவது மனைவியான பெனின்னாளோ அன்னாளை மிகவும் ஏளனமாகப் பேசி வேதனைப் படுத்துவாள். அதனால் அன்னாள் பெனின்னாளைக் குறித்துக் கணவனிம் கோள் சொல்வதுமில்லை. ராகேல் தன்னுடைய சகோதரியான லேயாள் குழந்தைச் செல்வம் பெற்று ஆசீர்வ திக்கப்பட்ட போது அவள்மீது பொறாமை கொண்டது போல அன்னாள் பெனின்னாள் மீது பொறாமைப்படவில்லை. ராகேல் கணவன் யாக்கோ பிடம் எனக்குப் பிள்ளை கொடும் இல்லாவிட்டால் சாகிறேன் என்று சண் டையிட்டதைப் போல அன்னாள் தன் கணவனாகிய எல்க்கானாவிடம் சண்டையிடவில்லை. தன்கணவன் தன்னை அதிகமாக நேசித்ததினால் பெனின்னாளை அற்பமாக எண்ணவுமில்லை. தன்னை வேதனைப் படுத் தும் பெனின்னாளிடம் வாக்குவாதம் செய்ததாகவும் வேதத்தில் கூறப்பட வில்லை. பெனின்னாள் பெற்ற பிள்ளைகளை வெறுத்ததாகவும் வேதத் தின் கூறவில்லை. அன்னாள் பெனின்னாளால் துக்கப்படுத்தப்பட்டாலும், தன்னுடைய கணவனால் மிகவும் நேசிக்கப்பட்டாள். அதனால் பலியிட்ட பின் பலிப் பொருட்களில் இரட்டிப்பான பங்கை அன்னாளுக்கு எல்க்கானா கொடுப்பான். 

ஆனாலும் அவள் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள். எனவே அவன் தன் மனைவியைப் பார்த்து அன்போடு ஏன் அழுகிறாய் என்று கேட்டு “பத்து குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா” என்பான். பத்து குமாரர்கள் தரும் சந்தோஷம், சமாதானம், ஆறுதலை ஒரு புருஷனால் தர முடியும் என்று உறுதி அளிப்பான். கர்த்தர்தான் அவளுடைய கர்ப்பத்தை அடைத்திருப்பதாக 1 சாமுவேல் 1 : 5 கூறுகிறது. இதன் மூலம் கர்த்தர் அன்னாளுக்கும், இஸ்ரவேலுக்கு பெரிய ஆசீர்வாதத்தையும் தமக்கு மகிமையையும் ஆயத்தம் பண்ணி வைத்திருந்தார். இதை அறியாத அவள் வேதனைப்பட்டாள். தேவனால் அனுமதிக்கப்படும் பாடுகள் அவரது அளவ ற்ற அன்பினால் கண்காணிக்கப்படுகின்றன. இதேபோல் நம்முடைய வாழ் விலும் பல ஏமாற்றங்களை சந்திக்கச் செய்வார். அன்னாள் செய்ததைப் போல நம்முடைய கஷ்டங்களையும், நிர்பந்தங்களையும் ஆண்டவரு டைய சமூகத்தில் சமர்ப்பித்து அவருடைய சித்தம் நிறைவேறக் காத்தி ருக்க வேண்டும். அவரை நேசிக்கிறவர் களுக்கு சகலமும் நன்மைக் கேதுவாக நடக்கின்றன (ரோமர்:28). 

தேவாலயத்தில் அன்னாள்:

அன்னாள் தனக்குப் பிள்ளையில்லாத குறையை யாரிடம் சொல்லி அழு தாலும் தனக்கு ஆறுதல் கிடைக்காது என்பதை உணர்ந்தாள். எனவே கர்த் தரால் மட்டுமே இதற்குத் தீர்வு கொடுக்க முடியும் என்று விசுவாசித்தாள். சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின் ஆலயத்திலே மனங்கசந்து அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். வீண் வார்த்தை களை அலப்பாமல் ஒரே காரியத்திற்காக ஜெபித்தாள். சேனைகளின் கர்த் தாவே என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாள். உம்முடைய அடியாளை கண்ணோக்கிப் பாருமென்றும், அடியாளை மறவாமல் நினைத்தருளும் என்றும் ஜெபித்தாள். மேலும் அவள் தனக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன் என்றும், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்றும் பொருத்தனை பண்ணினாள் (1சாமுவேல்1:11). தேவ திட்டத்தோடு தேவனோடு தீர்மானம் பண்ணி இணைந்து ஜெபித்த ஜெபம் அது. 

வெகுநேரம் தன் உதடுகளை மாத்திரம் அசைத்து முழு விசுவாசத்தோடும் கண்ணீரோடும் தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள். அவளுடைய இருத யம் லேசானது. அவளது துக்கமுகமும் மாறியது. அதன்பின் அவள் புசியா மலும், குடியாமலும் இருக்கவில்லை. ஆலயத்திலிருந்த ஆசாரியனான ஏலி அன்னாள் புலம்புவதைக் கண்டு அவள் குடித்திருப்பதாக நினைத்து அவளைக் கண்டித்தான். ஆனால் அன்னாளோ அதைக் கேட்டு சிறிதும் கோபப்படாமல் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறி ஏலியின் ஜெபத் தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுச் சென்றாள். அதன்பின் அவள் துக்க முகமாய் இருக்கவில்லை. புசித்துக் குடித்தாள். அன்னாளின் விண்ண ப்பத்தைக் கேட்ட கர்த்தர் அன்னாளை நினைத்தருளினார். சிலநாள் சென்ற பின்பு அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். 

அன்னாள் நிறைவேற்றிய பொருத்தனை:

எத்தனையோ வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை ஆதலால் அதன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்திருப்பாள். ஆனால் குழந்தை பால் மறந்த வுடன் கர்த்தருக்குத் தான் பண்ணிய பொருத்தனையை நிறைவேற்ற ஆயத்தமாகி கணவனிடம் கூறினாள் கணவனும் மறுப்பேதும் சொல்ல வில்லை. எனவே கணவனுடன் தேவாலயத்துக்குச் சென்று சாமுவேல் என்ற குழந்தையை அங்கு வளரும்படி விட்டுவிட்டாள். அவள் ஏலியை நம்பி அல்ல, தேவனை நம்பி குழந்தையை அங்கு ஒப்படைத்தாள். அவள் ஆண்டவரை ஏமாற்ற விரும்பவில்லை. இரட்சிப்பு, பரிசுத்தம், கிரியைகள் இவற்றிற்கு வேறொருவரும் நிகராக முடியாது என்ற சவாலோடு சாட்சி யிட்டுப் பாடினாள். அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார் என்று நன்றி சொல்லிப் பாடினாள். அவளது பாடலின் வரிகள் ஒவ்வொ ன்றும் அவளது உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது (1சாமுவேல் 2 : 1 – 10). ஒவ்வொரு வருடமும் அன்னாள் பலி செலுத்த வரும்போது சாமுவேலுக்கு ஒரு சின்ன சட்டையைத் தைத்துக் கொண்டு செல்வாள். ஒரு குழந்தைக்காகக் கண்ணீரோடு விண்ணப்பித்த அன்னாள் ஆறு குழந் தைகளைப் பெற்றெடுத்தாள் (1சாமுவேல் 2 : 21). அன்னாள் தன்னுடைய மகனை ஆண்டவரின் பணிக்கு கொடுத்தது போல நாமும் நம்முடைய பிள்ளைகளை ஆண்டவருடைய ஊழியத்திற்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும். 

சாமுவேலின் வளர்ச்சி:

ஆசாரியப்பணி ஆரோனின் குடும்பத்தை சேர்ந்தது. ஆனால் எப்பீராயீமி யரான எல்க்கானா, அன்னாள் குடும்பத்தின் மகன் பலி செலுத்தும் ஆசாரி யனாக, உத்தம நியாதிபதியாக, ஒரு தீர்க்கதரிசியாக இஸ்ரவேலில் விளங் கினான். விசுவாசப் பட்டியலிலும் அவனது பெயர் இடம் பெற்றது (எபிரே யர் 11 : 32). அன்னாளின் குமாரன் செய்த ஊழியத்தை அன்னாளே கண்டு சந்தோஷமடையவும்,தேவனை மகிமைப்படுத்தவும் தக்கதாய் சாமுவேல் தன்னுடைய சொந்த ஊரிலிருந்தே கர்த்தருடைய பணியை நிறைவேற் றினான் ( 1சாமுவேல் 7 :16, 17). சாமுவேலின் சிறு வயதிலேயே கர்த்தர் அவனுக்குத் தரிசனமானார். இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலை யும், தேவனுக்குப் பிரியமான ராஜாவான தாவீதையும் ராஜாவாக அபிஷே கம் பண்ணும் பாக்கியத்தைக் கர்த்தர் சாமுவேலுக்குக் கொடுத்தார். ராஜாங் கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி கர்த்தருடைய சந்நிதியில் வைத்தவன் சாமுவேல் (1சாமுவேல் 10 : 25). ஜனங்களுக்காகத் திறப்பில் நின்று போராடின ஜெபவீரனும் அவனே (1சாமுவேல்12:23). சாமுவேல் கிறிஸ்துவுக்கு முன் அடையாளராகத் திக ழ்ந்தார். சாமுவேல் தீர்க்கதரிசியாகவும் (1சாமுவேல்10:2–8), ஆசாரியரா கவும் (1சாமுவேல் :9), நியாயாதிபதியாகவும் (1சாமுவேல்:15–17). செயல் பட்டார். பொருளாசை இல்லாது ஊழியப்பணி செய்தவர் சாமுவேல். ஆழ மான விசுவாசமும், முழுமையான அர்ப்பணிப்பும் நமக்கு இருந்தால் நம்முடைய ஜெபங்களும் கேட்கப்படும். கண்ணீரோடு நமது விண்ணப் பங்களை ஏறெடுப்போம். எளியவனைக் குப்பையிலிருந்து தூக்கி விடும் கர்த்தர் நம்மையும் தூக்கி விடுவார். எனவே நாமும் கண்ணீரோடு விதைப்போம் . கெம்பீரத்தோடு அறுப்போம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago