சிக்லாக்:
தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில் உள்ள பெலிஸ்தியர் தேசங்களில் ஒன்றான சிக்லாக்கில்,தான் ராஜாவாவதற்கு முன் தன்னுடைய மனைவி பிள்ளை கள், பெற்றோரையெல்லாம் ஒளித்து வைத்திருந்தார். சிக்லாக் சிமியோ னின் பகுதியைச் சார்ந்தது (1நாளாகாமம்4: 30) சவுலின் காலத்தில் பெலிஸ் தியர் வசமிருந்த இது காத் அரசரால் தாவீதுக்கு வழங்கப்பட்டது. சிக்லாக் என்றால் கசக்கிப்பிழிந்தால் என்று பொருள்.
சிக்லாக்கில் அமலேக்கியர்:
1சாமுவேல் 30 :1,2 “தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின் மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.”
சிக்கலாக்கில் தாவீதும் அவனுடைய குடும்பத்தாரும், அவனொடிருந்தவர் களும் அங்கு இருக்கும் போது ஒருநாள் திடீரென்று அமலேக்கியர் தாவீது இல்லாதநேரத்தில் வந்து சிக்லாக்பட்டணத்தைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டனர். அங்குள்ள யாவரையும் கொல்லா மல் அனைவரையும் சிறைபிடித்துக் கொண்டுசென்றனர். தாவீதும் அவனு டைய ஆட்களும் பெலிஸ்தியப்படை இஸ்ரவேலுக்கு எதிராகச் சென்ற தைப் பார்த்ததால் மிகுந்த வேதனையோடு சிக்லாகு வந்தபோது அங்கு தங் கள் பெற்றோரும், மனைவிகளான அகினோலாமும், அபிகாயிலும், குமார ரும்,குமாரத்திகளும் அமலேக்கியர் கொண்டுபோய் விட்டதை அறிந்தனர். எனவே மிகவும் நெருக்கான சூழ்நிலையையும் தாங்கள் இழந்ததையும் அறிந்த தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் தங்களில் பெலனில்லா மல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
தாவீதின் இக்கட்டான நேரம்:
1சாமுவேல் 30:6 “தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்”.
அதன்பின் அவனோடிருந்த 630 யுத்தவீரர்களும் மிகுந்த மன வருத்தத்தில் தாவீதின் மீது கல்லெறிய இருந்தனர். தாவீதோடிருந்த அனைவரும் மிகு ந்த பலசாலிகள். தாவீதின் தந்தையும் தாயும் அவனைக் கைவிட்டு விட்ட னர். அவனது சகோதரர்கள் அவனை அந்நிய மனுஷனாகப் பார்த்தனர். தன் னுடைய சொந்தநாட்டில் ராஜாவான சவுல் அவனைப் பிடித்துக் கொண்டு போகத் தேடுகின்றான். அத்தனைவருடங்களும் கூடவே இருந்து தாவீ தின் ஆசீர்வாதங்களில் பங்கெடுத்தவர்கள் இப்பொழுது கல்லெறிய நிற்கின்ற னர். அமலேக்கியர்கூட ஒருவரையும் கொன்று போடாமல் கூட்டிப் போனா ர்கள். ஆனால் கூட இருந்தவர்கள் கொல்ல நினைக்கின்றனர். இத்தனை யும் சகித்துக்கொண்டவன் இப்பொழுது இன்னும் மேலும் மேலும் இழந்து நிற்கிறான். தாவீது மிகவும் நெருக்கப்பட்டு மனமுடைந்து போனான். தாவீதைத் தவிர மற்றவர்கள் தாவீதைக் காரணம் காட்டி தங்கள் ஆத்திரத் தைத் தீர்க்க வகை தேடினர். அப் போது தாவீது அத்தனை நெருக்கத்திலும் கர்த்தர் பேரில் அவன் வைத்திருந்த விசுவாசத்தால் கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு கர்த்தரிடம் தான் என்ன செய்ய வேண்டு மென்று ஆலோசனை கேட்டான். இதேபோல் நம்முடைய வாழ்க்கையி லும் தோல்விகள்,அவமானங்கள், போராட்டங்கள் நம்மை எதிர்கொள்ளும் போது யாரையாவது பழி சொல்லிக் கொண்டிராமல் தாவீதை போல் கர்த்த ருக்குள் கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தாவீது தேவனிடம் கேட்டது:
1சாமுவேல் 30 : 8 “தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.”
கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்ட தாவீது வாக்குத்தத்தம் பண்ணிய வர் உண்மையுள்ளவர் என்று விசுவாசித்து அமலேக்கியரைப் பின்தொடரத் தீர்மானித்தான். எனவே கர்த்தரை நோக்கி ஆலோசனை கேட்டான் இதே போல் மோசே யாத்திராகமம் 17:4,5ல் ஜனங்கள் தண்ணீரில்லாமல் தவிக் கும்போது மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தனர். அப்பொழுது மோசே கர்த்தரிடம் ஆலோசனை கேட்டு அதற்குக் கர்த்தர் பதிலளித்ததையும் பார் க்கிறோம்.அதன்பின் தாவீது ஆசாரியனான அபியத்தாரை நோக்கி ஏபோத் தைக் கொண்டுவரச் சொன்னான். ஏபோத் என்பது பிரதான ஆசாரியனின் உடையின் ஒருபகுதி. இது ஜெபத்தைக் குறித்துப் பேசுகிறது. ஆசாரியனின் உடையின் மேலாக இது அணியப் பட்டிருக்கும். தூபபீடத் தண்டை போகும் போது ஆசாரியன் இதை அணிந்திருப்பான். அதில் இரண்டு கற்கள் உண்டு. அதில் ஒன்று இடதுதோளிலும், இன்னொன்று வலது தோளிலும் இருக் கும். அதில் இஸ்ரவேலின் 12 நாமங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இதன் பொருள் என்னவென்றால்பிரதானஆசாரியன் இஸ்ரவேலரைத் தன் தோள் களில் சுமந்தவராக ஜெபபீடத்தண்டை வருகிறான் என்பதாகும். இது பிர தான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கூறும் சாட்சியா யிருக்கிறது. அவரே நம்மைத் தமது தோள்களில் சுமக்கிறார். தாவீது பிர தான ஆசாரியனிடம் அதை அணியச் சொல்லி தன்னுடைய வழி நடத் துதலைப் பற்றிக் கேட்கிறார். கர்த்தரிடத்தில் தான் அமலேக்கியரைப் பின் தொடரலாமா தான் அதை பிடிப்பேனா என்று கேட்டான். தாவீது தன்னு டைய மனைவி பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போன பின்பும் போக லாமா வேண்டாமா என்று கேட்டதைப் பார்க்கிறோம். பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தேவ சித்தத்தை அறியவிருந்ததைப் பார்க்கிறோம். கர்த்தர் அதற்குப் பின்தொடர்ந்து போகச் சொல்லி, அவர்களைச் சங்கரித்து அனைத்தையும் திருப்பிக் கொள்வாயென்று வாக்களித்தார்.
தாவீது அமலேக்கியருடன் செய்த யுத்தம்:
உடனே தன்னோடிருந்த 600 பேருடன் யுத்தத்துக்குப் போனான் அதில் 200 பேர் பேசோர் ஆற்றண்டை வந்த போது நின்று விட்டனர் மீதமிருந்த 400 பேருடன் கிளம்பினான். அப்பொழுது அங்கு அமலேக்கியரால் தள்ளப்பட்ட எகிப்தியனைப் பார்த்து, அவன் மூலம் அமலேக்கியப் படைகள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு அங்கு போனார்கள். அங்கே அவர்கள் சிக்லா க்கில் கொள்ளையிட்ட சந்தோஷத்துடன் புசித்துக் குடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். தாவீது கர்த்தரின் வார்த்தையின் படி அவர்களை முறிய டித்தான். அமலேக்கியர் பிடித்துக் கொண்டு போன எல்லாவற்றையும் அவ னுடைய இரண்டு மனைவிகளையும், அவர்கள் கொள்ளையாடிக் கொண்டு போன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத் திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிக் கொண்டான்.. அமலேக்கியர் கொள்ளையாடிக் கொண்டு போக அனுமதி கொடுத்த தேவன் அதை அனுபவிக்க அவர்களுக்கு அனுமதி கொடுக்க வில்லை. தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் வடித்த கண்ணீர் வீணா ய்ப் போகாமல் கர்த்தர் அதைக் களிப்பாக்கினார். சங்கீத 18 : 18 ல் அவரு டைய ஆபத்து நாளில் சத்துருக்கள் எதிரிட்டு வந்தபோது கர்த்தர் அவரு க்கு ஆதரவாயிருந்தார் என்று அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம்.
இழந்ததை மீட்டுத் தருபவர் இயேசு:
இழந்து போனதைத் தேடும்படி பூமிக்குவந்தவர் இயேசு.அதற்காகத் தன்னு டைய ஜீவனையே அர்ப்பணித்தார். தன்னை சிலுவையிலறைய ஒப்புக் கொடுத்தார். நம்மைப் பாதாளத்தின் பிடியிலிருந்தும், பிசாசின் பிடியிலிரு ந்தும், நம்மை மீட்டெடுத்தவர் இயேசு. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த போது அதுவரை அவர்கள் தேவனோடிருந்த மேன்மையான ஐக்கியத்தை யும் உறவையும் பிரசன்னத்தையும் இழந்து போனார்கள். அதை மீண்டும் சீர்படுத்தவே மனுஷகுமாரனாக இயேசு வந்தார். முன்புபோல அவர்களால் கர்த்தரோடு பேசி மகிழ முடியாமல் போனது. குற்றமனசாட்சியால் தோட் டத்து விருட்சங்களுக்குள் போய் ஒளிந்து கொண்டனர். சிங்கத்தைப்போல் ராஜாவின் முன் கர்ஜித்தஎலியா யேசபேல் என்ற ராணி தன்னைக் கொலை செய்ய வகை தேடுகிறாள் என்பதையறிந்து பயத்தில் தன்னுடைய பிராண னைக் காக்க வனாந்தரத்திற்குச் சென்று சூரைச்செடியின் கீழ் போய்ப் படுத் துக் கொண்டார். ஆனால் கர்த்தரோ இழந்துபோன உற்சாகத்தை எலியா வுக்குத் திரும்பக் கொடுக்க சித்தம் கொண்டு ஒரு தேவதூதனை அனுப்பி எலியாவைத் தட்டி எழுப்பிப் போஜனம் பண்ணச் செய்தார். எலியா அந்த உற்சாகத்துடன் ஓரேப்பர்வதம் வரைக்கும் நடந்து சென்றான். நியாயாதிப தியாகிய சிம்சோன் தன்னுடைய பலம் முழுவதையும் இழந்து விட்டதால் பெலிஸ்தியரின் வேடிக்கைப் பொருளானார். மொட்டையடிக்கப்பட்ட தலை யு டனும், விலங்குகள் போடப்பட்ட கைகளுடனும், குருடாக்கப்பட்ட கண்களுடனும் கர்த்தரை நோக்கி “இந்த ஒருவிசை மாத்திரம் தன்னை நினைத்தருள” கண்ணீரோடு வேண்டினான். பரிசுத்த ஆவியின் பலனை இழந்து போயிருந்த சிம்சோன் கர்த்தர் மீண்டும் அவனுக்குப் பலனைக் கொடுத்து பெலிஸ்தியரை வீழ்ச்சியடையச் செய்தார் (நியாயாதிபதிகள் 16 : 18 – 31). யோவான் 11:49ல் செத்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்று நாட்க ளுக்குப் பின் லாசருவே வெளியேவா என்று கூப்பிட்டு இழந்து போன ஜீவனை மறுபடியும் பெற்றுக்கொள்ளச் செய்தார். நாமும் அநேக வேதனை களோடும், கண்ணீரோடும் கலக்கத்துடன் இருக்கும் போது கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்ற விசுவாச வார்த்தைகளை அறிக்கையிட்டு அவரையே நோக்கிப் பார்த்து ஜெயம் பெறுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…