ஆகார்:

எகிப்து தேசத்தில் ஆபிராமும், சாராயும் வாழ்ந்த போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த அடிமைப்பெண் ஆகார். கானான் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது ஆபிரகாமும், சாராயும் எகிப்து தேசத்துக்குச் சென்றனர். அங்கு பார்வோனால் அடிமையாகக் கொடுக்கப்பட்ட பெண் ஆகார் (ஆதி யாகாமம் 12 : 16). ஆகார் ஆபிரகாம் வீட்டில் வேலைக்காரியாக இருந்தாள். அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால், கர்த்தர் தருவேன் என்று கூறியும் அவசரப்பட்டு சாராய் ஆகாரை ஆபிரகாமுக்கு மறுமனையாட் டியாக்கினாள். தங்கள் வேலைக்காரிகள் மூலம் தங்கள் குடும்பங்களைக் கட்டுவது அன்றைய கலாச்சாரத்துக்கு முற்றிலும் ஒத்தது. ஆனால் இது தேவதிட்டத்துக்கு ஒத்துப்போவதில்லை.ஆகார்என்ற சொல்லுக்கு பரதேசி எந்று பொருள். பரதேசி என்றால் அலைந்து திரிகிறவள் என்று பொருள். அதேபோல்தான் அவளுடைய வாழ்க்கையும் அமைத்திருந்தது. 

தேவன் படைத்துப் பெயர் சூட்டிய மனித குலத்திலிருந்து முதன்முதலில் தேவனுக்குப் பெயர் சூட்டியது ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. அவள் தான் இந்த ஆகார். இவள் தேவனை விசுவாசித்து என்னைக் காண் பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் என்று சொல்லித் தன்னோடு பேசின தேவனுக்கு “நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிட்டாள். ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்க அழைக்கப் பட்டிருந்தாலும் சரி, இல்லாவிட் டாலும் சரி தேவனைச் சார்ந்து கொள்ளும் எந்த ஒரு நபரையும் தேவன் ஆசீர்வதிப்பது உறுதி. ஒடுக்கப்படுகிறவர்களுக்கு அவரே தஞ்சம்.ஆகார் இதைத் தன்னுடைய வாழ்வில் புரிந்து கொண்டவள். ஆபிரகாமுக்கு 87 வயதாயிருக்கும்போது ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான். ஆபிரகாமுக்கு 100 வயதாயிருக்கும்போது சாராயின் மூலம் கர்த்தரின் வார்த்தையின்படி ஈசாக்கு பிறந்தான். அப்போது இஸ்மவேலுக்கு வயது 14. 

சாராள் கோபத்தில் கூறியது:

ஆதியாகமம் 21 : 9,10 “பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,” “ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றள்.” 

ஈசாக்கு பால் மறந்த போது இஸ்வேலின் வயது கிட்டத்தட்ட 19 அல்லது 20 வயது இருந்திருக்கும். இஸ்மவேலுக்கும், ஈசாக்கிற்கும் கலகம் ஏற்பட்ட தால் இஸ்மவேல் ஈசாக்கைப் பார்த்து பரிகாசம் பண்ணினான். 

கலாத்தியர் 4 : 29ல் “ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின் படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழு தும் நடந்துவருகிறது.”

என்று பவுல் கூறுகிறார். இதைப் பார்த்த சாராள் கோபப்பட்டு ஆபிரகாமிடம் அடிமை பெண்ணாகிய ஆகாரையும் அவளுடைய மகனையும் புறம்பே தள்ளச் சொன்னாள். அது மட்டுமல்லாமல் இஸ்மவேல் என் குமார னாகிய ஈசாக்கோடு சுதந்திரவாளியாக இருப்பதில்லை என்றும் ஆணித்தரமாகக் கூறினாள். ஆபிரகாமுக்கு ஆகாரை வெளியே அனுப்புவதில் விருப்பம் இல்லாவிட்டாலும், சாராயின் சொற்படி கேட்கக் கர்த்தர் கூறியதால் அவளை வெளியே அனுப்ப முடிவு செய்தான். ஆதியாகமம் 17:18ல் ஏற்கெ னவே ஆபிரகாம் இஸ்வேலுக்காகக் கர்த்தரிடம் வேண்டியிருந்தான். ஏனெனில் மேசியாவின் சந்ததி ஈசாக்கின் மூலம் வரவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாய் இருந்தது. கர்த்தர் ஆபிரகாமிடம் சாராளின் சொற் படி கேட்கக் கூறினார். ஆனாலும் இஸ்மவேலையும் ஒரு ஜாதியாக்கு வேன் என்று கர்த்தர் ஆகாரிடம் வாக்குரைத்திருந்தார். கர்த்தர் ஆபிரகாமிடமும், 

ஆதியாகமம் 17:20ல் “இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத் தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிக மாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக் களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.” என்றார்.

லாத்தியர் 4 : 30 “அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.”

ஆகார் வீட்டை விட்டு அனுப்பப்பட்டாள்:

ஆதியாகமம் 21 : 14 – 16 “ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.”

 அடுத்த நாள் காலையில் அப்பமும், ஒரு துருத்தி தண்ணீரும் கொடுத்து ஆகாரையும்,இஸ்மவேலையும் ஆபிரகாம் அனுப்பிவிட்டான்.அவள் நேரே சென்றிருந்தால் தன்னுடைய ஜனத்தாரண்டை போய்ச் சேர்ந்திருப்பாள். மனதில் பாரத்துடன் சென்றபடியால் வழிதவறி விட்டாள். அதனால் அவள் பெயர்செபா வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். அவள் கொண்டு வந்த தண்ணீர் காலியானதினால் தன்னுடைய மகனை ஒரு செடியின் கீழ் விட்டு விட்டு “அவன் சாகிறதை நான் பார்க்க மாட்டேன்” என்று தூரத்தில் போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டு மனமிறங்கினார். நமது பிள்ளைகள் நம்மை விட்டுத் துரத்திலிரு ந்தாலும், சமீபத்திலிருந்தாலும் அவர்கள் சத்தத்தைக் கேட்கிறவர் கர்த்தர். நம்முடைய பிள்ளைகள் கர்த்தரை நோக்கி ஜெபிக்க நாம் பழக்குவிக்க வேண்டும். கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்குக்கூட இரங்குகிறவர் நம் தேவன்(சங்கீதம் 147 :9). 

இதேபோல் கர்த்தர் எகிப்தியர் இஸ்ரவேலரை ஒடுக்கியதால் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டதை எண்ணாகம் 20:16லும் உபகாமம் 26:7 லும் பார்க்கிறோம்.ஆகாரே என்று கூப்பிட்டு பயப்படாதே என்று கூறி “அவனை பெரிய ஜாதியாக்குவேன்” என்றார். ஆகாரின் கண்களைத் திறந்தார். அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு அதிலிருந்து தண்ணீரை மொண்டு பிள்ளை க்குக் குடிக்கக் கொடுத்தாள். இஸ்மவேல் அந்தத் தண்ணீரைக் குடித்து பிழைத்தான். இதேபோல் நாமும் சில நேரங்களில் வனாந்தரமான வாழ்க் கையில் வாழ்ந்து அழுது கொண்டிருக்கலாம். இஸ்மவேலின் சத்தத்தைக் கேட்டுக் கர்த்தர் ஆகாரின் கண்களைத் திறந்ததைப் போல நம்முடைய கண்களையும் திறப்பார். நாம் அநேக வேளைகளில் ஆசீர்வாதத்தை சுதந்த ரிக்க முடியாததற்குக் காரணம் நமது கண்கள் திறக்கப்படாததே. நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும்போது உன்னதத்திலுள்ள சகல ஆசீர் வாதங்களையும் நாம் கண்டு அவற்றைச் சுதந்தரிக்க முடியும். 

இதே போல் வேதத்தில் பிலேயாம் தீர்க்கதரிசி மாறுபாடான வழியில் சென்றபோது, கர்த்தர் கழுதையைப் பேசவைத்து அவனுடைய கண்களை திறந்தார். வழியில் கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தோடு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான் என்று (எண்ணாகாமம் 22:21-31) ல் பார்க் கிறோம். அதேபோல் சீரிய ராஜாவின் காரியங்களை எலிசா இஸ்ரவேல் ராஜாவுக்குக் கர்த்தர் கூறியதால் தெரிவித்தான். எனவே ராஜா கோபம் கொண்டு அவனைப்பிடிக்க தனது இராணுவத்தை அனுப்பினான். அதைக் கண்ட எலிசாவின் வேலைக்காரனாக கேயாசி பயந்தான் அப்பொழுது 2 இராஜாக்கள் 6:17ல் எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி அவன் கண்களைத் திறந்தருளும் என்று ஜெபித்தான். கர்த்தர் அந்த வேலைக் காரனின் கண்களைத் திறந்தார். எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரத்தங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதைப் பார்த்தான். 

கருத்து:

ஆகார் ஒருஅடிமைப்பெண்.வாக்குதத்தத்துக்குப் புறம்பானவள். ஆனாலும் தேவன் அவளுடைய அழுகையின் கண்ணீரை மாற்றினார். இஸ்மவே லோடு கூட சர்வவல்லதேவன் இருந்தார் (ஆதியாகமம்21:20). தேவன் வாக் குரைத்த படி ஆகாரின் தேவைகள் சந்திக்கப்பட்டன. நம்முடைய கண்ணீ ரின் ஜெபம் தேவனுடைய உள்ளத்தை உருக்கும். உலகத்திலுள்ள நண்பர் களும், உறவினர்களும் நமது கண்ணீரை அசட்டை செய்யலாம், தேவன் அப்படிப்பட்டவரல்ல. அவர் நமது கண்ணீரைக் களிப்பாக்குகிறவர். எனவே தேவசமூகத்தில் கண்ணீரின்விதைகளை ஊன்றுவோம்.ஆகாருக்குப் பதில் கொடுத்த ஆண்டவர் நமக்கும் பதில் கொடுப்பார். தேவன் நமது துக்கங் களையும், துயரங்களையும் மட்டும் காண்கிறவர் அல்ல. அவர் நமது உண் மைத்துவம், நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, நம்முடைய வாழ்வில் நாம் அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தையுமே காண்கிற வராய் இருக்கிறார். சங்கீதம் 33: 13,14,15 ல் கூறியிருக்கிறபடி, கர்த்தர் நம்மைக் காண்கிறவர். நம்மீது கண்ணோக்கமாயிருக்கிறார். நம்முடைய செயகைகளைக் கவனிக்கிறார். கர்த்தர் நம்மைக் காண்கிறவர், நம்மைக் கவனிக்கிறவர் என்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவை. ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago