நூலகம்

பத்சேபாளுடன் தாவீதின் பாவம்: தேவனின் மன்னிப்பு மற்றும் பாவத்தின் விளைவுகள்

தாவீதும், பத்சேபாளும்

ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்தவன் ஓபேத். ஒபேத்தின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது. தாவீது ஆடு மேய்ப்பவனாக இருந்த போது கர்த்தர் சவுல் ராஜா கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்படியாததால் அவனுக்குப் பதிலாக ஈசாயின் மகனான தாவீதை அபிஷேகம் பண்ணச் சொல்லி சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பி அபிஷேகம் பண்ண வைத்தார் (1சாமுவேல் 16 : 1 – 13). இவ்வாறு ராஜாவாக ஆனவன் தாவீது. இராட்ச தனான கோலியாத்தை கர்த்தரின் நாமத்தில் கூழாங்கற்களை எறிந்து கொன்றவன் தாவீது (1 சாமுவேல் 17 : 49 – 51). கர்த்தருக்குப் பிரியமானவன் என்று பெயரெடுத்தவன் (1சாமுவேல் 13 : 14). தாவீது. பத்சேபாள் அகித்தோப்பேலின் குமாரன், எலியாமின் குமாரத்தி. ஏத்தியனான உரியாவின் மனைவி. 2சாமுவேல் 23 ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள 37 பராக்கி ரமசாலிகளில் அகித்தோப்பேலும், எலியாமும், உரியாவும் உள்ளனர் (2சாமுவேல் 23 : 8, 34, 39). இதிலும் அகித்தோப்பேல் தாவீதின் ஆலோச னைக்காரனாயிருந்தவன் (2சாமுவேல் 15 : 12).

அம்மோன் புத்திரருடன் போருக்குக் காரணம்:

2சாமுவேல் 10ம் அதிகாரத்தில் அம்மோன் புத்திரரின் ராஜாவான நாகாஸ் மரித்து ஆனுன் ராஜாவானான். தாவீது நாகாஸ் தனக்குத் தயை செய்தது போல அவன் குமாரனுக்கும் தான் தயை செய்வேன் என்று சொல்லி, ஆனுனுக்கு ஆறுதல் சொல்ல தன்னுடைய ஊழியக்காரரை அனுப்பினான். ஆனால் அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் “நம்முடைய பட்டணத்தை உளவு பார்க்கவும், அதைக் கவிழ்த்துப் போடவும் ஆள் அனுப்பியிருக்கிறான்” என்று கூறினதினால் ராஜா கோபமடைந்தான். தாவீது அனுப்பின ஊழியக்கா ரர்களைப் பிடித்து, அவர்களுடைய ஒரு பக்கத்துத் தாடியைச் சிரைப்பித்து, அவர்களுடைய வஸ்திரங்களில் முக்கால் வாசியையும் கத்தரித்துப் போட்டு அனுப்பி விட்டான். இது தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர்களது தாடி வளருமட்டும் எரிகோவிலிருக்கக் கட்டளையிட்டான். அதனால் தாவீது யோவாபையும், பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அவர்க ளுக்கு எதிராக அனுப்பினான். அவர்களுக்கு உதவி செய்ய சீரியரும் நின்றனர். யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர் மேல் யுத்தம் பண்ணினதினால் அவர்கள் முறிந்தோடினார்கள். தாவீது சீரியரின் 700 இரத வீரரையும், 40000 குதிரை வீரரையும் கொன்று, அவர்களது படைத்தலைவனான சோபாகையும் சாகும்படி வெட்டிப் போட்டான் (2 சாமுவேல் 10ம் அதிகாரம்). சீரியர் முறிந் தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்ட போது அவர்களும் முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தனர். எனவே யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்குப் போனான். மறு வருஷம் மழைக்காலம் முடிந்து வசந்தகாலம் வந்தபோது, தாவீது எல்லாப் பொறுப்புகளையும் படைத் தலைவனான யோவாபின்மேல் திணித்து, யோவாபையும் இஸ்ரவேல் அனைத்தையும் அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீது மட்டும் போகாமல் எருசலேமில் இருந்து விட்டான் (1 சாமுவேல் 11 : 1).

தாவீதின் இச்சை:

அந்நாட்களில் ராஜா கண்டிப்பாகப் போருக்குச் செல்ல வேண்டும். ஆனால் தாவீதோ போர்க்களத்துக்குச் செல்லாமல் தன்னுடைய கடமையைச் செய் வதை விட்டு விட்டு அரண்மனையில் இருந்து விட்டான். இது கர்த்தருக்குப் பிடிக்காத செயல். எனவே சாத்தான் அவன் மனதுக்குள் புகுந்து இச்சைக்கு அடிமையாக்கினான். ஒருநாள் தூங்கியெழுந்து தன்னுடைய அரண்மனையின் உப்பரிகையில் அதாவது மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று சங்கீதம் 1 : 1 ல் எழுதிய தாவீது, அதைத் தியானிக்காமல் இச்சைக்கு இடம் கொடுத்தான். யோபு தான் கண்களோடு உடன்படிக்கை பண்ணியிருப் பதாகவும் அதனால் தான் கன்னிகையின்மேல் நினைவாயிருக்க முடியாது என்றும் கூறியதை யோபு 31 : 1 ல் பார்க்கிறோம். அப்பொழுது தூரத்தில் கீழே குளித்துக் கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணைக் கண்டான். உடனடியாகத் திரும்பி அரண்மனைக்குள் சென்று வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது.

ஆனால் தாவீதோ அந்தக் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யாரென்று அறிய ஆளனுப்பினான். ஏற்கெனவே தாவீதுக்கு மனைவிகளும், மறுமனையாட்டிகளும் உண்டு. சேவகன் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்து, அவள் இஸ்ரவேலின் பராக்கிரசாலிகளில் ஒருவனான எலியாமின் மகளும், இன்னுமொரு பராக்கிர மசாலியான ஏத்தியனான உரியாவின் மனைவியுமென்றான். அதைக் கேட்ட பின்னும் ஆசையை அடக்காமல், மனம் மாறாமல், அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொன்னான். இதைக் கேட்டு சேவகன் வியந்திருப்பான். ராஜா ஜெபிக்கிறவனாயிற்றே, தேவனால் அபிஷேகம் பண்ணினவனாயிற்றே, தேவனு டைய நாமத்தை தூஷித்ததினால் இராட்சதனான கோலியாத்தைக் கொன்றவ னாயிற்றே என்று கலங்கியிருப்பான். ஆனாலும் ராஜாவின் கட்டளைப்படி அவளை அழைத்து வந்தான். தாவீது அவளை அழைத்து அவளோடு சேர்ந்தான். ராஜாவின் இச்சைக்கு எதிர்த்து நின்றால் கொன்று போடுவானோ என்று பயந்து, அவனுடைய இச்சைக்கு இணங்கியிருக்கலாம்.

ஆனாலும் அவள் மறுப்பேதும் சொல்லாமல் இணங்கியது சரியல்ல. ராஜாவுக்கு மனைவியாகப் போகிறோமே என்று சம்மதித்திருக்கலாம். அப்படிப்பட்ட உள்நோக்கம் எதுவு மில்லையென்றால், தேவஜனங்கள் மத்தியில் குடியிருந்த அவள் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ள சத்தமிட்டி ருக்கலாம். இந்தத் தவறை இரண்டு பெரும் உடன்பட்டே செய்ததினால், அவள் கர்ப்பவதியானதை தன்னுடைய கணவனுக்கு அறிவிக்காமல் ராஜா வுக்கு அறிவித்தாள். இது தன்னுடைய கணவனால் உண்டான கர்ப்பமல்ல. தாவீது ராஜாவினால் உண்டான கர்ப்பம் என்று அவளுக்குத் தெரியும். ராஜா அனுப்பின பதார்த்தங்களை அவள் ஏற்றுக் கொண்டாள். உரியாவின் மனைவியுடன் தான் செய்த தவறு நான்கு சுவர்களுக்கு மட்டுமே தெரியும் என தாவீது நினைத்தான். ஆனால் கர்த்தரின் கண்கள் பார்த்தது (139 ம் சங்கீதம்). தாவீது அவளோடு அதாவது இன்னொருவன் மனைவியுடன் பண்ணியது விபச்சாரம்.

தாவீது உரியாவைக் கொல்ல வைத்தது:

தாவீது இதை மறைக்கத் திட்டம் தீட்டி, உரியாவைப் போர் முனையிலிருந்து தன்னிடம் அனுப்பச் சொல்லி சேவகர்களை அனுப்பினான். யோவாபும் போர்க் களத்திலிருந்த உரியாவை ராஜா அழைப்பதாகக் கூறி அனுப்பி விட்டான். உரியா வந்தபோது அங்குள்ள செய்தியை விசாரித்து விட்டு வீட்டிற்குப் போகச் சொல்லி அனுப்பினான். தான் செய்த பாவத்திலிருந்து தப்புவிக்க, அந்தக் கர்ப்பம் தன்னால் உண்டானதல்ல என்று மற்றவர்கள் உணர அவனை வீட்டிற்கு அனுப்புகிறான். பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட் டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28 : 13 ல் உள்ளது. தாவீதோ தான் செய்த பாவத்தை மறைக்கத் திட்டங்கள் தீட்டுகிறான். ஆனால் நடந்தது என்னவென்றால் மறுநாள் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல் அங்குள்ள எல்லாச் சேவகரோடுங் கூட படுத்துக் கொண்டிருந்தான். இது தாவீதுக்குத் தெரிந்தவுடன் உரியாவை அழைப்பித்து “நீ பயணத்திலிருந்து வந்தவனல்லவா ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான். அதற்கு உரியா,

2சாமுவேல் 11 : 11 “உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.”

என்ன கூறுகிறானென்றால் கர்த்தருடைய பெட்டியும், இஸ்ரவேலரும், யூதாவும் கூடாரங்களில் இருக்கிறார்களே, யோவாபை ஆண்டவன் என்று கூறி அவனுடைய சேவகரும் வெளியிலே பாளையத்திலிருக்கிறார்களே, இந்த வேளையில் தான் எப்படி தன்னுடைய வீட்டிற்குச் சென்று புசித்துக் குடித்து, மனைவியோடு சயனிப்பேன் என்றான். அவனுடைய நோக்கம் முழுவதும் அம்மோன் புத்திரரை முறியடிக்க வேண்டுமென்பதுதான். இவன் ஒரு அந்நியனான ஏத்தியன். இஸ்ரவேலர் கானானுக்குள் பிரவேசிக்கும் முன் அங்கு 7 விதமான ஜாதியார் வசித்தனர். அதில் ஒரு ஜாதியார் தான் ஏத்தியர். இவன் எவ்வாறு தாவீதின் படையில் சேர்ந்தானென்றால், மனந்திரும்பி கர்த்தரை ஏற்று யூதனாக மாறினதினால்தான். அதுமட்டுமல்லாமல் அதை தான் செய்வதில்லையென்று தாவீதின் பெயரிலும், அவனுடைய ஆத்மாவின் பெயரிலும் ஆணையிட்டான். அன்னியபுத்திரனான அவன் இரட்சிக்கப்பட்டு இஸ்ரவேலுக்காக வைராக்கியமாக நிற்கிறானே என்று அவனைப் பார்த் தாவது தாவீது திருந்தியிருக்க வேண்டும்.

ஆனால் தாவீதோ அடுத்த திட்டம் தீட்டி உரியாவை நோக்கி இன்றைக்கு மட்டும் இங்கேயிரு, நாளை அனுப்பி விடுவேன் என்று கூறி, அவனை நன்றாக புசித்துக் குடிக்க வைத்து வெறிக்கப் பண்ணினான். அப்பொழுதாவது குடிபோதையில் அவன் தன்னுடைய வீட்டுக்குப் போவான் என்றெண்ணினான். நீதிமொழிகள் 21 : 30ல் கர்த்தருக்கு விரோதமான ஞானமும் புத்தியும் ஆலோசனையுமில்லை என்று கூறப்பட்டுள்ளது தாவீது எத்தனை ஆலோசனை பண்ணித் திட்டங்கள் தீட்டினாலும் அது ஒன்றும் வாய்க்காது. ஏனெனில் யோபு 5 : 12 “தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.” என்றுள்ளது. ஆனால் உரியா அன்றும் அங்குள்ள சேவகர்களோடே படுத்துக் கொண்டான். அதன் பின் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதமெழுதி உரியாவின் கையிலே கொடுத்தனுப்பினான். அதில் என்ன எழுதினானென்றால் மும்முரமாக நடக்கும் போர்முகத்தில் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி செய்யுங்கள் என்று எழுதியிருந்தான்.

இதேபோல் யேசபேல் 1இராஜாக்கள் 21 : 8, 9 ல் ஒரு கடிதமெழுதி ஒரு பாவமும் செய்யாத நாபோத்தை ஜனங்கள் முன் நிறுத்தி பொய்சாட்சி சொல்ல வைத்து கல்லெறிந்து கொல்ல வைத்தாள். உரியா மரண தண்டனை கடிதத்தைத் தானே சுமந்து சென்றான். உரியா ஏன் கொல்லப்பட வேண்டு மென்று யோவாபுக்குத் தெரியாத போதிலும் தாவீதின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தான். அதேபோல் உரியாவை பராக்கிரமசாலிகள் இருக்குமிடத்தில் நிறுத்தி உரியாவைக் கொல்ல வைத்தான். தாவீதின் பாவத்தினால் பத்சேபாளும், யோவாபும் பாவம் செய்தனர். யோவாப் இந்தச் செய்தியை தாவீதுக்குச் சொல்லியனுப்பினான். தாவீதோ யோவாபுக்கு அதற்காக விசாரப்பட வேண்டாமென்றும், யுத்தத்தைப் பலக்கப் பண்ணி, பட்டணத்தை இடித்துப் போடச் சொல்லி அனுப்பினான். பத்சேபாளுக்குத் தன்னுடைய கணவன் இறந்த செய்தி தெரிந்தவுடன் அவனுக்காக இழவு கொண்டாடினாள். துக்கநாள் சென்ற பின்பு தாவீது பத்சேபாளை அழைத்தனுப்பி தன்னுடைய மனைவியாக்கினான் (2சாமுவேல் 11ம் அதிகாரம்). தாவீதின் செயலினால் பத்சேபாளுக்குக் குழந்தை பிறக்கும்வரை தான் செய்த பாவத்தைக் குறித்து வருந்தவில்லை.

கர்த்தர் கொடுத்த தண்டனை: 

உபகாமம் 22 : 22 ல் “புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்;” என்றுள்ளது.

தீர்க்கதரிசிகள் ஜனங்களின் பாவங்களைக் கண்டித்து உணர்த்துவதும், ராஜாவின் தவறுகளை எடுத்துக் கூறுவதும் அவர்களின் பணி. கர்த்தர் நாத்தான் தீர்க்க தரிசியைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். நாத்தான் ஞானமாக ஒரு உவமை யின் மூலம் தாவீது தன்னையே குற்றவாளி என்று கூறும்படி செய்தார். அது என்ன உவமையென்றால் ஒரு ஐசுவரியவானுக்குத் திரளான ஆடுமாடுக ளிருந்தது. அங்கு ஒரு தரித்திரனுமிருந்தான். அவனிடம் ஒரு சின்ன ஆட்டுக் குட்டி அவன் பிள்ளைகளோடு வளர்ந்து, அவன் மடியிலே படுத்து, ஒரு பிள்ளை யைப் போல இருந்தது. அந்த ஐசுவாரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்ததால், அவன் தன்னுடைய திரளான ஆடுகளிலிருந்து ஒன்றையெடுத்து அவனுக்குச் சமைக்க மனதில்லாமல், தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து அந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவித்தான். இதில் ஐசுவரி யவானாக தாவீதும், தரித்திரனாக உரியாவும், தரித்திரனின் ஆட்டுக்குட்டியாக பத்சேபாளும், வழிப்போக்கனாக மாம்ச இச்சையும் உருவகப்படுத்திக் கூறப் பட்டுள்ளது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த தாவீது மிகுந்த கோபம் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்த ஐசுவரியவான் மரணத்திற்குப் பாத்திரன். என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். இரண்டாவதாக அவன் இரக்கமற்ற இந்தக் காரியத்தைச் செய்தபடியினால் அந்த ஆட்டுக் குட்டிக்காக நாலத்தனையாகத் திரும்பச் செலுத்த வேண்டுமென்றான். தாவீது தன்னுடைய வாயாலே தனக்குரிய நியாயத்தீர்ப்பை அறிக்கையிட்டான். அதற்கு நாத்தான் “நீயே அந்த மனுஷன்” என்றான் (2சாமுவேல் 12 : 17). நீயே அந்த மனுஷன் என்று கூறியதால் பாவம் பண்ணியது தாவீது என்றுள்ளது. வேதத்தில் பத்சேபாள் வேறு எந்தத் தவறும் செய்ததாகச் சொல்லப் படவில்லை. கர்த்தர் நாத்தானிடம் என்ன கூறினதாகக் கூறினாரென்றால்,

  1. கர்த்தர் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.
  2. சவுல் ராஜாவின் கைக்குத் தாவீதைத் தப்புவித்தார்.
  3. ஆண்டவனின் வீட்டைக் கொடுத்தார்.
  4. ஆண்டவனுடைய ஸ்திரீகளைத் தாவீதின் மடியிலே கொடுத்தார்.
  5. இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் தாவீதுக்குக் கொடுத்தார்.
  6. இது போதாதென்றால் இன்னும் கொடுத்திருப்பேன் என்கிறார் (2சாமுவேல் 12 : 7,8).

இத்தனையும் கொடுத்தும் தாவீது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததாலும், கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணி, ஏத்தியனான உரியாவின் மனைவியை தனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டதாலும், உரியாவை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்று போட்டதாலும், கர்த்தர் கொடுக்கும் தண்டனைகள் என்னவென்றால்:

  1. பட்டயம் என்றைக்கும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்கும்.
  2. ஒளிப்பிடத்தில் நீ செய்த காரியத்தை உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து இஸ்ரவேலர் எல்லாருக்கும் முன்பாகவும், சூரிய வெளிச்சத்திலே உனக்கடுத்தவன் சயனிப்பான்.
  3. உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் (2சாமுவேல் 10 – 14).

தாவீது கர்த்தரைக் கனம் பண்ணிய போது “என் கிருபை உன்னை விட்டு விலகாது” என்றார். கர்த்தரின் வார்த்தையை அசட்டை பண்ணிய போது பட்டயம் என்றைக்கும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்குமென்றார். தாவீது உடனே தான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்று அறிக்கை யிட்டான். தாவீதின் மனதிரும்புதலுக்கு இரங்கிய தேவன் அவனது மரணத்தை மாற்றினார். ஆனால் தாவீது நாலத்தனையாகச் செலுத்த வேண்டியதாயிற்று. அது யாத்திராகம விதிமுறைப்படியாக இருந்தது (யாத்திராகமம் 22 : 1). தேவ வாக்கின்படி நடந்தது என்னவென்றால்:

  1. தாவீதின் மூலம் பிறந்த பிள்ளை வியாதிப்பட்டு மரித்தது (2 சாமுவேல் 12 : 15).
  2. தாவீதின் சொந்த மகளான தாமார், அவனது சொந்த மகளான அம்னோனால் கற்பழிக்கப்பட்டாள் ((2சாமுவேல் 13 : 1, 20) .
  3. தாவீதின் சொந்த மகன் அம்னோன் இன்னொரு மகனான அப்சலோமால் கொல்லப்பட்டான் (2 சாமுவேல் 13 : 21, 29).
  4. தாவீதின் மகன் அப்சலோமால் அரியணையை விட்டுத் தாவீது ஓடினார் (2சாமுவேல் 1 _ 18).
  5. அப்சலோம் தாவீதின் போர்வீரனால் அடித்துக் கொல்லப்பட்டார் (2சாமுவேல் 18 : 15).
  6. தாவீதின் இன்னொரு மகனான அதோனியா சாலோமோனால் கொல்லப்பட்டார் (1 இராஜாக்கள் 1 : 11 – 27, 2 : 25).
  7. அப்சலோம் சகல இஸ்ரவேலர் கண்களுக்கு முன்பாக தன் தகப்ப னுடைய மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான் (2சாமுவேல் 16 : 22).

முடிவுரை:

கர்த்தர் ஏன் தாவீதை விழுவதற்கு அனுமதித்தார்? தாவீது வீழாதிருந்தால் பாவ அறிக்கையின் சங்கீதமான 51ம் சங்கீதம் நமக்குக் கிடைத்திருக்காது. அதில் தாவீது தன்னைச் சுத்திகரிக்கச் சொல்லியும், மன்னிக்கச் சொல்லியும் மன்றாடுவதைப் பார்க்கிறோம். மேலும் அறியாமல் தவறி விழுந்து தத்த ளிக்கும் கர்த்தருடைய பிள்ளைகள், கர்த்தர் திரும்பவும் தாவீதைச் சேர்த்துக் கொண்டதைப் போலத் தங்களையும் சேர்த்துக் கொள்வார் என்று நம்பி பின்மாற்றத்திலிருந்து கர்த்தரிடம் திரும்பி வருவதற்குப் பயனுள்ளதாக இந்தச் சம்பவம் கொடுக்கப்பட்டுள்ளது. சகலத்தையும் பார்க்கும் கர்த்தரின் கண்கள் தாவீதின் தவறையும் பார்த்தது. அதற்காக நியாயத்தீர்ப்பு செய்யும் பொறுப்பை நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் தாவீதுக்குப் புரிய வைத்து, தாவீதின் வாயாலேயே நியாயத்தீர்ப்பைக் கூற வைத்தார் (1பேதுரு 1 : 17). பிறன் மனை வியை இச்சியாதிருப்பாயாக என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளில் ஒன்று (உபகாமம் 5 : 21).

அவ்வாறு இச்சித்துக் கட்டளையை மீறுகிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று எண்ணாகமம் 15 : 30 ல் பார்க்கிறோம். எனினும் இந்த நிகழ்ச் சியில் இந்தத் தண்டனையைத் தேவன் ஒதுக்கி வைத்தார். தவறு செய்த தாவீதையும், பத்சேபாளையும் கர்த்தர் மன்னித்து ஏற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்று அட்டவணையில் அவர்களுக்கு ஓரிடம் அளித்துத் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார் (மத்தேயு 1 : 1, 6). தாவீதின் மீதி வாழ்நாள் முழுவதும் அவன் தேவனுடைய நீதிக்கு உதாரணமாகக் காணப்பட்டான். மகாப்பெரிய பாவம் செய்த ஒரு ஆவிக்குரிய தலைவன் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது. கர்த்தர் தாவீதின் பாவங்களை மன்னித்து விட்டதால் அவன் மரணத்துக்கும், நித்திய தண்ட னைக்கும் தப்புவிக்கப்பட்டான் (1யோவான் 3 : 15) இவ்வாறு தாவீது மீட்கப் பட்டு இரட்சிப்படைந்தான். தேவனோடு மீண்டும் நல்லுறவு கொண்டான்.

தாவீதின் பாவங்கள் தேவனால் மன்னிக்கப்பட்டு, அவன் மீட்கப்பட்ட போதிலும், அதன் பின்னர் அவனுடைய வாழ்க்கையின் அனுபவங்கள், பாவங்களை தேவன் எளிதில் மன்னித்து மறந்து விடுவார் என்று லேசாக நினைப்பவர் களுக்கு ஒரு எச்சரிக்கை பாடமாகும். அதற்குப் பின்பு தாவீதுக்கும் பத்சேபா ளுக்கும் பிறந்த சாலொமோனை கர்த்தர் ஆசீர்வதித்தார். அவனுக்கு நாத்தான் யெதிதியா என்று பேரிட்டான். யெதிதியா என்றால் “கர்த்தரால் அன்பு கூறப்பட் டவன்” என்று பொருள். சாலொமோன் மூலமாகவே கர்த்தர் தேவாலயம் கட்டக் கட்டளை கொடுத்தார். நாமும் தாவீதை போலக் கண்களின் இச்சைக்கு இடம் கொடுக்காமல், தேவனுக்குப் பயந்து அதற்கு விலகுவோமாக. எனவே தவறிப் போன விசுவாசிகள் கர்த்தரிடம் சரணடைந்து விடுதலை பெற வேண்டும். கர்த்தர் சிட்சித்தாலும் அரவணைப்பார். . ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago