தவறான தெரிந்தெடுப்பு என்பது வேரை அரித்துப்போடும் கரையான். பெற்றோர் அல்லது பக்தியுள்ள நண்பர் துணையோடு சரியான நபரை ஆண்டவர் உங்கள் வாழ்வில் நுழையச் செய்வாராக. ஆதாமுக்கு ஏற்ற துணையை கொடுத்த ஆண்டவர், எற்ற காலத்தில் உங்களுக்கும் ஏற்ற துணையை தருவார். தரும் வரை உறுதியுடன் காத்திருங்கள்.
அப்படி தேவன் தரும் துணையை விட்டு, சுயகட்டுப்பாடின்றி ஆண்டவரின் கட்டளைகளை மீறி, திருமண வரைமுறைகளைப் பின்னுக்குத் தள்ளி வாழ்வது அழிவுக்கு நேராய் கொண்டு போய் விடும். தேவபயத்தோடு உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
திருமண அழைப்பிதழுக்கான பைபிள் வசனத்தை தேடும் உங்களுக்கு, வேதாகமத்திலிருந்து வசனங்களை வரிசை படுத்தியுள்ளோம். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பை அமைய எங்கள் வாழ்த்துக்கள்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
Please find below a list of bible verses which can used in the Christian wedding invitations.
…மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்… – ஆதியாகமம் 2:18
…தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்… – மாற்கு 10:9
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;… – நீதிமொழிகள் 18:22
…அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்… – மத்தேயு 19:6
…என் ஆத்தும நேசரைக் கண்டேன்;… – உன்னதப்பாட்டு 3:4
ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. – பிரசங்கி 4:12
…அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். – 1 யோவான் 4:16
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்… – சங்கீதம் 126:3
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. – 1 நாளாகமம் 16:34
…நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். – 1 யோவான் 4:12
மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். – எபேசியர் 5:31
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;… – 1 தெசலோனிக்கேயர் 5:18
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…