எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படி ரேகாபியரை அழைத்து கர்த்தருடைய ஆலயத்திலே திராட்சரசம் குடிக்கச் சொன்னான். அதற்கு அவர்கள் “எங்கள் தகப்பன் எங்களிடம் நீங்களும், உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதைக்காமலும், திராட்சைத் தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும் இருங்கள் என்று கட்டளையிட்டார்.”என்றனர். அதன்படியே நாங்கள் இந்நாள்வரை எங்கள் தகப்பன் யோனதாபின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறோம். எங்களுக்குத் திராட்சைத் தோட்டமும், வயலும், விதைப்பாடும் இல்லை என்றனர். அதற்கு கர்த்தர் யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி “நான் உங்களுக்கு ஏற்கெனவே அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாமென்று சொல்லிக்கொண்டேயிருந்தும் எனக்குக் கீழ்ப்படியாமல் போனீர்கள்” என்றார். கர்த்தர் ரேகாபியருக்குக் காணப்படும் கீழ்ப்படிதல் யூதா ஜனத்துக்கு இல்லை என்று மனஸ்தாபப்பட்டார். ரேகாபியரின் கீழ்ப்படிதலைக் கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார் – எரே 35:1 – 19
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…