ஆதியாகமம்

யாக்கோபு தன் குமாரர்களை ஆசீர்வதித்தது

1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப் படுத்தினான்)

2. சிமியோனும், லேவியும்: “அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். அவர்கள் மற்றும் லேவி தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.” (சீகேமுக்கு எதிராக யுத்தம் செய்தார்கள்)

3. யூதா: “சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் சத்துருக்களுடைய பிடரியின் மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். செங்கோல் உன்னை விட்டு நீங்குவதில்லை. நியாயப்பிரமாணிக்கன் உன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் உன்னிடத்தில் சேருவார்கள்.”

4. செபுலோன்: “கடற்துரை அருகே குடியிருப்பான். அவன் கப்பல் துறைமுகமாயிருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.”

5. இசக்கார்: “இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.”

6. தாண்: குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பான்.”

7. காத்: ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும்; அவனோ முடிவில் அதின்மேல் பாய்ந்து விழுவான்.”

8. ஆசேர் ”ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.”

9. நப்தலி: “விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.”

10. யோசேப்பு: “கனிதரும் செடி; அவன் நீரூற்றண்டையில் உள்ள கனி தரும் செடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும். அவன் மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். கர்த்தர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்குமுரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.”

11. பென்யமீன்: “பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான்; மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” – ஆதி 49:1 – 27

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago