• இது வருங்கால நான்கு ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனமாகும். சிங்கம் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அதன் இறகுகள் பிடுங்கப்பட்ட நிலை நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது.
• ஒருபக்கமாய் சாய்ந்து நின்ற கரடி மேதிய, பெர்சிய ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அந்த ராஜ்ஜியத்தில் மேதியர்களைவிட பெர்சியர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தது. அம்மிருகத்தின் வாயிலிருந்த மூன்று விலா எலும்புகள் அவர்கள் பிடித்த பாபிலோன், லீதியா, எகிப்து ஆகிய நாடுகளைக் குறிக்கும்.
• நான்கு செட்டைகளையுடைய சிவிங்கி பெலமுள்ளதும், வேகமாக ஓடக் கூடியதுமாகும். இது மகாஅலெக்சாண்டரின் ராஜ்ஜியத்தையும் அவனது வெற்றிகளையும் குறிக்கிறது. அந்த நான்கு தலைகளும், அவன் மரித்தபின் அவனது சாம்ராஜ்ஜியத்திலிருந்து உருவான நான்கு ராஜ்ஜியங்களாகும்.
• இரும்புப் பற்களைக் கொண்ட பயங்கரமும், பலத்ததுமான நான்காம் மிருகம் ரோம சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இதற்கு பத்து கொம்புகள் இருந்தன. அவைகளுக்கிடையில் ஒரு சின்ன கொம்பு எழும்பிற்று. இந்த சிறிய கொம்பு உலகில் ஆளுபவனைக் குறிக்கிறது. அவனே அந்திகிறிஸ்து. அந்த ராஜ்ஜியத்தில் எழும்பும் பத்து ராஜாக்களில் மூவரை கீழே தள்ளி, தேவமக்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணி அவர்களை மேற்கொள்ளுவான். அவன் தேவனுக்கு விரோதமாக பேசுவான். நீண்ட ஆயுசுள்ளவர் அதாவது இயேசு வரும்போது பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள். அந்திகிறிஸ்து அழிக்கப்பட்டு எரிகிற அக்கினிக் கடலிலே போடப்படுவான் – தானி 7:1 – 28
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…