சகரியாவுக்கு தேவன் அழுக்கு வஸ்திரம் தரித்து தூதனுக்கு முன்பாக நின்ற யோசுவாவைக் காண்பித்தார். அவனுக்கு விரோதமாக சாத்தான் அவனுடைய வலது பக்கத்தில் நின்றான். யோசுவா பாவமென்னும் அழுக்கான உடை அணிந்திருந்ததால் சாத்தானை எதிர்க்க முடியவில்லை தேவன் யோசுவாவுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும், தலைப்பாகையையும் அணிவித்தார். இது முழுமையான ஆசாரிய ஊழியத்தைத் திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது. இஸ்ரவேலின் பாவம் கழுவப்பட கிளை எனப்பட்ட கிறிஸ்து தன்னையே பானபலியாக ஒப்புக்கொடுத்து, மரித்து உயிர்த்தெழுந்து சாத்தானைத் தோற்கடித்தார் – ஏசா 53:1 – 6 கர்த்தர் யோசுவாவிடம் அவரது வழிகளில் நடந்தால் ஆலயத்தில் யோசுவா நியாயம் விசாரித்து, ஆலயப்பிரகாரங்களின் காவலைக் காத்து, தூதர்கள் பணிவிடை செய்யும் பரலோக தேவனிடம் தடையின்றிச் செல்ல முடியும் என்றார். மேலும் யோசுவாவுக்கு முன் வைத்த கல்லையும் அந்தக் கல்லின் மேல்வைத்திருந்த ஏழு கண்களையும் சகரியாவுக்குக் காண்பித்தார். அந்தக் கல் மேசியாவையும், ஏழு கண்கள் உள்ளறிவின் முழுமையையும், எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும் தெய்வீக அறிவையும் குறிக்கின்றன. சிலுவையிலே பாவத்துக்கான பரிகாரத்தை இயேசு நிறைவேற்றும் போது ஒரே நாளில் பாவத்தை அகற்றுவார் – சக 3:1 – 10
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…